சியஸ் SHVS-க்கு எதிராக ரிவல்ஸ்: ஒரு போட்டி சோதனை
மாருதி சியஸ் க்கு published on sep 03, 2015 04:05 pm by அபிஜித்
- 10 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
மாருதி நிறுவனம், தனது புதிய தயாரிப்பான சியஸ் SHVS-யை (ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக்கிள் பை சுசுகி) அறிமுகம் செய்துள்ள நிலையில், ஹைபிரிட் தொழில்நுட்பம் மூலம் அதிக மைலேஜ் கிடைப்பதாக, இந்த காரை குறித்து கருத்து தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே லிட்டருக்கு 26.21 கி.மீ மைலேஜ் அளிக்கும் ஒரு காருக்கு, இன்னும் அதிக மைலேஜ் தேவையா? என்ற கேள்வி எழுகிறது. கண்டிப்பாக வேண்டும்! ஆனால் இந்த மைல்டு ஹைபிரிட் காரை அறிமுகம் செய்துள்ள மாருதி நிறுவனம், அதன் மைலேஜ் அளவை லிட்டருக்கு வெறும் 1.88 கி.மீ மட்டுமே உயர்த்தி உள்ளது. அதே நேரத்தில் விலை மற்றும் சர்வீஸை குறித்த எந்த மறுயோசனையும் இல்லாமல் மக்கள் வாங்கும் ஹைபிரிட் வாகனத்தை அளிக்கும் முதல் வாகன தயாரிப்பாளர் என்ற நிலையை மாருதி நிறுவனம் எட்டியுள்ளது. ஏனெனில் இது மாருதி அல்லவா. இந்த காரின் பிரிவில் தலைமை வகிக்கும் ஹோண்டா சிட்டி மற்றும் ஹூண்டாய் வெர்னா, வோல்ஸ்வேகன் வென்டோ, ஸ்கோடா ரேபிட், ஃபோர்ட் ஃபிஸ்டா, ஃபியட் லீனியா ஆகிய மற்ற வாகனங்களுடன் இந்த காரை ஒப்பிட்டு பார்ப்போம்.
உட்புற அமைப்புகள்
அடிப்படையில் மாருதி நிறுவனம், புதிய சியஸ் காரின் டீசல் வகையில் மட்டுமே மாற்றம் செய்துள்ளது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய காரியம் ஆகும். உட்புறத்தை பொறுத்த வரை, முன்பு போலவே நீளமான வீல்பேஸ், கால் வைக்க போதுமான இடத்துடன் கூடிய அதிக விஸ்தாரமான கேபின், 5 பயணிகள் கொள்ளக் கூடிய ஹெட்ரூம் ஆகியவற்றை கொண்டுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களாக, இதில் காணப்படும் ஸ்மார்ட்ப்ளே டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு, பயன்படுத்துவோரிடம் வரவேற்பு மற்றும் சந்தையில் மேம்பட்டதாகவும் தெரிகிறது. இந்த பிரிவை சேர்ந்த மற்ற கார்களில் உள்ளது போலவே, லேதரால் சுற்றப்பட்ட டாப் ட்ரிம் காணப்படுகிறது. மற்றபடி தரமான இரட்டை ஏர்பேக்குகள், V(O) ட்ரிம் மேலாக ABS மற்றும் EBD ஆகியவற்றை உட்கொண்டுள்ளது.
வெளிப்புற அமைப்புகள்
டெக்லிட்டில் காணப்படும் SHVS பேட்ஜ் தவிர, பொதுவாக வெளிப்புற அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு நேர்த்தியான நிலைப்பாட்டை கொண்டுள்ள இந்த கார், நீளமான பாடி அமைப்பின் மூலம் சாலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்சியளிக்கிறது. மற்றொருபுறம், சிட்டி அல்லது வெர்னா-வை போன்ற ஸ்போர்ட்டி அமைப்பு இதற்கு இல்லாதது குறையே.
அடித்தளம் (அண்டர்பின்னிங்)
SHVS-யில் ஒரு இன்டிகிரேட்டேட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் (ISG) உடன் 1.3 லிட்டர் DDiS200 என்ஜின் இணைந்து செயலாற்றுகிறது. இந்த ISG, பேட்டரி சார்ஜ் செய்வது, என்ஜினில் முடுக்கம் ஏற்படும் போது உதவுவது மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட் / ஸ்டாப் இயக்கத்தில் ஈடுபடுவது போன்ற மூன்று முக்கிய பணிகளை செய்கிறது. இந்த அமைப்பின் மூலம் நீண்டதூர நிறுத்த நிலையில் (ப்ராக்கிங் கண்டிஷன்) பேட்டரியை சார்ஜ் செய்யும் ரிஜெனரேட்டிவ் ப்ராக்கிங் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது. மேற்கூறிய விஷயங்களை வைத்து பார்க்கும் போது, போட்டியில் உள்ள மாருதியில் இருப்பது போன்ற ஹைபிரிட் அமைப்பை, வேறு எதிலும் காண முடியாது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
- Renew Maruti Ciaz Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful