2024 Mini Cooper S மற்றும் Mini Countryman எலக்ட்ரிக் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கார்களின் விலை ரூ.44.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
published on ஜூலை 24, 2024 06:06 pm by dipan for மினி கூப்பர் எஸ்
- 60 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் முதன் முறையாக மினி கன்ட்ரிமேன் முழு எலக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யூவி -யாக அறிமுகமாகியுள்ளது.
-
2024 மினி கூப்பர் விலை ரூ.44.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
கன்ட்ரிமேன் EV -யின் விலை ரூ. 54.90 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
4 -வது தலைமுறை கூப்பர் புதிய வட்ட வடிவ ஹெட்லைட்கள், எண்கோண வடிவ கிரில் மற்றும் புதிய பிக்சலேட்டட் டெயில் லைட்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதே நேரத்தில் கன்ட்ரிமேன் EV -க்கு வேறு விதமான எண்கோண வடிவ ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
இரண்டு கார்களின் உட்புற வடிவமைப்பு 9.4-இன்ச் சுற்று OLED டச் ஸ்கிரீன் மையத்தில் உள்ளது.
-
பனோரமிக் சன்ரூஃப், ஆப்ஷனலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் முன் இருக்கைகள் மற்றும் ஆம்பியன்ட் லைட்ச் ஆகியவை பொதுவான வசதிகளாக உள்ளன.
-
புதிய மினி கூப்பர் S 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (204 PS/300 Nm) பெறுகிறது.
-
மினி கன்ட்ரிமேன் EV ஆனது 66.4 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. ஒரே ஒரு மோட்டார் (204 PS/250 Nm) கொடுக்கப்பட்டுள்ளது.
நான்காம் தலைமுறை மினி கூப்பர் S மற்றும் முதல் மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் இந்தியாவில் அறிமுகம் செய்ப்பட்டுள்ளன. இந்த இரண்டு சொகுசு கார்களின் விலை பின்வருமாறு:
மாடல் |
விலை |
2024 மினி கூப்பர் S |
ரூ.44.90 லட்சம் |
2024 மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக் |
ரூ.54.90 லட்சம் |
விலை எக்ஸ்-ஷோரூம் -க்கானவை (அறிமுகத்துக்கானவை)
இரண்டு மினி மாடல்களையும் விரிவாகப் பார்ப்போம்:
2024 மினி கூப்பர் S
வெளிப்புறம்
2024 மினி கூப்பர் சில புதிய எலமென்ட்களை அறிமுகப்படுத்தும் போது அதன் உன்னதமான வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது சிக்கலான வடிவமைப்பு விவரங்கள் மற்றும் 'S' பேட்ஜிங்குடன் புதிய எண்கோண கிரில்லை கொண்டுள்ளது. ஹேட்ச்பேக்கில் புதிய சுற்று LED ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது DRL -களுக்கான கஸ்டமைசபிள் லைட் சிக்னேச்சரை கொண்டுள்ளது.
இது இருபுறமும் இரண்டு டோர்கள் உடன் 17 இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. இது 18 இன்ச் யூனிட் மேம்படுத்தப்படும். பின்புறத்தில் காரின் ஸ்போர்ட்ஸ் புதிய வடிவிலான முக்கோண LED டெயில்லைட்கள் சீக்வென்ஷியல் இண்டிகேட்டர்களுடன் இருக்கின்றன. ஓஷன் வேவ் கிரீன், சன்னி சைட் யெல்லோ, பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், சில் ரெட் II மற்றும் பிளேசிங் ப்ளூ ஆகிய 5 கலர் ஸ்கீம்களில் கூப்பர் S-ஐ மினி வழங்குகிறது.
காரின் அளவுகள்:
நீளம் |
3,876 மி.மீ |
அகலம் |
1,744 மி.மீ |
உயரம் |
1,432 மி.மீ |
வீல்பேஸ் |
2,495 மி.மீ |
பூட் ஸ்பேஸ் |
210 லிட்டர் |
உட்புறம்
வட்ட வடிவ தீம் உட்புறம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 9.4-இன்ச் சுற்று OLED டச் ஸ்கிரீன் மையமாக உள்ளது. வழக்கமான இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மாற்றப்பட்டுள்ளது, அனைத்து கார் தகவல்களும் இந்த சென்டர் ஸ்கிரீனில் காட்டப்படும். பார்க்கிங் பிரேக், கியர் செலக்டர், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், எக்ஸ்பீரியன்ஸ் மோட் டோகிள் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் ஆகியவை டச் ஸ்கிரீன் கீழே உள்ள சென்டர் கன்சோலில் டோக்கிள் பார் யூனிட்டில் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் பிளேட் பொதுவாக மற்ற கார்களில் கியர் லீவர் இருக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
மினி கூப்பர் S ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் இருக்கைகள், ஓட்டுநர் இருக்கைக்கு மசாஜ் ஃபங்ஷன், ஆம்பியன்ட் லைட்ஸ், எலக்ட்ரோக்ரோமிக் இன்சைட் ரியர்வியூ மிரர் (IVRM), ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள், லெவல்-1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS), டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை அடங்கும். இது ஒரு பாதசாரிகளுக்கான எச்சரிக்கை அமைப்புடன் ஸ்டாண்டர்டாக வருகிறது. ஆப்ஷனலான பிளைண்ட் ஸ்பாட் எச்சரிக்கை செட்டப் உடன் வருகிறது.
பவர்டிரெய்ன்
2024 மினி கூப்பர் S 2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, அதன் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
204 PS |
டார்க் |
300 Nm |
டிரான்ஸ்மிஷன் |
7-ஸ்பீடு DCT* |
டிரைவ்டிரெய்ன் |
FWD^ |
*DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
^FWD = ஃபிரன்ட்-வீல் டிரைவ்
மினி கன்ட்ரிமேன் எலக்ட்ரிக்
மினி கன்ட்ரிமேன் இந்தியாவிலும் முதன்முறையாக புதிதாக ஆல் எலக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விவரங்கள் இதோ:
வெளிப்புறம்
2024 மினி கன்ட்ரிமேன் எலெக்ட்ரிக் அதன் பாரம்பரிய 5-டோர் ஷில்அவுட்டை அப்படியே தக்க வைத்துக் கொண்டு சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது. இது குரோம் எலமென்ட் ஆக்ஸென்ட்களுடன் புதிய வடிவிலான செய்யப்பட்ட எண்கோண முன் கிரில்லை கொண்டுள்ளது, DRL -களுக்கான கஸ்டமைஸபிள் லைட் சிக்னேச்சர் உடன் புதிய எண்கோண LED ஹெட்லைட்கள் மூலம் நிரப்பப்படுகிறது.
பக்கவாட்டு தோற்றம் பழைய கன்ட்ரிமேனை நினைவூட்டும் வகையில் டால் பாய் எஸ்யூவி வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மற்றும் 20 இன்ச் வரையிலான அளவுகளில் கிடைக்கும் புதிய அலாய் வீல் வடிவமைப்புகளை உள்ளடக்கியது. பின்புறத்தில் புதிய வடிவிலான் LED டெயில்லைட்கள் இனி ஐகானிக் யூனியன் ஜாக் மோட்டிஃபை கொண்டிருக்கவில்லை. மாறாக நவீன பிக்சலேட்டட் தோற்றத்துடன் செவ்வக யூனிட் கொண்டுள்ளன. மினி எலக்ட்ரிக் கன்ட்ரிமேனை 6 கலர் ஆப்ஷன்களில் வழங்குகிறது: ஸ்மோக்கி கிரீன், ஸ்லேட் ப்ளூ, சில்லி ரெட் II, பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், பிளேசிங் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக்.
இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் அளவுகள் பின்வருமாறு:
நீளம் |
4,445 மி.மீ |
அகலம் |
2,069 மி.மீ |
உயரம் |
1,635 மி.மீ |
வீல்பேஸ் |
2,692 மி.மீ |
பூட் ஸ்பேஸ் |
460 லிட்டர் |
உட்புறம்
2024 மினி கன்ட்ரிமேன் EV -யின் உட்புறம் 2024 மினி கூப்பர் S -ல் காணப்படும் சின்னமான வட்ட தீம் தொடரும் அதே வேளையில் ஒரு புதிய குறைந்தபட்ச வடிவமைப்பைக் கொண்டுள்ளது. டேஷ்போர்டில் 9.4-இன்ச் சுற்று OLED டச் ஸ்கிரீன் உள்ளது. இது இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் டிஸ்ப்ளே ஆகிய இரண்டிற்கும் உதவுகிறது. டிரைவர் தொடர்பான அனைத்து தகவல்களும், பாரம்பரிய கருவி கிளஸ்டரின் தேவையை நீக்குகிறது. ஆப்ஷனலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஒரு ஆக்ஸசரீஸ்களாக கிடைக்கிறது.
பார்க்கிங் பிரேக், கியர் செலக்டர், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், எக்ஸ்பீரியன்ஸ் மோட் டோகிள் மற்றும் வால்யூம் கண்ட்ரோல் ஆகியவை இப்போது 2024 கூப்பர் S போன்ற ஸ்கிரீன் அடியில் டோக்கிள் பார் கன்சோலில் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பு கியர் லீவர் ஆக்கிரமித்த இடத்தில் வயர்லெஸ் சார்ஜிங் ட்ரே இப்போது கொடுக்கப்பட்டுள்ளது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
மினி கன்ட்ரிமேன் எலெக்ட்ரிக் ஆனது எலக்ட்ரிக்த்தில் சரிசெய்யக்கூடிய முன் இருக்கைகள், ஓட்டுநர் இருக்கைக்கான மசாஜ் ஃபங்ஷன், ஆம்பியன்ட் லைட்ஸ், எலக்ட்ரோக்ரோமிக் இன்சைட் ரியர்வியூ மிரர் (IRVM), ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது. இது பனோரமிக் சன்ரூஃபையும் கொண்டுள்ளது.
பாதுகாப்பிற்காக EV ஆனது லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வருகிறது, இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டீயரிங் அசிஸ்ட் மற்றும் லேன்-கீப்பிங் அசிஸ்ட் ஆகியவை அடங்கும். டிராக்ஷன் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவையும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
பவர்டிரெய்ன்
மினி எலக்ட்ரிக் கன்ட்ரிமேனுக்கு 66.45 kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படும் E வேரியன்ட்டை வழங்குகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
விவரங்கள் |
இ வேரியன்ட் |
பேட்டரி பேக் |
66.4 kWh |
எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
1 (ஃபிரன்ட் ஆக்ஸில்) |
பவர் |
204 PS |
டார்க் |
250 Nm |
வரம்பு (WLTP) |
462 கி.மீ |
மணிக்கு 0-100 கி.மீ |
8.6 வினாடிகள் |
கன்ட்ரிமேன் EV ஆனது 130 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது 30 நிமிடங்களுக்குள் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.
போட்டியாளர்கள்
2024 மினி கூப்பர் S ஹேட்ச்பேக்கிற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. BMW X1, மெர்சிடிஸ்-பென்ஸ் GLA, மற்றும் ஆடி Q3 ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.
மினி கன்ட்ரிமேன் BMW iX1 மற்றும் வால்வோ XC40 ரீசார்ஜ் ஆகிய கார்கள் உடன் போட்டியிடும்.
2024 மினி கூப்பர் S மற்றும் மினி கன்ட்ரிமேன் EV பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன? கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.