இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் மினி கன்ட்ரிமேன்: சீனாவில் வேவுப் பார்க்கப்பட்டது (விரிவான உட்புற அமைப்பின் படங்கள் உள்ளே)
published on டிசம்பர் 24, 2015 12:27 pm by manish for மினி கூப்பர் கிளப்மேன்
- 124 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதுடெல்லி:
வரும் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியை ஒட்டி, பெரும்பாலும் இந்திய சாலைகளுக்கு மினி கன்ட்ரிமேன் வந்து அடையலாம். இந்த காரின் ஒரு தயாரிப்பு மாதிரி சோதனை வாகனம், சீனாவில் உலா வந்த போது வேவுப் படத்தில் சிக்கியது. இந்த வேவுப் படத்தின் மூலம் இக்காரின் உட்புற அமைப்பை குறித்த தெளிவான விபரங்கள் காண கிடைத்தன. இந்த காரில் LED ஹெட்லெம்ப்கள் (LED DRL-கள் அம்சங்களை கொண்டது) மற்றும் டெயில்லைட்கள் ஆகியவை இருப்பதை காணலாம்.
இந்த காரின் உட்புற அமைப்பில், மினி கனெக்டேட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், LED அம்பியன்ட் லைட்டிங், மினி ஹெட்-அப் டிஸ்ப்ளே, பாதசாரிகள் (பிடிஸ்ட்ரியன்) மற்றும் மோதல் எச்சரிக்கை (கோலிசியன் வார்னிங்) ஆகியவற்றில் இன்-ஹேண்டாக பணியாற்றும் இனிட்டியல் பிரேக் அமைப்பு போன்றவற்றை பெற்றுள்ளது. இந்த கன்ட்ரிமேனில், தற்போதைய மினியின் வரிசையில் அமைந்த வாகனங்களில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட சுவிட்ச் கியரான HVAC கினாப்ஸ் மற்றும் ஸ்டீயரிங் வீல் போன்ற அம்சங்களை ஒருவரால் எளிதாக அடையாளம் காண முடியும்.
மினி கன்ட்ரிமேனில் தரமான என்ஜின் தேர்வுகளை உட்கொண்டதாக, மினியின் ட்வின்பவர் டர்போ 3 – மற்றும் 4-சிலிண்டர் என்ஜின்கள், பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு வகைகளிலும் பெற்றுள்ளது. புதிய மினி வரிசையில் அமைந்த மற்ற கார்களில் இருந்து இவை பகிர்ந்து கொள்ளப்பட்டவை ஆகும். மேலும் அடுத்த தலைமுறை கன்ட்ரிமேனில் ஒரு பிளெக்-இன் ஹைபிரிடு பவர்ட்ரெயினை கொண்டிருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த ஆற்றலகங்கள், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஒரு 8-ஸ்பீடு ஸ்டேப்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் என்று ஏதாவது ஒன்றில் இணைந்து செயலாற்றலாம். மேலும் இதன் தாய் நிறுவனத்தின் கச்சிதமான கிராஸ்ஓவரான இரண்டாம் தலைமுறையை சேர்ந்த BMW X1-ல் உள்ள பல கூறுகளையும், இது பகிர்ந்து கொண்டுள்ளது.
இந்த அடுத்த தலைமுறை கன்ட்ரிமேனில் ரிட்ரோ-மார்டன் ஸ்டைலிங் மற்றும் ஒரு முன்பக்க வீல் டிரைவ் கட்டமைப்பு ஆகியவற்றை மாற்றமின்றி தொடர்கிறது. மேலும் இரண்டாம் தலைமுறை மினி வரிசையில் காணப்படும் UKL பிளாட்பாமையே, இக்கார் பகிர்ந்து கொண்டுள்ளதை காணலாம். அடுத்த தலைமுறை கன்ட்ரிமேனில் முன்பக்க-வீல் டிரைவ் மற்றும் பின்பக்க-வீல் டிரைவ் ஆகிய இரண்டு கட்டமைப்புகளும் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
0 out of 0 found this helpful