Honda Elevate -ஐ ஓட்டிய பிறகு நாம் தெரிந்து கொண்ட 5 விஷயங்கள்
published on ஆகஸ்ட் 14, 2023 05:13 pm by ansh for ஹோண்டா எலிவேட்
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது எலிவேட் காரில் கொஞ்சம் குறைவான அளவில் உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கலாம், ஆனால் அதை விட நிறைய கொடுக்கிறது.
செப்டம்பர் முதல் வாரத்தில் எலிவேட் எஸ்யூவியை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இப்போது ப்ரீ-லாஞ்ச் புக்கிங் திறக்கப்பட்டுள்ளது மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி ஆகஸ்ட் மாத மத்தியில் ஷோரூம்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் போட்டியாளரான இந்த காருடன் சிறிது நேரம் செலவிட்டோம், நாங்கள் தெரிந்து கொண்ட 5 விஷயங்கள் இங்கே.
கையேட்டில் என்ன இருக்கிறது
கையேட்டை பார்த்தபோது, முதலில் எங்கள் கண்களுக்கு தெரிந்த ஒரு விஷயம், அம்சங்களின் பற்றாக்குறையே. ஆனால் ஒரு துண்டு காகிதத்தில் நீங்கள் பார்க்காத விஷயங்கள் நிறைய உள்ளன. தரம், நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை நீங்கள் ஒரு காரை அனுபவித்து, அதனுடன் நேரத்தைச் செலவழித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
ஹோண்டாவுடன், இவை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களின் தரமும் சிறப்பாக உள்ளது. நீங்கள் ஹோண்டா காரை பயன்படுத்தத் தொடங்கினால், அது ஏன் நம்பகமான கார் என்பது உங்களுக்குத் தெரியும். இது மென்மையான டிரைவ் அனுபவத்தையும், டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை சிறப்பாக வழங்குகிறது, இது ஹோண்டாவின் கடந்த கால கார்களை விட முன்னேற்றம் பெற்றுள்ளது. ஹோண்டாவின் சேவை அனுபவமும் சிறந்த ஒன்றாகும், மேலும் நாம் அனைவரும் அறிந்தபடி, அவர்களின் கார்கள் நம்பகத்தன்மையில் சிறந்து விளங்குகிறது. இவை அனைத்தும் நமக்கு நம்பிக்கையை கொடுக்கின்றன.
பாரம்பரியம் ஆனாலும் கம்பீரமானது
வெளியிடப்பட்ட நேரத்தில், எலிவேட் எந்த ஃபேன்சி டிசைன் டச் -களையும் கொண்டிருக்கவில்லை, மேலும் இது எங்களுக்கு ஒரு பாரம்பரிய எஸ்யூவி என்ற கண்ணோட்டத்தை மட்டுமே கொடுத்தது. ஆனால் அது ஒரு மோசமான விஷயமா? நிச்சயமாக இல்லை. ஹோண்டா அப்படி கொடுக்காமல் இருந்தது நிச்சயமாக வேலை செய்கிறது. எலிவேட், அதன் பாரம்பரிய எஸ்யூவி ஸ்டைலுடன் கூட, கம்பீரமாகத் தெரிகிறது.
பெரிய முன்புற கிரில், நேர்த்தியான LED ஹெட்லைட்கள் மற்றும் DRLகள், பாக்ஸி ஸ்டைலிங் மற்றும் ஸ்டைலான 17-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்ட நிமிர்ந்த வெளிப்புற வடிவமைப்பால் எலிவேட்டின் இந்த கம்பீரமான தோற்றத்துடன் உள்ளது. நேர் கோடுகள், வுடன் இன்செர்ட்ஸ் மற்றும் டூயல்-டோன் டான்-பிளாக் தீம் கொண்ட கிளீன் லுக்கிங் கேபின் ஆகியவை எலிவேட்டிற்கு ஒரு பிரீமியம் தோற்றத்தை கொடுக்க்கின்றன.
உணர்திறன் இங்கே முதன்மையானது
காம்பாக்ட் எஸ்யூவி -யில் இருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்து விஷயங்களிலும், விசாலமான இடம் மற்றும் நடைமுறைத்தன்மை ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, அது நிச்சயமாக இங்கே கவனம் செலுத்துகிறது. எலிவேட்டிற்குள் நுழையும் போது கதவுகள் அகலமாக திறக்கும், அதனால் உள்ளே செல்வதும் வெளியே வருவதும் மிகவும் எளிதானது. கேபின் இடவசதி அதிகமாக உள்ளது, குறிப்பாக பின்புற இருக்கைகளில், 6-அடி உயரம் கொண்ட பயணிகள் கூட வசதியாக உட்கார முடியும்.
முன்பக்கத்தில், முன்புற இருக்கைகளின் கீழ் எரிபொருள் டேங்க் வைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் சற்று உயரமான இடத்தில் உட்காருகிறீர்கள், இதனால் ஹெட்ரூம் பற்றாக்குறை ஏற்படுகிறது, ஆனால் சராசரி உயரம் உடைய பெரியவர்களுக்கு அது நன்றாக இருக்கும். ஆனால் எலிவேட் அதன் இடத்தை சிறப்பாகப் பயன்படுத்துவது பூட்டில் உள்ளது. இது 458-லிட்டர் பூட் ஸ்பேஸை பெறுகிறது, இது அதன் பிரிவில் மிகப்பெரியது அல்ல, ஆனால் உங்கள் பயணங்களுக்கு போதுமானது.
கேபின் நடைமுறையில் கூட, எலிவேட் சமரசம் செய்யவில்லை. அனைத்து கதவுகளிலும் பாட்டில் ஹோல்டர்கள், சென்டர் கன்சோலில் கப் ஹோல்டர்கள் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்ட்டில், உங்கள் ஃபோன், வாலட் அல்லது சாவிகளை வைத்திருப்பதற்கான மெல்லிய ஸ்லாட்டுகள் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்டுக்குள் சேமிப்பகத்தை பெறுவீர்கள்.
பவர்டிரெய்னில் சமரசம்
121PS மற்றும் 145Nm ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் ஹோண்டா எலிவேட் இயக்கப்படுகிறது. ஹோண்டா சிட்டியுடன் நீங்கள் பெறும் அதே இன்ஜின் இதுதான், இது நன்றாக இருக்கிறது, ஆனால் இந்த அளவிலான காருக்கு, இது மிகவும் சக்திவாய்ந்த இன்ஜின் ஆப்ஷனையும் ஹோண்டா கொடுத்திருக்க வேண்டும்.
1.5 லிட்டர் இன்ஜின் அதன் வேலையைச் செய்கிறது. இது ஃரீபைன்டாக இருக்கிறது, மேலும் வாகனம் ஓட்டுவது மென்மையாகவும் நிதானமாகவும் இருக்கிறது, ஆனால் இதில் உற்சாகம் அல்லது ஈடுபாடு எதுவும் இல்லை. ஒரு டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தால் ஓட்டுவதற்கு மிகவும் ஃபன் -னாக இருந்திருக்கும்.
மேலும் படிக்கவும்: இந்தியாவில் அடுத்த 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற SUVயாக ஹோண்டா எலெக்ட்ரிக் இருக்குமா?
மேலும், நாங்கள் சிட்டியில் வருவதைப் போலவே, எலிவேட்டுடன் ஒரு ஹைபிரிட் பவர்டிரெய்னை எதிர்பார்த்தோம், ஆனால் அதுவும் இங்கே இல்லை. ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, டொயோட்டா மற்றும் மாருதி போன்றவற்றை விட ஹோண்டா சிறப்பாகச் செயல்படுகிறது. கார் தயாரிப்பாளர் அதை வழங்கியிருந்தால், எலிவேட் இந்த பிரிவில் உயர்ந்திருக்கும்.
விடுபட்ட அம்சங்கள்
எலிவேட் வழங்கும் பல விஷயங்கள் உள்ளன, ஆனால் இது இன்னும் சில முக்கிய அம்சங்களை தவறவிட்டது, அவை இப்போது பிரிவில் பொதுவானதாகி வருகின்றன. இது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றை வழங்கினாலும், பனோரமிக் சன்ரூஃப், பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கைகள், வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் பின்புற சன்ஷேடுகள் மற்றும் டைப்-C சார்ஜிங் போர்ட்கள்.போன்ற சில முக்கிய அம்சங்கள் இது தவறவிடுகிறது.
பாதுகாப்பு விஷயத்தில் கூட, இது லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் போன்ற அம்சங்களுடன் ADAS -ஐ பெறுகிறது, ஆனால் இது ஒரு கேமரா அடிப்படையிலான ADAS மட்டுமே மற்றும் அதன் உடனடி போட்டியாளரான கியோ செல்டோசை போன்ற ரேடார் அம்சத்தைப் பெறவில்லை. எனவே அமைப்பு இரவில் சிறிது குழப்பமடைகிறது, ஆனால் பகலில் நன்றாக வேலை செய்கிறது.
மேலும் படிக்கவும்: ஹோண்டா எலிவேட் Vs ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் MG ஆஸ்டர்: விவரக்குறிப்புகள் ஒப்பிடப்படுகின்றன
மொத்தத்தில், ஹோண்டா எலிவேட் பாதுகாப்பான மற்றும் விவேகமான தேர்வாகும். நீங்கள் சில நல்ல அம்சங்களைத் தவறவிட்டாலும், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே பெறுகிறீர்கள் என்றாலும், ஹோண்டாவின் நம்பகத்தன்மையுடன் கேபின் தரம், இட வசதி மற்றும் வசதி ஆகியவை அதை எளிதாக ஈடுசெய்யும். இது உங்களை ஏமாற்றமடையவும் வைப்பதில்லை, அதே சமயம் ஆச்சரியப்படுத்துவதுமில்லை.
எலிவேட்டின் விலை விவரம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ரூ. 12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், MG ஆஸ்டர் மற்றும் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியகார்களுடன் போட்டியிடும்.
0 out of 0 found this helpful