சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 Hyundai Creta நாளை இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது

ஹூண்டாய் கிரெட்டா க்காக ஜனவரி 16, 2024 11:25 am அன்று rohit ஆல் திருத்தம் செய்யப்பட்டது

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த எஸ்யூவி -யானது சந்தையில் பிரபலமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஏற்கெனவே பல வசதிகள் இருக்கும் போது இப்போது மேலும் கூடுதலான வசதிகளையும் புதிய வடிவமைப்பையும் பெற்றுள்ளது.

  • இரண்டாம் தலைமுறை மாடல் 2020 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் முதல் அப்டேட்டை பெறவுள்ளது.

  • எஸ்யூவி-க்கான முன்பதிவு ரூ.25,000 -க்கு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.

  • புதிய வடிவிலான கிரில் மற்றும் கனெக்டட் லைட்டிங் செட்டப் ஆகியவற்றை வெளியில் உள்ள மாற்றங்களாக பார்க்க முடிகின்றது.

  • புதிய டாஷ்போர்டு மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை கேபினில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்.

  • 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

  • வெர்னாவின் புதிய 1.5 லிட்டர் டர்போ யூனிட் உட்பட மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும்.

  • விலை ரூ.11 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் கிரெட்டா நாளை விற்பனைக்கு வர உள்ளது. ஹூண்டாய் ஏற்கனவே இந்த காரை பற்றிய அனைத்து விவரங்களையும் வெளியிட்டுள்ளது. புதிய எஸ்யூவி -க்கான முன்பதிவு ஆன்லைனில் மற்றும் ஹூண்டாய் பான்-இந்தியா டீலர்ஷிப்களில் ரூ.25,000க்கு தொடங்கியுள்ளன.

மிட்லைஃப் அப்டேட் உடன் இந்த காரில் மாற்றப்பட்ட விஷயங்களை பற்றிய பற்றி ஒரு விரைவான கண்ணோட்டம் இங்கே:

அப்டேட் செய்யப்பட்டுள்ள வெளிப்புறம்

2024 ஹூண்டாய் கிரெட்டா பல ஸ்பை ஷாட்களில் பார்த்ததை போலவே வலுவான மற்றும் முன்பை விட கூடுதலான சிறப்பான தோற்றம் கொண்ட வெளிப்புறத்தை பெறுகிறது. குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளில், புதிய வடிவ கிரில்லுடன் கூடிய முன்பக்கம், பானட்டின் அகலம் முழுமைக்கும் கொடுக்ப்பட்டுள்ள நீண்ட LED DRL ஸ்ட்ரிப் மற்றும் ஹெட்லைட்டுகளுக்கான புதிய ஸ்குவாரிஷ் ஹவுஸிங் ஆகியவற்றை பார்க்க முடிகின்றது. கீழ் பகுதியில் இப்போது சில்வர் கலரில் பெரிய ஸ்கிட் பிளேட் உள்ளது.

எஸ்யூவி -யின் பக்காவாட்டு தோற்றத்தில் மாற்றம் எதுவும் பெரிதாக இல்லை. ஒரே வித்தியாசம் என்னவென்றால், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா, முன்புறத்தில் காணப்படும் இன்வெர்டட் L வடிவ வடிவமைப்பை பிரதிபலிக்கும் கனெக்டட் LED டெயில் லைட்களுடன் வருகிறது. பம்பரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இப்போது கரடுமுரடான தோற்றத்திற்காக ஒரு பெரிய சில்வர் ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேபினுக்கு ஒரு புதிய தோற்றம்

2024 கிரெட்டாவின் உட்புறம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்போது புதிதாக டூயல் இன்டெகிரேட்டட் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காக) கொடுக்கப்பட்டுள்ளன. டாஷ்போர்டின் மேல் பகுதியின் பயணிகள் பக்கத்தில் இப்போது பியானோ பிளாக் பேனல் உள்ளது, அதன் கீழே ஆம்பியன்ட் லைட்களுடன் ஓபன் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் இதன் உடன்பிறப்பான கியா செல்டோஸ் போலவே டச் பேஸ்டு கன்ட்ரோல்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இந்த ஜனவரியில் சில ஹூண்டாய் கார்களில் ரூ. 3 லட்சம் வரை சேமிக்கவும்

போர்டில் உள்ள அம்சங்கள்

மிட்லைஃப் அப்டேட் மூலமாக இந்த கிரெட்டா -வில் டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஏசி, 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 8-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகிய வசதிகள் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

ஹூண்டாய் 2024 கிரெட்டாவை மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கும்:

  • 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் (115 PS/ 144 Nm): 6-ஸ்பீடு MT, CVT

  • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் (160 PS/ 253 Nm): 7-ஸ்பீடு DCT

  • 1.5-லிட்டர் டீசல் (116 PS/ 250 Nm): 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

இதையும் பார்க்கவும்: ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் வேரியன்ட்கள் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஃபேஸ்லிஃப்டட் ஹூண்டாய் கிரெட்டாவின் ஆரம்ப விலை ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்,ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Hyundai கிரெட்டா

M
m sudhir
Jan 15, 2024, 12:39:31 PM

Excellent all the best. But it's high time Hyundai has to come out with Hybrid tec cars. I am surprised why its still not happening. I am eagerly waiting for hybrid CRETA from Hyundai.

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை