• English
  • Login / Register

மாருதி ஜிம்னி-போன்ற அம்சங்களைப் பெறும் 5-கதவு மஹிந்திரா தார் மீண்டும் மறைவாக படம் பிடிக்கப்பட்டது

published on மே 25, 2023 05:50 pm by rohit for மஹிந்திரா தார் ராக்ஸ்

  • 50 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இன்னும் உருவ மறைப்பில் உள்ள ஆஃப்ரோடரை  வீடியோ காண்பிக்கிறது, பூட்-மவுண்டட் ஸ்பேர் வீலுக்குப் பின்னால் ஒரு பின்புற வைப்பர் இருப்பதைக் காட்டுகிறது.

5-door Mahindra Thar spied

  • 5-கதவு மஹிந்திரா தார் சோதனை 2022 ஆண்டு முதல் நடந்து வருகிறது.

  • LED டெயில்லைட்கள், ரன்னிங் போர்டுகள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றின் காரணமாக இது கிட்டத்தட்ட தயாரிப்பிலிருந்து வெளிவரஇருப்பதாக சமீபத்திய உளவு வீடியோ காட்டுகிறது.

  • 8-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ AC  மற்றும் அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவை எதிர்பார்க்கப்படும் அம்சங்களாகும்.

  • மஹிந்திரா 3-கதவு தார் போன்ற அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் அதனை வழங்கும்.

  • அது 2024 தொடக்கத்திலேயே விற்பனைக்கு வரும்   மற்றும் ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)  ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5-கதவு மஹிந்திரா தார் சோதனையின் போது முதன்முதலில் உளவு பார்க்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது  நாம் அது உருமறைப்பிலிருந்து வெளி வரக்காத்திருக்கும் நேரத்தில் 5-டோர் ஆஃப்ரோடரின் கூடுதல் தயாரிப்பிலிருந்து வெளி வரத்தயாராக இருக்கும் எடிஷனை குறிக்கும் வேரியன்ட்யில், SUVயின் மற்றொரு ஸ்பை வீடியோ இப்போது வெளிவந்துள்ளது.

தெளிவான விவரங்கள்

5-door Mahindra Thar spied

சமீபத்தில் உளவு பார்க்கப்பட்ட சோதனையானது உற்பத்திக்குத் தயாராக இருக்கும் LED டெயில்லைட்கள், பாடி பேனல்கள், அலாய் வீல்கள் மற்றும் ரன்னிங் போர்டுகளுடன் காணப்பட்டது. இது தாரின் ஹார்ட்-டாப் எடிஷனாக தோன்றியது, ஏனெனில் இது  மேலே இணைக்கப்பட்டுள்ள ஸ்டாண்டர்டான பின்புற கண்ணாடி ஜன்னலைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது  . 5-கதவு மாருதி ஜிம்னியில்பார்த்தது போலவே, டெயில்கேட் பொருத்தப்பட்ட உதிரி சக்கரத்திற்குப் பின்னால் பின்புற வைப்பர் பொருத்தப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய ஒரு கவர்ச்சிகரமான விஷயமாகும். .

முன்பு பார்த்த விவரங்கள்

5 door Mahindra Thar

C-பில்லர் பொருத்தப்பட்ட பின்புற கதவு கைப்பிடிகள் (மாருதி ஸ்விஃப்ட் போன்றவை) கிடைக்கும் என்ற தகவல் பழைய உளவு படங்கள் மூலமாக ஏற்கனவே தெரிய வந்தது. 5-கதவு தார், 3-கதவு மாடலில் காணப்படுவது போல் வட்ட ஹாலோஜென் புரொஜெக்டர் ஹெட்லைட்களுடன் வரக்கூடும்.

மேலும் படிக்கவும்: மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார் பெட்ரோல் - எரிபொருள் திறன் புள்ளிவிவரங்கள் ஒப்பீடு

கேபின் மற்றும் அம்சங்கள்

5-கதவு கொண்ட தாரின் உட்புறத்தைப் பற்றிய  தெளிவான படங்கள் எதுவும் இல்லை என்றாலும், மஹிந்திரா முந்தைய படத்தில் பார்த்தது போல் முழு கறுப்பு கேபினையும் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். கார் தயாரிப்பு நிறுவனம்  நான்கு, ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட பல இருக்கை அமைப்புகளில் நீண்ட வீல்பேஸ் உடன்  தாரை வழங்க முடியும்.

போர்டில் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பமானது 8-இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பு, ஆட்டோ ஏசி, அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், ரிவர்சிங் கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 3-கதவு தார் 4WD கார் வேரியன்ட்களில் காணப்படும் மஹிந்திராவின் ஆஃப்-ரோடிங் இன்டர்ஃபேசை இது தொடர்ந்து வழங்கும்.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் ரேஞ்ச்

Mahindra Thar diesel engine

5-கதவு தார், தற்போதுள்ள 3 கதவு தார் போன்ற அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வழங்கப்படும், இருப்பினும் அதிக வெளியீட்டு புள்ளிவிவரங்களுடன்  இருக்கும். 3-கதவு மாடலில், 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் 150PS ஐ வெளியேற்றுகிறது, அதே நேரத்தில் 2.2-லிட்டர் டீசல் 130PS என மதிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்திரா, தற்போதைய மாடலுடன் சமீபத்தில் பார்த்தது போல, 2WD  வேரியன்ட்களின் ஆப்ஷன்களின்  நீட்டிக்கப்பட்டட  தார் வேரியன்ட்டை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் தயாரிப்பு நிறுவனம் SUV ஐ 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் மேம்படுத்தும்.

எப்போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

மஹிந்திரா நீளமான வீல்பேஸ் ஆஃப்ரோடரை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தலாம். வீல்பேஸைப் பொறுத்தவரை, இது வரவிருக்கும் மாருதி ஜிம்னிக்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும், மேலும் இது ஃபோர்ஸ் கூர்காவின் 5-கதவு இட்டரேஷனுக்கு இணையாக இருக்கலாம்.
படங்களின் ஆதாரம்

மேலும் படிக்கவும்: தார் டீசல்

was this article helpful ?

Write your Comment on Mahindra தார் ROXX

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience