சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Harrier காரிலிருந்து Tata Curvv கடன் வாங்கும் 5 விஷயங்கள்

ansh ஆல் பிப்ரவரி 14, 2024 07:30 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
37 Views

டாடாவின் வரவிருக்கும் கூபே எஸ்யூவி, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹாரியருடன் வடிவமைப்பில் பல விஷயங்களை கூடுதலாக பகிர்ந்து கொள்கிறது.

டாடா இந்த ஆண்டு சில புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவுள்ளது அவற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்களில் டாடா கர்வ்வ் -ம் ஒன்றாக உள்ளது. பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் இடம்பெறவுள்ள இந்த எஸ்யூவி, கடைசியாக 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் உற்பத்திக்கு தயாராக இருக்கும் வடிவத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது, மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பல அம்சங்களுடன் கூபே ஸ்டைலிங் வரும். இந்த மாடல் புத்தம் புதியதாக இருந்தாலும், மேலே உள்ள ஒரு பிரிவில் இருக்கும் ஃபேஸ்லிஃப்ட் டாடா ஹாரியர் காருடன் ஒப்பிடும் போது இது சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. அவற்றின் பட்டியல் இங்கே உள்ளது.

வடிவமைப்பில் ஒற்றுமை லைட்டிங்

டாடா கர்வ்வ் ஆனது ஹாரியரில் இருந்து அதன் வடிவம் மற்றும் ஸ்டைலிங்கில் வேறுபடும் அதே வேளையில், குரோம் இன்செர்ட்களுடன் கூடிய கிரில் வடிவமைப்பு மற்றும் பழக்கமான பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் போன்ற சில ஒற்றுமைகளை முன்புறத்தில் பார்க்க முடிகிறது . இரண்டு எஸ்யூவி -களும் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களை கொண்டுள்ளன, ஆனால் கர்வ்வ் -ல் உள்ளவை பெட்டல் போன்ற வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Tata Nexon EV Tata Tiago EV ஆகிய கார்கள் இப்போது ரூ.1.2 லட்சம் வரை விலை குறைவாக கிடைக்கும்

மேலும், கர்வ்வ் காரின் முன்பக்கத்தில் செங்குத்தாக உள்ள LED ஹெட்லைட்கள் மற்றும் ஃபேஸ்லிப்டட் டாடா ஹாரியர் -ல் காணப்படுவது போல், LED DRL -களுடன் வரும். அனைத்து புதிய டாடா கார்களிலும் காணப்படுவது போன்ற வெல்கம் மற்றும் குட்பை ஃபங்ஷன் உடன் கிடைக்கும்.

ஸ்கிரீன் செட்டப்

டாடா ஹாரியரின் கேபின் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

டாடா ஹாரியர் ஃபேஸ்லிஃப்ட் ஒரு 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, இரண்டும் தனித்தனி யூனிட்களாக உள்ளன. டாடா கர்வ்வ் காரில், அதே ஸ்கிரீன் செட்டப் உள்ளது. இந்தத் ஸ்கிரீன்கள் ஒரே அளவைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதே யூஸர் இன்டர்ஃபேஸ், கிராபிக்ஸ் மற்றும் செயல்பாடுகளையும் ஷேர் செய்து கொள்ளும்.

டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல்

டாடா ஹாரியரின் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

புதிய டாடா கார்களில் காணப்படும் சமீபத்திய அம்சங்களில் ஒன்று டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகும். இந்த பேனல் பிஸிக்கல் (வெப்பநிலை மற்றும் ஃபேன் ஸ்பீடு) மற்றும் டச் பேஸ்டு கன்ட்ரோல்கள் இரண்டையும் கொண்டுள்ளது மற்றும் புதிய டாடா ஹாரியரிலும் அதே போல உள்ளது. கர்வ்வ் இந்த அம்சத்தை அதன் ICE மற்றும் EV பதிப்புகளிலும், முன் இருக்கைகளுக்கான சீட் வென்டிலேஷன் வசதியையும் பெறும்.

சன்ரூஃப்

டாடா ஹாரியரின் பனோரமிக் சன்ரூஃப் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு கார் வாங்க முடிவெடுக்கும் ஒரு விஷயமாக சன்ரூஃப்கள் மாறிவிட்டன. இதை அறிந்த கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார்களை இந்த வசதியை கொடுக்க தொடங்கியுள்ளனர். ஃபேஸ்லிஃப்டட் ஹாரியர் பனோரமிக் சன்ரூஃப் உடன் வருகிறது, மேலும் இது கர்வ்வி -யிலும் கொடுக்கப்படுகின்றது.

ADAS

டாடா ஹாரியரின் ADAS கேமரா எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

கர்வ்வ் கார் ஹாரியரிடமிருந்து கடன் வாங்கும் மற்றொரு முக்கியமான அம்சம் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்). இந்த லெவல் 2 ADAS அம்சங்களின் தொகுப்பில் லேன் டிபார்ச்சர் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும். மேலும், ஹாரியரை போலவே, டாடா கர்வ்வியும் கேமரா மற்றும் ரேடார் அடிப்படையிலான ADAS அமைப்பைப் பெறும்.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு விலை

டாடா கர்வ்வ் இவி -யை 2024-2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் 2024 வரை) அறிமுகப்படுத்தும், அதன்பிறகு ICE பதிப்பு 3 முதல் 4 மாதங்கள் கழித்து வரும். டாடா கர்வ்வ் விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஸ்கோடா குஷாக் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: ஹாரியர் டீசல்

Share via

Write your Comment on Tata கர்வ்

explore similar கார்கள்

டாடா ஹெரியர்

4.6246 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
டீசல்16.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்

டாடா கர்வ்

4.7374 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.46.89 - 48.69 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.10 - 19.52 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.17.49 - 22.24 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை