நீங்கள் 2023 ஹூண்டாய் வெர்னாவை 9 வெவ்வேறு ஷேட்களில் வாங்கலாம்
published on மார்ச் 23, 2023 07:38 pm by ansh for ஹூண்டாய் வெர்னா
- 38 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த கார் ஏழு மோனோடோன் மற்றும் இரண்டு டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.
-
சிக்ஸ்த் ஜெனரேஷன் வெர்னாவின் விலைகள் ரூ. 10.90 இலட்சம் முதல் ரூ. 17.38 இலட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
-
இரண்டு பெட்ரோல் இன்ஜின்களைப் பெறுகிறது: ஒரு 115PS, நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின் மற்றும் 160PS, டர்போசார்ஜ் செய்யப்பட்ட யூனிட்.
-
செடானில் ஹூண்டாயின் முன் மற்றும் பின்புறம் லேட்டஸ்ட் பாராமெட்ரிக் டிசைன் லாங்குவேஜ் விவரங்கள் உள்ளன.
-
இன்டெகிரேட்டட் டுயல் டிஸ்ப்ளேக்கள், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
ஏற்கனவே 8,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஹூண்டாய் இறுதியாக சிக்ஸ்த்-ஜெனரேஷன் வெர்ன் அதன் விலைகளை அறிவித்துள்ளது. இது இப்போதுள்ள மாடலை விட பெரியது மற்றும் முன் மற்றும் பின்புறம் பாராமெட்ரிக் டிசைன் விவரங்களுடன் கம்பீரமான புதிய ஸ்டைலிங்குடன் வருகிறது. புதிய தோற்றம் மூன்று அம்சங்களால் ஆதிக்கம் செலுத்துகிறது: காரைச் சுற்றி இருக்கும் LED லைட் ஸ்ட்ரிப்ஸ் முன் மற்றும் பின்புறம், நேர்த்தியான நாட்ச்பேக்-பாணியிலான ரூஃப் மற்றும் ரியர் ப்ரொஃபைலின் பின்புற பாதியில் இருக்கும் ஆங்குலர் கட்ஸ். செடானுக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டு இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக ஆகியுள்ளது. ஆனால் கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் இப்போதுதான் அனைத்து நிறங்களுக்கான ஆப்ஷன்களை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: ஹூண்டாய் வெர்னா 2023 ரூ 10.90 லட்சத்தில் லாஞ்ச் செய்யப்பட்டது; அதன் போட்டியாளர்களை விட ரூ.40,000க்கு மேல் குறைவாக கிடைக்கிறது
எனவே, 2023 வெர்னாவை நீங்கள் முன்பதிவு செய்வதற்கு முன், அதன் கலர் பேலட்டை பாருங்கள்:
-
அட்லாஸ் வொயிட்
-
ஃபியரி ரெட்
-
அபீஸ் பிளாக்
-
டைஃபோன் சில்வர்
-
டெல்லுரியன் பிரவுன்
-
டைடன் கிரே
-
ஸ்டாரி நைட்
-
அட்லாஸ் வொயிட் டுயல் டோன்
-
ஃபியரி ரெட் டுயல் டோன்
பவர்டிரெயின்
2023 வெர்னா இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 115PS மற்றும் 144Nm அவுட்புட் உடன் ஆறு-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் யூனிட், மேலும் 1.5 -லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் 160PS மற்றும் 253Nm ஆறு-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏழு-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது. கருப்பு அலாய் வீல்களுடன் வரும் புதிய வெர்னாவின் டர்போ வேரியண்ட்களுக்கு டூயல்-டோன் ஆப்ஷன்கள் வரையறைக்குள் இருக்கின்றன.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
அதன் அம்சங்கள் பட்டியலில் டூயல் இண்டக்ரேட்டட் டிஸ்ப்ளேக்கள் (10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே), சிங்கிள்-பேன் சன்ரூஃப், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள்,, இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஏசிக்கான ஸ்விட்சபிள் கன்ட்ரோல்கள் மற்றும் எட்டு-ஸ்பீக்கர் -களைக் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க: புதிய ஹூண்டாய் வெர்னா எலக்ட்ரிஃபிகேஷன் இல்லாமல் அதிக எரிபொருள் திறன் கொண்ட செடானா?
வாகனத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 2023 வெர்னா ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS அனைத்து பயணிகளுக்கும் த்ரீ-பாயிண்ட் சீட்பெல்ட்கள் மற்றும் ஒரு பின்புற டிஃபோகர் ஆகியவை ஸ்டாண்டர்டாக வருகின்றன. லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் அலர்ட், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், டிரைவர் அடென்ஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்களுடன் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) உடனும் வருகிறது.
விலைகள் & போட்டியாளர்கள்
ஹூண்டாய் சிக்ஸ்த்-ஜெனரேஷன் வெர்னாவை ரூ 10.90 லட்சம் முதல் ரூ 17.38 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயித்துள்ளது, மேலும் இது ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லேவியா, வோல்க்ஸ்வேகன் வெர்ச்சஸ் மற்றும் மாருதி சியாஸ் உடன் போட்டியைத் தொடர்கிறது.
மேலும் படிக்கவும்: வெர்னா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful