Mahindra Thar Roxx: கேலரி மூலமாக விரிவாக இங்கே பார்க்கலாம்
published on ஆகஸ்ட் 14, 2024 10:57 pm by ansh for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 82 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய 6-ஸ்லாட் கிரில், பிரீமியம் தோற்றம் கொண்ட கேபின், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பல நவீன வசதிகளுடன் தார் ரோக்ஸ் வருகிறது
5-டோர் மஹிந்திரா தார் ராக்ஸ் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 12.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்). தார் 3-டோர் பதிப்போடு ஒப்பிடும்போது இந்த கார் வித்தியாசமான தோற்றம், இரண்டு கூடுதல் டோர்கள், ஒரு வொயிட் கேபின் மற்றும் பல புதிய வசதிகளை பெறுகிறது. மேலும் இது அதிக சக்திவாய்ந்த பவர்டிரெயின்களுடன் வருகிறது. தார் ரோக்ஸை நேரில் பார்க்கும் முன்னர் இங்கே விரிவான கேலரியில் நீங்கள் அதை பார்க்கலாம்.
வெளிப்புறம்
முன்புறத்தில் தார் ரோக்ஸ் புதிய 6-ஸ்லாட் கிரில் பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது C-வடிவ DRL -களுடன் மற்றும் வட்ட LED ஹெட்லேம்ப்கள் உள்ளன.
பம்பர், ஃபாக் லைட்ஸ் மற்றும் இண்டிகேட்டர்களும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வீல் ஆர்ச்கள் 3-டோர் பதிப்பைப் போலவே உள்ளன.
பக்கவாட்டில் தாரின் நீட்டிக்கப்பட்ட நீளத்தை பற்றிய பார்வை உங்களுக்கு கிடைக்கும். மேலும் இரண்டு கூடுதல் டோர்கள், சி-பில்லரில் கொடுக்கப்பட்டுள்ள வெர்டிகலான பின்புற டோர் ஹேண்டில்கள் மற்றும் ஒரு மெட்டல் ஸ்டெப் ஆகியவற்றை நீங்கள் பார்க்க முடியும்.
இந்த காரில் 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பின்புறத்தில் சி-வடிவ இன்செர்ட்களுடன் கூடிய LED டெயில் லைட்ஸ், மற்றும் ஒரு பெரிய பம்பர் உள்ளது. ஸ்பேர் வீல் டெயில்கேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்ட்டீரியர்
இது டூயல்-டோன் பிளாக் மற்றும் டேஷ்போர்டை லெதரெட் பேடிங் மற்றும் காப்பர் ஸ்டிச் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டில் வட்ட வடிவ ஏசி வென்ட்கள், 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன.
முன் இருக்கைகள் வொயிட் கலர் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியைப் பெறுகின்றன. மேலும் அவை வென்டிலேஷன் ஃபங்ஷனுடன் வருகின்றன. இந்த இருக்கைகளின் பின்புறத்தில் "தார்" என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
பின்புற இருக்கைகளும் வொயிட் கலர் அப்ஹோல்ஸ்டரியுடன் முன் சீட்களை போலவே உள்ளன, மேலும் கப்ஹோல்டர்களுடன் கூடிய மைய ஆர்ம்ரெஸ்ட் இங்கே உள்ளது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்களை தவிர தார் ரோக்ஸ் பின்புற ஏசி வென்ட்கள், ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜரோடு ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதியையும் கொண்டுள்ளது.
மஹிந்திரா தார் ரோக்ஸின் ஹையர் டிரிம்களை பனோரமிக் சன்ரூஃப் உடன் வழங்குகிறது. அதே நேரத்தில் லோவர்-ஸ்பெக் வேரியன்ட்கள் சிங்கிள் -பேன் யூனிட்ட உடன் வருகின்றன.
பாதுகாப்பைப் பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் மஹிந்திரா தார் ரோக்ஸில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்ற லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) வசதிகளையும் வழங்குகிறது.
பவர்டிரெய்ன்
மஹிந்திரா தார் ரோக்ஸில் இரண்டு இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது: 2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (161 PS மற்றும் 330 Nm), மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் (152 PS மற்றும் 330 Nm).
இந்த இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகின்றன.
3-டோர் பதிப்பை போலவே தார் ரோக்ஸ் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் 4-வீல்-டிரைவ் செட்டப்களுடன் வருகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
5-டோர் மஹிந்திரா தார் ராக்ஸ்ஸின் விலைரூ. 12.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக, எக்ஸ்-ஷோரூம்), மற்றும் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இது 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா -வுக்கு ஒரு நேரடி போட்டியாளராக இருக்கும், மேலும் மாருதி ஜிம்னி -க்கு ஒரு பெரிய மற்றும் பிரீமியமான மாற்றாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: தார் ரோக்ஸ் ஆன்ரோடு விலை