BMW 3 Series Gran Limousine புதிய புரோ எடிஷன் வெளியிடப்பட்டது.
modified on செப் 05, 2024 08:32 pm by shreyash for பிஎன்டபில்யூ 3 சீரிஸ்
- 88 Views
- ஒரு கருத்தை எழுதுக
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் டீசல் 193 PS பவர் அவுட்புட்டை கொடுக்கும் 2-லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 7.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக உள்ளது.
-
செடானின் டீசல் மாடலின் விலை அதன் பெட்ரோலை விட ரூ.2.4 லட்சம் அதிகம் ஆகும் .
-
டீசல் வெர்ஷன் ஆனது இது 193 PS மற்றும் 400 Nm அவுட்புட்டை கொடுக்கிறது மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷனின் டீசல் பதிப்பின் வடிவமைப்பில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
-
கர்வ்டு ஸ்கிரீன்கள் ஸ்கிரீன்கள், 3-ஜோன் ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இந்த காரில் உள்ளன.
-
6 ஏர்பேக்குகள், பார்க் அசிஸ்ட் மற்றும் லெவல் 2 ADAS போன்றவை பாதுகாப்புக்காக உள்ளன.
-
3 சீரிஸ் கிரான் லிமோசின் விலை ரூ.60.60 லட்சம் முதல் ரூ.65 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மே மாதம் 'எம் ஸ்போர்ட் ப்ரோ' பதிப்பு என்று அழைக்கப்பட்ட BMW 3 சீரிஸ் கிரான் லிமோசின் செடானின் ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட் அறிமுகமானது. இது முன்னர் 3 சீரிஸ் கிரான் லிமோசினின் இந்த புதிய டிரிம் பெட்ரோல் வேரியன்ட்டிற்கு மட்டுமே கிடைத்து வந்தது, ஆனால் பிஎம்டபிள்யூ நிறுவனம் இப்போது டீசல் வெர்ஷன் செடானின் M ஸ்போர்ட் ப்ரோ பதிப்பு வேரியன்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் முன்னர் செடானின் இந்த ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட்டின் விலை விவரங்களை பார்ப்போம்.
விலை
எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் பெட்ரோல் |
ரூ.62.60 லட்சம் |
எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் டீசல் |
ரூ.65 லட்சம் |
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
டீசல் வெர்ஷன் 3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் வேரியன்ட் அதன் பெட்ரோல் வெர்ஷனை விட ரூ.2.4 லட்சம் விலை அதிகமாக உள்ளது.
இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் கிடைக்கிறது
விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
2-லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் |
பவர் |
258 PS |
193 PS |
டார்க் |
400 Nm |
400 Nm |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு AT |
8-ஸ்பீடு AT |
ஆக்சிலரேஷன் 0-100 kmph |
6.2 வினாடிகள் |
7.6 வினாடிகள் |
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ பதிப்பு வேரியன்ட்டுடன் வழங்கப்பட்ட பெட்ரோல் இன்ஜின் டீசலை விட 65 PS அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் இரு இன்ஜின்களிலும் ஒரே மாதிரியான டார்க் அவுட்புட் உள்ளது. இருப்பினும் பெட்ரோல் இன்ஜின் டீசல் எடிஷனை விட 0-100 கி.மீ வேகத்தில் 1.4 வினாடிகள் வேகமானது கூடுதல் பவர் கிடைப்பதன் காரணமாக.
மேலும் பார்க்க: அறிமுகமானது மெர்சிடிஸ்-Maybach EQS 680 எலக்ட்ரிக் எஸ்யூவி
உள்ளேயும் வெளியேயும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷனின் டீசல் வேரியன்ட் வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பிளாக்-அவுட் கிரில், எம் ஷேடோலைன் விளைவுடன் கூடிய அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்கள், ஹெட்லைட்களில் டார்க் டின்ட் மற்றும் க்ளாஸ் பிளாக் ரியர் டிஃப்பியூசர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
செடானின் எம் ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் வேரியன்ட் பிளாக் நிற ஹெட்லைனர் உடன் வந்தாலும் கூட உள்ளேயும் இது வழக்கமான வேரியன்ட்களை போலவே தெரிகிறது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
3 சீரிஸ் கிரான் லிமோசின் எம் ஸ்போர்ட் ப்ரோ பதிப்பு இன்டெகிரேட்டட் கர்வ்டு டிஸ்ப்ளேக்கள் (12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 14.9-இன்ச் டச்ஸ்கிரீன்), 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், 3-ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் உடன் வருகிறது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (DSC), பார்க் அசிஸ்ட், மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -ல் டிரைவர் அட்டென்டிவ்நெஸ் அலெர்ட் மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட் ஆகியவை உள்ளன.
விலை & போட்டியாளர்கள்
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் விலை ரூ.60.60 லட்சம் முதல் ரூ.65 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது. இந்தியாவில் இது மெர்சிடிஸ்-பென்ஸ் C கிளாஸ் மற்றும் ஆடி ஏ4 ஆகிய கார்களுடன் போட்டியிடும்
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: BMW 3 சீரிஸ் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful