• English
  • Login / Register

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் BYD Sealion 7 அறிமுகமாகவுள்ளது

பிஒய்டி sealion 7 க்காக ஜனவரி 06, 2025 11:13 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 65 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில் சீலையன் 7 EV ஆனது BYD -ன் நான்காவது காராக இருக்கும். 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் விலை விவரங்கள் அறிவிக்கப்படும்

  • இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் சீலையன் EV வெளியிடப்படும்.

  • வெளிப்புற வடிவமைப்பு இது BYD சீல் காரை நினைவூட்டும் வகையில் உள்ளது. அதேபோன்ற ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்டுகளுடன் வருகிறது

  • 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 10.25-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன.

  • பனோரமிக் கிளாஸ் கூரை, ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகளுடன் இது வரலாம்.

  • பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், ADAS, TPMS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்படலாம்.

  • சர்வதேச அளவில் RWD மற்றும் AWD அமைப்புகளுடன் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது.

  • விலை ரூ.45 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் ஷோவான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் நிறைய கார் தயாரிப்பாளர்கள் புதிய கார்களை காட்சிக்கு வைக்கவும், புதிய மாடல்களை அறிவிக்கவும் தயாராகி வருகின்றனர். அந்த வரிசையில் BYD சீலையன் 7 EV 2025 ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெறும் என்பதை பிஒய்டி நிறுவனம் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். சீலையன் 7 EV ஆனது சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ளது.

BYD சீலையன் 7: வெளிப்புறம்

BYD Sealion 7

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் BYD சீலையன் 7 ஆனது 2024 மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட BYD சீலை போன்ற வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது சீல் EV போன்ற அதே ஹெட்லைட் யூனிட்கள், ஒரு பிளாங்க்-ஆஃப் கிரில் மற்றும் பிளாக்-அவுட் ரியர் பம்பர் ஆகியவற்றைப் பெறலாம். இது 20-இன்ச் அலாய் வீல்கள், ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் காரின் நீளம் முழுவதும் உள்ள வீல் ஆர்ச்கள் மற்றும் மேலும் ஒரு மிரட்டலான பிளாக் கிளாடிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

BYD Sealion 7

குறுகலான கூரை காருக்கு ஒரு எஸ்யூவி-கூபே தோற்றத்தை அளிக்கிறது. இது பிக்ஸல் வடிவமைப்பு எலமென்ட்களுடன் சீல் EV போன்ற கனெக்டட் LED டெயில் லைட்களை பெறும். இந்த எஸ்யூவியின் மிரட்டலன தன்மையை முழுமையாக்கும் பிளாக் பகுதியை கொண்ட பின்புற பம்பர் உடன் வரும்.

சீலையன் EV -ன் அளவுளின் விவரங்கள் இங்கே:

விவரங்கள்

அளவுகள்

நீளம்

4,830 மி.மீ

அகலம்

1,925 மி.மீ

உயரம்

1,620 மி.மீ

வீல்பேஸ்

2,930 மி.மீ

பூட் ஸ்பேஸ்

520 லிட்டர்

BYD சீலையன் 7: இன்ட்டீரியர்

BYD Sealion 7

BYD சீலையன் 7 காரின் உட்புறம் பிரீமியம் மற்றும் பல பொருட்களால் ஆனது. இது சுழற்றக்கூடிய 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் உடன் வருகிறது மற்றும் ஒரு ஏசி வென்ட்டிலிருந்து மற்றொன்றுக்கு பவர்டு புதிய பளபளப்பான பிளாக் பேனலை பெறுகிறது மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.. 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆடியோ சிஸ்டம் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கன்ட்ரோல்களுடன் வருகிறது, சென்டர் கன்சோல், சீல் காரை போலவே உள்ளது. டிரைவ் செலக்டர் நாப், டிரைவ் மற்றும் டெரெய்ன் மோடுகளுக்கான பட்டன்கள், இரண்டு கப்ஹோல்டர்கள் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவையும் உள்ளன. 

BYD Sealion 7

சீட்கள் வொயிட் நிற லெதரெட் அப்ஹோல்ஸ்டரியில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள் மற்றும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்களுடன் வருகின்றன. பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி வென்ட்கள் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவையும் உள்ளன.

பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஒரு சூடான ஸ்டீயரிங், ஹீட்டட், வென்டிலேஷன் மற்றும் பவர்-அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள் (சரிசெய்யக்கூடிய லும்பார் சப்போர்ட் உடன்) டூயல் ஜோன் ஆட்டோ ஏசி, வெஹிகிள் டூ லோடிங் (V2L) ஆம்பியன்ட் லைட்ஸ், ஹெட்-அப் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். (HUD) மற்றும் 12-ஸ்பீக்கர் டைனா ஆடியோ சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இந்தியா-ஸ்பெக் மாடலுடன் நிறைய (அனைத்தும் இல்லை என்றாலும் கூட) வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்புக்காக இது 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வரலாம். அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற சில ADAS வசதிகளுடன் இது வரலாம்.

மேலும் படிக்க: பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ள EV -கள்

BYD சீலையன் 7: பேட்டரி பேக் மற்றும் செயல்திறன்

சர்வதேச-ஸ்பெக் சீலையன் EV ஆனது 82.5 kWh அல்லது 91.3 kWh பேட்டரி பேக் விருப்பத்துடன் வருகிறது. இது ஒரே ஒரு அல்லது டூயல் மோட்டார் செட்டப் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:

பேட்டரி பேக்

82.5 kWh

91.3 kWh

எலக்ட்ரிக் மோட்டார்கள் எண்ணிக்கை

1

2

2

டிரைவ்டிரெய்ன்

RWD

AWD

AWD

பவர்

313 PS

530 PS

530 PS

டார்க்

380 Nm

690 Nm

690 Nm

WLTP- கிளைம்டு ரேஞ்ச்

482 கி.மீ

456 கி.மீ

502 கி.மீ

இந்தியா-ஸ்பெக் மாடலின் பவர்டிரெய்ன் விவரங்கள் பாரத் மொபிலிட்டி ஆட்டோ ஷோ 2025 நிகழ்வில் வெளியிடப்படும். சர்வதேச-ஸ்பெக் காரின் அனைத்து பவர்டிரெய்ன் ஆப்ஷன்களையும் சீல் பெறுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்தியாவில் அதையே எதிர்பார்க்கலாம். 

BYD சீலையன் 7: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் ரேஞ்ச்

BYD Sealion 7

BYD சீலையன் விலை விவரங்கள் ரூ. 45 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் ஹூண்டாய் அயோனிக் 5, கியா EV6 மற்றும் வால்வோ EX40 போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on BYD sealion 7

1 கருத்தை
1
A
a s kumar
Jan 7, 2025, 8:14:01 AM

What's the Road clearance?

Read More...
    பதில்
    Write a Reply

    explore மேலும் on பிஒய்டி sealion 7

    space Image

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    • பிஒய்டி sealion 7
      பிஒய்டி sealion 7
      Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • மஹிந்திரா xev 4e
      மஹிந்திரா xev 4e
      Rs.13 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • ஆடி க்யூ6 இ-ட்ரான்
      ஆடி க்யூ6 இ-ட்ரான்
      Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • புதிய வேரியன்ட்
      மஹிந்திரா xev 9e
      மஹிந்திரா xev 9e
      Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • மாருதி e vitara
      மாருதி e vitara
      Rs.17 - 22.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience