• English
    • Login / Register

    2024 -ல் வெளிவரவுள்ள 3 புதிய மாருதி கார்கள் உங்கள் பார்வைக்கு

    மாருதி இ விட்டாரா க்காக டிசம்பர் 21, 2023 07:46 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 39 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    2024 -ம் ஆண்டில், மாருதி இரண்டு புதிய தலைமுறை மாடல்களை அறிமுகப்படுத்தும், மற்றும் அந்நிறுவனத்தின் முதல் EV -யையும் வெளியிடும்.

    2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸூகி மாருதி ஜிம்னி, மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் மாருதி இன்விக்டோ ஆகிய மூன்று முற்றிலும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியது.. 2024 ஆம் ஆண்டை நெருங்கும் நிலையில், மாருதி நிறுவனம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முதல் மின்சார வாகனம் (EV) உட்பட மூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட்

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: மார்ச் 2024

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ 6 லட்சம் முதல்

    2024 Suzuki Swift

    நான்காவது தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் ஏற்கனவே அதன் சொந்த நாடான ஜப்பானில் அறிமுகமாகியுள்ளது மேலும் விவரங்களும் வெளியாகியுள்ளன. புதிய-ஜென் ஹேட்ச்பேக், புதிய வடிவிலான உட்புறத்தை கொண்டுள்ளது மற்றும் வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்களும் பரிணாம வளர்ச்சியைக் கொண்டுள்ளன, இது கூர்மையாக ஆனால் இன்னும் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. இது ஒரு புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (82 PS / 108 Nm), 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT உடன் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஜப்பானில், ஸ்விஃப்ட் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் இரண்டு பதிப்புகளிலும், ஆப்ஷனலான ஆல்-வீல் டிரைவ் (AWD) உடன் கிடைக்கும். இருப்பினும், இந்தியாவில், இந்த விவரக்குறிப்புகள் மாறுபடலாம், மேலும் ஹைபிரிட் மற்றும் AWD பதிப்புகள் வெளியாகுமா என்பதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

    இதையும் பார்க்கவும்: மஹிந்திரா நிறுவனம் புதிய தார் 5-டோர் காருக்கு "ஆர்மடா" உள்பட 7 பெயர்களை பதிவு செய்துள்ளது

    மாருதி eVX

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: ஏப்ரல் 2024

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ 22 லட்சம் முதல்

    Maruti eVX

    2024 ஆம் ஆண்டில், இந்திய கார் தயாரிப்பாளரின் முதல் மின்சார வாகனமான  மாருதி eVX -ன் அறிமுகத்தை பார்ர்க்கவிருக்கிறோம்.இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி சமீபத்தில் ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2023 -ல் தயாரிப்புக்கு முந்தைய வடிவமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டது. EV -யானது இந்திய சாலைகளில் பல முறை சோதனை செய்யப்பட்டு, இறுதி வடிவமைப்பை மறைக்கும் வகையில் தற்காலிக ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்களை கொண்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, இது ஒரு இன்டெகிரேட்டட் டிஸ்பிளே செட்டப் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்காக) மற்றும் 360 டிகிரி கேமராவை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. eVX ஆனது 60 kWh பேட்டரி பேக்கை டூயல்-மோட்டார் அமைப்புடன் இணைந்து 550 கிமீ வரை செல்லும் என்று மாருதி உறுதிப்படுத்தியுள்ளது.

    இதையும் பார்க்கவும்: 2024 ஆண்டில் வெளியாகவுள்ள 7 புதிய டாடா கார்கள்

    புதிய தலைமுறை மாருதி டிசையர்

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு: 2024 ஆம் ஆண்டின் மத்தியில்

    எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.6.5 லட்சம் முதல்

    தற்போதைய தலைமுறை மாருதி டிசையர் 2017 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது கடைசியாக 2020 -ல் அப்டேட்டை பெற்றது. இப்போது, ​​ஸ்விஃப்ட்-அடிப்படையிலான சப்-4m செடான் அதன் தலைமுறை மேம்படுத்தலுக்கு தயாராக உள்ளது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் அடிப்படையில், டிசையர் புதிய வடிவமைப்பு மற்றும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும் ஒரு விரிவான புதுப்பிப்புக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய ஸ்விஃப்ட் போன்ற அதே பவர்டிரெய்ன் அப்டேட்டை பெறும்.

    2024 -ம் ஆண்டில் மற்ற மாருதி மாடல்களிலும் அம்சச் சேர்க்கைகளின் அடிப்படையில் சிறிய திருத்தங்களை எதிர்பார்க்கலாம். இந்த புதிய மாருதி கார்களில் எதை நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பிரிவில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

    was this article helpful ?

    Write your Comment on Maruti இ விட்டாரா

    explore similar கார்கள்

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience