Kia Seltos காரை விட Tata Curvv -ல் கிடைக்கும் 7 கூடுதல் வசதிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
published on ஜூலை 31, 2024 06:10 pm by samarth for டாடா கர்வ்
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
கர்வ், பவர்டு டெயில்கேட் மற்றும் மிகப் பெரிய டச்ஸ்க்ரீன் போன்ற வசதிகளை மட்டும் பெறப்போவதில்லை. அதற்கும் மேலாக ADAS-இன் கீழ் சில கூடுதல் வசதிகளும் வழங்கப்படும்.
ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி-களுக்கு மாற்றாக எஸ்யூவி-கூபே டாடா கர்வ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இருப்பினும் டாடா கர்வ் EV (ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது) மற்றும் கர்வ் ICE (இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்) ஆகிய இரண்டையும் பல தனித்துவமான வசதிகளுடன் கொடுக்கிறது. இது வசதிகள் நிறைந்த செல்டோஸிலிருந்து வேறுபடுகிறது. இந்தப் பதிவில் செல்டோஸில் கர்வ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் 7 முக்கிய வசதிகளைப் பற்றி பார்ப்போம்:
பெரிய டச் ஸ்கிரீன்
மற்ற டாடா எஸ்யூவி-களான நெக்ஸான் EV, ஹாரியர் மற்றும் சஃபாரி போன்றவற்றில் உள்ளதைப் போன்றே 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் டாடா கர்வ் வரவிருக்கிறது. இந்த சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை இணைப்புகளை சப்போர்ட் செய்யும். இதற்கு மாறாக, கியா செல்டோஸ் சிறிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மட்டுமே கொண்டுள்ளது . இது வயர்டு இணைப்பை மட்டுமே சப்போர்ட் செய்கிறது.
டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவில் மேப் நேவிகேஷன்
இங்குள்ள கியா மற்றும் டாடா கார்கள் இரண்டும் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேக்களுடன் வருகின்றன. ஒவ்வொன்றும் 10.25 இன்ச் அளவுடையது. இருப்பினும், கர்வ்வின் டிஸ்ப்ளே கூடுதல் நன்மையைக் கொண்டுள்ளது: இது நெக்ஸானில் உள்ளதைப் போன்ற நேவிகேஷன் ஃபீட்களை காட்டும். இந்த வசதி டிரைவர்கள் தங்கள் கவனத்தை சாலையில் இருந்து திசை திருப்பாமல் நேவிகேஷன் வழிமுறைகளைப் பார்க்க உதவுகிறது.
9- ஸ்பீக்கர் சிஸ்டம்
குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இல்லாவிட்டாலும், டாடா கர்வ் ஆனது JBL-இன் 9-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது. இதில் ட்வீட்டர்கள் மற்றும் சப் வுஃபர் போன்றவையும் அடங்கும். மறுபுறம் கியா செல்டோஸ் போஸின் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இது இசை ஆர்வலர்களுக்கு சற்று மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை அளிக்கும்.
ஹில் டிசென்ட் கண்ட்ரோல்
டாடா கர்வ் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில்-அசென்ட் கன்ட்ரோல் மற்றும் ஹில்-டிசென்ட் கன்ட்ரோல் ஆகிய வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கியா செல்டோஸில் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் பார்க்க: பிரபல நடிகர் சஞ்சய் தத் 65 -வது பிறந்த நாளில் புதிய Range Rover SV காரை வாங்கியுள்ளார்
பவர்டு டெயில்ல்கேட்
டாடா கர்வ் ஆனது பலவிதமான வசதிகளை பெறுகிறது. அதில் ஒன்று பவர்டு டெயில்கேட் ஒரு பட்டனை அழுத்தினால் பூட் லிட்டை திறக்கவோ அல்லது மூடவோ இது உங்களை அனுமதிக்கிறது - இந்த வசதி டாடா ஹாரியர் மற்றும் சஃபாரியிலும் காணப்படுகிறது. கூடுதலாக இது கூடுதல் வசதிக்காக ஜெஸ்டர் கண்ட்ரோலை உள்ளடக்கியது, இந்த வசதி கியா செல்டோஸில் இல்லை.
ட்ராஃபிக் சைன் ரெகக்னிஷன்
இந்த இரண்டு கார்களிலும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டங்கள் (ADAS) வழங்கப்பட்டுள்ளது, இதில் லேன் கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகள் உள்ளன. கூடுதலாக, கர்வ் மற்ற மாடலில் கிடைக்காத ட்ராஃபிக் சைன் ரெகக்னிஷன் வசதியை வழங்கும்.
வெல்கம் மற்றும் குட்-பை லைட் அனிமேஷன்கள்
சிலர் இதை ஒரு வித்தையாகக் கருதலாம் ஆனால் காரை பூட்டும்போதும் அல்லது திறக்கும்போதும் LED DLRக -ள் மற்றும் டெயில் லைட்களில் ஒளிரும் வெல்கம் மற்றும் குட்-பை லைட் அனிமேஷன் ஒரு தனித்துவமான ஒன்றாக இருக்கும். நவீன டாடா கார்களில் ஏற்கனவே உள்ள இந்த வசதி, தற்போது கர்வ்விலும் கிடைக்கும். மாறாக கியா செல்டோஸ் அதன் LED லைட் செட் அப்பில் இந்தச் செயல்பாட்டைச் சேர்க்கவில்லை.
வரவிருக்கும் டாடா கர்வ்வின் குறிப்பிடப்பட்ட வசதிகள் நீங்கள் கியா செல்டோஸை விட அதிகம் விரும்புவதாக உள்ளதா என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 out of 0 found this helpful