BYD Seal எலக்ட்ரிக் செடான் இன்றுவரை 200 முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்துள்ளது
மூன்று முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கும் சீல் எலெக்ட்ரிக் செடான் 650 கிமீ தூரம் வரை ரேஞ்சை கொண்டுள்ளது.
-
BYD சீல் எலக்ட்ரிக் செடானை மூன்று தனித்துவமான வேரியன்ட்களில் வழங்குகிறது: டைனமிக் ரேஞ்ச் பிரீமியம் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மன்ஸ்.
-
இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது - 61.44 kWh மற்றும் 82.56 kWh.
-
சீல் எலக்ட்ரிக் செடான் ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் வழங்குகிறது.
-
இது 15.6-இன்ச் சுழலும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவருக்கான டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் ஃப்ரண்ட் சீட்கள் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
-
சீல் எலக்ட்ரிக் செடான் 9 ஏர்பேக்குகள் 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றுடன் வருகிறது.
BYD சீல், e6 MPV மற்றும் அட்டோ 3 எஸ்யூவியை தொடர்ந்து இந்தியாவில் BYD நிறுவனத்தின் மூன்றாவது காராக விற்பனைக்கு வந்துள்ளது. பிப்ரவரி 2024 இறுதியில் முன்பதிவு தொடங்கியதில் இருந்து இந்த பிரீமியம் எலக்ட்ரிக் செடான் ஏற்கனவே 200 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக BYD நிறுவனம் அறிவித்துள்ளது.
BYD இந்தியாவின் எலக்ட்ரிக் பயணிகள் வாகன வணிகத்தின் மூத்த துணைத் தலைவர் திரு. சஞ்சய் கோபாலகிருஷ்ணன் இந்திய வாடிக்கையாளர்களின் அதிரடியான ரெஸ்பான்ஸை பற்றி கருத்துத் தெரிவிக்கையில்: "இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த நம்பமுடியாத வரவேற்பால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இது இந்தியாவில் ஆடம்பரமான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வளர்ந்து வரும் ஆர்வத்தை நிரூபிக்கிறது. BYD சீல் காரில் உள்ள எங்களின் புதுமையான மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் எலக்ட்ரிக் இயக்கத்திற்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற டிரைவிங் அனுபவத்தை வழங்குவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களின் MPV எஸ்யூவி மற்றும் செடான் ரேஞ்சில் இன்று நாங்கள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள எங்களின் போர்ட்ஃபோலியோவிற்கான முழுமையான அணுகலை பெறுவார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
BYD சீல் பற்றிய கூடுதல் விவரங்கள்
BYD சீல் மூன்று தனித்துவமான பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது ஒவ்வொன்றும் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி தனித்துவமான ஸ்பெசிஃபிகேஷன்களை வழங்குகிறது:
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மேலும் படிக்க: BYD Seal மற்றும் Hyundai Ioniq 5 Kia EV6 Volvo XC40 Recharge மற்றும் BMW i4: விவரங்கள் ஒப்பீடு
சார்ஜிங் ஆப்ஷன்கள்
கீழே குறிப்பிட்டுள்ளபடி மூன்று சார்ஜிங் ஆப்ஷன்களைப் பயன்படுத்தி BYD சீலை சார்ஜ் செய்யலாம்:
|
|
|
|
Battery Pack |
61.44 kWh |
82.56 kWh |
82.56 kWh |
|
✅ |
✅ |
✅ |
|
✅ |
❌ |
❌ |
|
❌ |
✅ |
✅ |
வசதிகள் பாதுகாப்பு
BYD சீல் ஆனது ரொட்டேட்டிங் 15.6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் ஃப்ரண்ட் சீட்கள் உள்ளிட்ட ஆடம்பரமான வசதிகளுடன் வருகிறது. கூடுதலாக இது மெமரி ஃபங்ஷன் கொண்ட 8-வே பவர்டு டிரைவரின் சீட், ஒரு டைனாடியோ சவுண்ட் 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், டூயல்- ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
BYD சீல் 9 ஏர்பேக்குகள் 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) உள்ளிட்ட விரிவான வசதிகளுடன் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த ADAS வசதிகள் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவற்றை உள்ளடக்கியது.
விலை போட்டியாளர்கள்
BYD சீல் காரின் விலை ரூ. 41 லட்சம் முதல் ரூ.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) வரை உள்ளது. இது ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் கியா EV6 க்கு எதிராக போட்டியிடுகின்றது . கூடுதலாக வோல்வோ XC40 ரீசார்ஜ் மற்றும் BMW i4 போன்ற பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி -களுக்கு இது ஒரு மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: சீல் ஆட்டோமேட்டிக்