2016 மினி கூப்பர் மார்ச் 16 ல் அறிமுகம்
published on பிப்ரவரி 22, 2016 09:25 am by konark for மினி கூப்பர் மாற்றக்கூடியது
- 77 Views
- ஒரு கருத்தை எழுதுக
மினி கூப்பர் நிறுவனம் இந்திய சந்தைக்கான தங்களது முற்றிலும் புதிய 2016 கூப்பர் கன்வர்டிபல் கார்களை வரும் மார்ச் 16ல் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய UKL பிளேட்பார்மின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய கார்கள் CBU முறையில் ( ஓட்டுவதற்கு தயாரான நிலையில் முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யும் முறை ) இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பப்டுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் BMW இந்தியாவின் தலைவர் பிலிப் வான் சர் , இந்திய வாகன சந்தையில் 2016 கன்வர்டிபல் மற்றும் க்ளப்மேன் மாடல் கார்கள் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மில்லி இந்த 2016 கன்வர்டிபல் கார்களில் மென்மையான அதே சமயம் உறுதி மிக்க , மின்சார மோட்டாரின் உதவியுடன் இயங்கும் துணியினால் ஆன கூரை இணைக்கப்பட்டுள்ளது. இந்த கூரையை மின்சார உதவியுடன் திறக்கும் போது பின்புறம் பூட் லிட் பகுதியின் மேற்புறத்தில் கச்சிதமாக போய் பொருந்தி நிற்கிறது. இது தள்ளு வண்டியில் உள்ள கூரையை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. வெறும் 18 நொடிகளில் இந்த கூரையை மின்சார மோட்டாரின் உதவியுடன் திறக்கவோ மூடவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முந்தைய மாடலில் இருந்ததை விட வெகு லாவகமாக இந்த கூரை பகுதி இயங்குகிறது என்று மினி தெரிவித்துள்ளது.
இந்த அறிமுகமாக உள்ள 2016 கூப்பர் கன்வர்டிபல் தற்போது விற்பனையில் உள்ள மாடலை விட அளவில் சற்று பெரியதாக உள்ளது. நீளத்தில் 98 மில்லி மீட்டரும் , அகலத்தில் 44 மில்லிமீட்டரும் , உயரத்தில் 7 மில்லி மீட்டரும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வீல் பேஸ் 28mm அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் , காரின் உட்புறம் மட்டும் டிக்கியின் இட வசதிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த ப்ரீமியம் ஹேட்ச் பேக் கார்களில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 133.9 bhp அளவு ஆற்றலை உற்பத்தி செய்யும் 1.5 -லிட்டர் 3 - சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 115.9bhp அளவு சக்தியை வெளியிடும் 1.5 -லிட்டர் 3 – சிலிண்டர் டீசல் என்ஜின் ஆகியவை இந்த புதிய 2016 கூப்பர் கன்வர்டிபல் கார்களை சக்தியூட்டும் என்று தெரிகிறது.
இந்த புதிய கூப்பர் கன்வர்டிபல் கார்களின் விலை ரூ. 35 லட்சங்களை ஒட்டியே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிய வருகிறது. சொகுசு ஹேட்ச்பேக் பிரிவில் ,வோல்க்ஸ்வேகன் பீட்டில், அபர்த் 595 காம்பிடிசியோன் மற்றும் மெர்சிடீஸ் A க்ளாஸ் கார்களுடன் இந்த கார்கள் போட்டியிடும் என்று தெரிகிறது.
மேலும் வாசிக்க: ரூ.3.88 கோடியில், ஃபெராரி 488 GTB அறிமுகம்
0 out of 0 found this helpful