புதிய ஹூண்டாய் கிரெட்டா -வுக்கு ஹூண்டாய் வெர்னா 2023 - வில் இருந்து கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 அம்சங்கள்
published on மார்ச் 27, 2023 12:02 pm by tarun for ஹூண்டாய் கிரெட்டா
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிப்டட் கிரெட்டா 2024 -ம் ஆண்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது உலகளாவிய புதுப்பிப்பில் இருந்து வேறுபட்டதாக இருக்கும்.
புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா தனது கார்களில் முதன்முதலாக பல்வேறு அம்சங்களைப் பெற்றுள்ளது, அதிக சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டில் ஒரு ஃபேஸ்லிஃப்ட் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதன் ஸ்டேபிள்மேட்டான, கிரெட்டா -வும் இதேபோன்ற பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
காம்பாக்ட் SUV -யின் தற்போதைய தலைமுறை, 2020 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர் இது பெரிய அளவில் புதுப்பிப்பைப் பெறவில்லை. அப்போதிலிருந்து, இந்தப் பிரிவில் போட்டி கடுமையாகிவிட்டதால், புதிய வெர்னா செடானில் காணப்பட்டதைப் போல, கிரெட்டா மீண்டும் தனித்து நிற்க சில பெரிய மாற்றங்கள் தேவைப்படுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவில் நாங்கள் எதிர்பார்க்கும் ஆறாவது தலைமுறை வெர்னாவின் ஏழு அம்சங்கள் இதோ:
புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜின்
வெர்னா ஒரு புதிய 1.5 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது, இது 160PS மற்றும் 253Nm செயல்திறனைக் கொடுப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. அதே இன்ஜின் இப்போது அல்காஸரில் கிடைக்கிறது. இது 2024 கிரெட்டா காரிலும் இருக்கும், அதே ஆறு-வேகமேனுவல் மற்றும் ஏழு-வேக DCT டிரான்ஸ்மிஷன்களுடன் இருக்கலாம். இந்த பவர்டிரெய்ன் தற்போதைய எஸ்யுவி இன் 140 PS 1.4-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை DCT ஆட்டோமேட்டிக் ஆக மாற்றும். புதிய டர்போ-பெட்ரோல் யூனிட் மூலம், ஸ்கோடா-வோல்க்ஸ்வேகன் டுயோ-வுக்கு முன்னதாகவே கிரெட்டா இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும்.
அடாஸ்
ஹூண்டாய் இப்போது புதிய வெர்னாவில் அடாஸ் -ஐ வழங்குகிறது, இது கிரெட்டாவிற்கும் கொண்டு செல்லப்படலாம். இதில் ஆட்டோமெட்டிக் அவசரகால பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு, முன் மோதல் தவிர்ப்பு, லேன் கீப் அசிஸ்ட் மற்றும் மாறும் குரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.
தற்போது, ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பெறும் ஒரே சிறிய SUV MG ஆஸ்டர் மட்டுமே. அடாஸ் ஆனது கிரெட்டாவிற்கு ஒரு தனித்துவமான அம்சமாக இருக்காது என்றாலும், அது போட்டிக்கு இணையானதாக இருக்கும்.
மேலும் படிக்க: நீங்கள் 2023 ஹூண்டாய் வெர்னாவை 9 வெவ்வேறு வண்ணங்களில் வாங்கலாம்
இன்டெகிரேட்டட் டூயல் டிஸ்பிளேக்கள்
புதிய ஹூண்டாய் வெர்னாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கிரெட்டா ஏற்கனவே 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீனுடன் வந்தாலும், பின்னால் அது இன்டெகிரேட்டட் டூயல் டிஸ்பிளே செட் அப்பைப் பெறலாம். SUV -யின் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை வெர்னாவில் வழங்கப்படும் டிஜிட்டல் க்ளஸ்ட்டர் அல்லது அல்காஸரின் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மூலம் மாற்றலாம்.
ஹீட்டட் அண்ட் ஃபிரன்ட் வென்டிலேட்டட் சீட்கள்
வெர்னா -வுக்கு முதன்முதலாக கிடைத்த அம்சங்களில் பெரும்பாலானவை அனைத்தும் 2024 கிரெட்டாவிலும் எதிர்பார்க்கப்படுகின்றன. கிரெட்டாவின் போட்டியாளர்களில் பெரும்பாலானவை முன்புற வென்டிலேட்டட் இருக்கைகளைப் பெற்றாலும், ஹீட்டிங் செயல்பாடு இந்த பிரிவில் முதன்மையானது.
கனெக்ட்டட் லைட்ஸ்
2024 கிரெட்டா அதன் தனித்துவமான ஸ்டைலிங்கைக் கொண்டிருக்கும் என்றும், இந்தோனேசியாவில் விற்பனைக்கு வரும் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பைப் போல தோற்றம் கொண்டதாக இருக்காது என்றும் நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம். அதற்குப் பதிலாக, இந்தியா-ஸ்பெக் கிரெட்டாவின் புதுப்பித்தல் , வெர்னாவைப் போலவே கனெக்ட்டட் LED DRL கள் மற்றும் டெயில் லைட்டுகளைக் கொண்டிருக்கும். கனெக்ட்டட் லைட்ஸ் என்பது கார் தயாரிப்பாளர்கள் மத்தியில் சமீபத்தில் உள்ள புது அம்சம் ஆகும். இந்த நாட்களில் பல கார்களில் அதனைப் பார்க்க முடியும்.
மேலும் படிக்க: புதிய ஹீண்டாய் வெர்னாவின் இந்த 5 அம்சங்கள் டர்போ கார்வகைகளுக்கு பிரத்தியேகமானவை
ஸ்விட்சபிள் கன்ட்ரோல்கள்
2023 வெர்னாவின் மற்றொரு தனித்துவமான அம்சம், கியா EV6 -ல் காணப்படுவது போல், ஸ்விட்சபிள் கிளைமேட் கன்ட்ரோல்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் கன்ட்ரோல்கள் ஆகும். டச் எனபில்டு பேனலில் ஏசி கன்ட்ரோல்கள் உள்ளன, அதை இன்ஃபோடெயின்மென்ட் ஆடியோ கன்ட்ரோல்கள் மாற்றலாம். ஹூண்டாய் கிரெட்டாவில் எதிர்காலத்தில் வரக்கூடிய அம்சமாக இது எதிர்பார்க்கப்படுகிறது.
டர்போ கார் வகைகளுக்கு வெவ்வேறு ஸ்டைலிங்
ஹூண்டாய் கிரெட்டாவின் தற்போதைய பதிப்பு டர்போ மற்றும் வழக்கமான வகைகளுக்கு இடையே நுட்பமான வேறுபாடுகளுடன் வந்துள்ளது. டர்போ வகைகளில் டூயல் டிப் எக்ஸாஸ்ட்கள், சில பிளாக்-அவுட் பாகங்கள் மற்றும் டூயல்-டோன் வெளிப்புற வண்ணங்கள் இருப்பதால் நீங்கள் அவற்றை தனித்துச் சொல்லலாம். இருப்பினும், ஹூண்டாய் புதிய வெர்னாவுடன் அதிக வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.
வெர்னாவின் டர்போ-பெட்ரோல் மாறுபாடுகள்ரெட் ஆக்சன்ட்ஸ், கறுப்பு அலாய் வீல்கள், சிவப்பு பிரேக் காலிப்பர்கள் மற்றும் ஆப்சனல் கறுப்பு கூரையுடன் கருப்பு கேபின் தீமைப் பெறுகின்றன. ஃபேஸ்லிப்டட் கிரெட்டாவின் டர்போ கார் வேரியண்ட்களுக்கும் இதே போன்ற வித்தியாசங்களை எதிர்பார்க்கலாம்.
ஹூண்டாய் நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஃபேஸ்லிப்டட் கிரெட்டாவை அறிமுகப்படுத்த உள்ளது. செடான் மற்றும் SUV க்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் டீசல் இன்ஜின் ஆப்ஷனை தக்கவைத்துக்கொள்ளுவதில் உள்ளது. புதிய ஹூண்டாய் வெர்னா ரூ.10.90 இலட்சம் முதல் ரூ.17.38 இலட்சம் வரையிலும், தற்போதைய கிரெட்டா ரூ.10.84 இலட்சம் முதல் ரூ.19.13 இலட்சம் வரையிலும் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்கவும்: ஹூண்டாய் வெர்னா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful