ரூ.67.90 லட்சம் விலையில் அறிமுகமானது ஃபேஸ்லிப்டட் Land Rover Range Rover Evoque கார்
published on ஜனவரி 30, 2024 06:01 pm by rohit for land rover range rover evoque
- 69 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிஃப்ட் மூலம், என்ட்ரி லெவல் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி ரூ. 5 லட்சத்துக்கும் மேல் விலை குறைந்துள்ளது.
-
லேண்ட் ரோவர் 2023 ஆம் ஆண்டின் மத்தியில் அப்டேட்டட் ரேஞ்ச் ரோவர் எவோக்கை உலகளவில் அறிமுகப்படுத்தியது.
-
ஸ்லீக்கர் மற்றும் அப்டேட்டட் லைட்ஸ் மற்றும் புதிய அலாய் வீல் வடிவமைப்பு ஆகியவற்றை வெளியில் பார்க்க முடிகின்றது
-
உட்புறத்திலும் நிறைய மாற்றப்பட்டுள்ளன, புதிய சென்டர் கன்சோல் மற்றும் புதிய அப்ஹோல்ஸ்டரி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
இப்போது ஒரு பெரிய 11.4-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஸ்டாண்டர்டாக கிடைக்கின்றது.
-
முன்பு இருந்த அதே 2-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் தொடர்கிறது.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் 2023 ஆம் ஆண்டு மத்தியில் உலகளவில் வெளியிடப்பட்ட பின்னர் இறுதியாக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது நுட்பமான வடிவமைப்பு அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளன, புதிய டெக்னாலஜி வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இப்போது மேம்படுத்தப்பட்ட மைல்டு ஹைபிரிட் பவர்டிரெய்ன்களை கொண்டுள்ளது. இந்தியாவில், லேண்ட் ரோவர் ஒரே ஒரு டைனமிக் SE வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.
வேரியன்ட் வாரியான விலை
வேரியன்ட் |
விலை |
டைனமிக் SE பெட்ரோல் |
ரூ.67.90 லட்சம் |
டைனமிக் SE டீசல் |
ரூ.67.90 லட்சம் |
இப்போதுள்ள மாடலுடன் ஒப்பிடும்போது, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் எவோக் ரூ. 5 லட்சத்திற்கு மேல் விலை குறைந்துள்ளது.
வெளியில் என்ன மாறியுள்ளது ?
ஃபேஸ்லிஃப்ட்டுடன், எஸ்யூவி -யானது லேண்ட் ரோவரின் சமீபத்திய சிக்னேச்சர் கிரில் மற்றும் புதிய 4-பிஸ் எலமென்ட் மற்றும் LED DRL கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்ட நேர்த்தியான ஹெட்லைட்கள் போன்ற சில அப்டேட்களை பெற்றுள்ளது.
பக்கவாட்டில், புதிய அலாய் வீல் டிசைன் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன, அதே சமயம் பின்புறத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட LED டெயில்லைட் அமைப்பு கொடுக்கப்பட்டிருப்பது கூர்ந்து கவனித்தால் தெரியும். ரேஞ்ச் ரோவர் எவோக் இப்போது இரண்டு புதிய வண்ணங்களில் வருகிறது: டிரிபெகா புளூ மற்றும் கொரிந்தியன் ப்ரோன்ஸ். லேண்ட் ரோவர் இன்னும் எஸ்யூவி -க்கு டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களை வழங்குகிறது, ரூஃப் நார்விக் பிளாக் மற்றும் கொரிந்தியன் ஃபுரோன்ஸ் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
இதையும் பார்க்கவும்: புதிய ஆல்-எலக்ட்ரிக் போர்ஸ் மக்கான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்
கேபின் அப்டேட் செய்யப்பட்டுள்ளது மேலும் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன
2024 லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் -கிற்கான குறிப்பிடத்தக்க மாற்றங்களை கேபினில் பார்க்கலாம். இது இப்போது சென்டர் கன்சோலுக்கான ட்வீக் செய்யப்பட்ட வடிவமைப்பு, புதிதாக வடிவமைக்கப்பட்ட டிரைவ் செலக்டர் மற்றும் கேபினை சுற்றிலும் அப்டேட்டட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டிரிம் பிட்களை பெறுகிறது.
புதிய அம்சங்களைப் பொறுத்தவரை, எஸ்யூவி -யானது இப்போது கர்வ்டு 11.4-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் (ஸ்டாண்டர்டாக) மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏர் ஃபியூரிபையர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. போர்டில் உள்ள மற்ற உபகரணங்களில் பனோரமிக் சன்ரூஃப், கனெக்டட் கார் டெக்னாலஜி, 14-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். புதிய லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் -ன் பாதுகாப்பு கிட்டில் 3D 360 டிகிரி கேமரா, "டிரான்ஸ்பரன்ட் பானட்" வியூ மற்றும் பல ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பவர்டிரெயின்கள்
விவரங்கள் |
2 லிட்டர் பெட்ரோல் |
2 லிட்டர் டீசல் |
பவர் |
249 PS |
204 PS |
டார்க் |
365 Nm |
430 Nm |
டிரான்ஸ்மிஷன் |
9-ஸ்பீடு AT |
9-ஸ்பீடு AT |
லேண்ட் ரோவர் இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை சிறிய சொகுசு எஸ்யூவி -யுடன் கொடுக்கின்றது. மைலேஜை மேம்படுத்த லேண்ட் ரோவர் நிறுவனம் இரண்டு இன்ஜின்களையும் 48V மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் இணைத்துள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவர் எவோக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தையும் பெறுகிறது. பல டிரைவிங் மோட்களும் உள்ளன: இகோ, கம்ஃபோர்ட், கிராஸ்-கிராவல்-ஸ்நோ, மட்-ரட்ஸ், சாண்ட், டைனமிக் மற்றும் ஆட்டோமெட்டிக்.
போட்டியாளர்கள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் காரின் விலை மெர்சிடிஸ்-பென்ஸ் GLC, ஆடி Q5, மற்றும் BMW X3 ஆகியற்றுக்கு நிகராக உள்ளது.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான் -இந்தியா) -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக் ஆட்டோமெட்டிக்