மிஸ்டர் பீன்’: 25வது ஆண்டு விழாவை கொண்டாடும் (வீடியோ) வகையில் மினியில் உலா வந்த ரோவன் அட்கின்சன்
published on செப் 07, 2015 07:22 pm by manish for மினி கூப்பர் கிளப்மேன்
- 128 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: உலகளவில் 90-களில் பிரபலமாக இருந்த, சூழ்நிலைக்கு ஏற்ப நகைச்சுவையாக அமைந்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சினிமா காட்சியை மீண்டும் உருவாக்கி காட்டினார் ரோவன் அட்கின்சன். இந்த காட்சியில் ஒரு புதிய சேர் வாங்குவதற்கான தேடலில் ஈடுபடும் மிஸ்டர் பீன், அதனை வாங்கிய பிறகு, எதிர்பார்க்காத விசித்திரமான கண்டுபிடிப்பை காட்டும் வகையில் ஒரு மினி காரின் உதவி உடன் பயணிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த 60 வயதான இந்த நடிகர், சில காலமாக ஒதுங்கி இருந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு அதே காட்சியை திறந்தவெளியில் நடத்தியது, இந்திய டிவிகளில் பாகங்களாக (எப்பசோடு) காட்டப்பட்டது. இப்போது 25 ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த ஆங்கிலேய நடிகர் தனது எலுமிச்சை பச்சை நிறத்திலான பிரிட்டிஷ் லைலண்ட் மினி 1000 உடன் லண்டன் நகரின் வீதிகளிலும், பாக்கிங்காம் மாளிகையை சுற்றிலும் உலா வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. காரின் மேற்கூரையின் மீது கட்டப்பட்ட நிலையில் ரோவன் அமர்ந்திருந்த காட்சி, மேற்கூறிய படக் காட்சியை நினைவூட்டுவதாக இருந்தது.
மிஸ்டர் பீன் வேஷத்தில் இருந்த நடிகரை, பெயிண்ட் கேன்கள் மற்றும் வீடு துடைக்கும் துடைப்பான், அவரது பெடல் கன்ட்ரோல் எக்ஸ்டென்ஷன் ஆகியவை சேர்ந்து வேஷத்தை முழுமைப்படுத்தின. இவருடன், இவரது நம்பகமான மற்றும் அன்பு மிகுந்த டெடியும் பக்கவாத்தியமாக இருந்தார்.
இந்த நடிகரின் தனித்துவம் மிகுந்த முக பாவனைகள் கொண்டு ரசிகர்களை வாழ்த்துதல் மற்றும் ஒரு கேக் ஆகியவை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்தன. மேலும் இந்த காரில் டிவிட்டர் கீவேர்ட்களான #மிஸ்டர்பீன்25 என்று எழுதப்பட்டு, இவரது இந்த நிகழ்ச்சியின் பலவிதமான பீடுகளை பெற உதவும் வகையில் அமைந்தது. இவரது முதல் படமான மிஸ்டர் பீன், ஹாலிவுட்டின் வியாபாரத்தனமான மற்றும் மசாலா கலவையாக இருந்தது. ஆனால் மிஸ்டர் பீன்’ஸ் ஹாலிடே திரைப்படம் மூலம் அவருக்கு அடிப்படையாக அமைந்த பழைய நகைச்சுவை கதாபாத்திரத்திற்கே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அந்த கதாபாத்திரத்தின் முழு அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, ரோகனுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் இது போன்ற இடைவெளி இல்லாமல், பல படங்களை தொடர்ச்சியாக அளித்து நம்மை மகிழ்விப்பார் என்று நம்புவோம்.
0 out of 0 found this helpful