கியா செல்டோஸ், ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ், மாருதி XL6 மற்றும் BMW 3 வரிசை கார்கள் அடுத்த வாரம் வெளியாகத் தயாராக உள்ளன.
published on ஆகஸ்ட் 30, 2019 10:58 am by dhruv for க்யா Seltos 2019-2023
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
வாகன துறை மந்தமாக இருக்கும் போதும், கார் நிறுவனங்கள் புதிய மாடல்களை அடுத்த 7 நாட்களுக்குள் வெளியிடவுள்ளன.
இந்திய வாகனத் தொழில் சமீபகாலமாக மந்தநிலையை அடைந்து வருகிறது என்பது தெரிந்த விசயம். பொருளாதார நிலைமைகள் மற்றும் புதிய விதிமுறைகளால் புதிய கார்கள் வாங்கும் மக்கள் எண்ணிகை குறைந்துள்ளது. இருப்பினும், இதன் காரணமாக கார் தயாரிப்பாளர்கள் புதிய மாடல்களை சந்தைக்குக் கொண்டுவருவதை நிறுத்தவில்லை, பல புதிய கார் தயாரிப்பாளர்கள் இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளனர் . உண்மையில், அடுத்த வாரத்திலேயே நான்கு உயர்ரக கார் வெளியீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போம்:
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
வெளியீட்டுத் தேதி - ஆகஸ்ட் 20
எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு - ரூ 5.2 லட்சம் முதல் ரூ 8 லட்சம் வரை
கிராண்ட் i10 நியோஸ் கிராண்ட் i10 இன் அடுத்த தலைமுறையாக வெளியாகவுள்ளது. இது i10 குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை மாடலாக இருக்கும், மேலும் நடுத்தர அளவிலான ஹேட்ச்பேக் கார்களின் வெளியில் உயர்தர அனுபவத்தை வழங்கும். கிராண்ட் i10 நியோஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பத்தேர்வுகளுடன் கிடைக்கும். மேலும் இரண்டு வகையிலுமே தானியங்கு விருப்பத்தேர்வு இருக்கும் . இது எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் டூயல் டோன் மற்றும் அஸ்டா ஆகிய ஐந்து வெவ்வேறு வகைகளில் கிடைக்கும். கிராண்ட் i10 நியோஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இரண்டாவது தலைமுறை கிராண்ட் i 10 தொடர்ந்து விற்பனையில் இருக்கும் .
இதையும் படியுங்கள்: ஹூண்டாய் கிராண்ட் i 10 நியோஸ் எதிர்பார்க்கப்படும் விலைகள்: மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ, ஃப்ரீஸ்டைலை விட குறைவாக இருக்குமா?
மாருதி சுசுகி XL6
வெளியீட்டு தேதி - ஆகஸ்ட் 21
எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு - ரூ 9.5 லட்சம் முதல் ரூ 11 லட்சம் வரை
XL6 இந்தியாவில் மாருதியின் முதல் உயர்ரக MPV ஆகும், இது அதன் நெக்ஸா விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படும். இது மாருதி சுசுகியின் அரெனா விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்படும் எர்டிகாவை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கும் . XL6 முழுக்க LED விளக்குகள் மற்றும் தோலால் ஆன விரிப்புகள்/இருக்கை உறைகளாலான உயர்ரக உட்புற வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது ஆறு பேர் அமரக்கூடியதாக இருப்பதோடு இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் அமைந்திருக்கும். XL 6, ஜீட்டா மற்றும் ஆல்பா ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும், கூடுதல் அம்சங்களுடன் இருந்தாலும் இது எர்டிகாவின் முதல் இரண்டு வகைகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும், இரண்டு வகைகளும் மேனுவல் மற்றும் தானியங்கு இயக்க விருப்பத்தேர்வுகளுடன் கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: மாருதி XL 6 வகைகள் , பவர்டிரெய்ன் மற்றும் வண்ணங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன
BMW 3 தொடர்வரிசை
வெளியீட்டு தேதி - ஆகஸ்ட் 21
எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு - ரூ 35 லட்சம் முதல் ரூ 45 லட்சம் வரை
BMW 3 தொடர்வரிசை அடுத்த வாரம் இந்தியாவில் ஒரு தலைமுறை மாற்றத்தை பெற உள்ளது. ஜெர்மன் கார் தயாரிப்பாளரான BMW தனது இணையதளத்தில் புதிய மாடலுக்கான முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளதோடு புதிய 3 தொடர்வரிசை இந்தியா முழுவதும் உள்ள விற்பனை நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளதை இணையத்தில் காணப்படும் படங்கள் காட்டுகின்றன . இது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பத்தேர்வுகளுடன் கிடைக்கும், மேலும் 5 தொடர்வரிசை மற்றும் 7 தொடர்வரிசை செடான்களில் பயன்படுத்தப்படும் CLAR (கிளஸ்டர் ஆர்கிடெக்சர்) தளத்தை அடிப்படையாகக் கொண்டது. பழைய 3 தொடர்வரிசை மாடலை விட சிறந்த வசதிகளை புதிய 3 தொடர்வரிசை மாடல் கொண்டிருக்கும்
கியா செல்டோஸ்
வெளியீட்டு தேதி - ஆகஸ்ட் 22
எதிர்பார்க்கப்படும் விலை வரம்பு - ரூ 10 லட்சம் முதல் ரூ 17 லட்சம் வரை
இது ஒரு காரின் வெளியீடு மட்டுமல்ல, இந்தியாவில் ஒரு புதிய தரஅடையாளத்தின் அறிமுகமும் ஆகும். செல்டோஸ் இந்திய சந்தைக்கான கியாவின் முதல் தயாரிப்பாக இருக்கும், இதற்காக கியா நிறைய மெனக்கெட்டுள்ளது . செல்டோஸ் போட்டி ஏற்படுத்தும் வகையில் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல பவர்டிரெயின் வகைகளுடன் கிடைக்கும். வசதிகள் அடிப்படையில் பார்த்தால் போட்டியாளர்களை விட செல்டோஸ் முன்னணியில் இருக்கிறது. செல்டோஸில் இல்லாதவொரு வசதியை போட்டியாளர்கள் கார்களில் கண்டுபிடிப்பது கடினம். கியா ஆகஸ்ட் 22ல் செல்டோஸை வெளியிடவுள்ளது
இதையும் படியுங்கள்: கியா இப்போது உயர்ரக செல்டோஸ் ஜிடி லைன் டீசல் தானியங்கு மாடலுக்கான முன்பதிவுகளை ஏற்றுக்கொள்கிறது
மேலும் படிக்க: ஹூண்டாய் கிராண்ட் i10 டீசல்
0 out of 0 found this helpful