புதிய மினி கண்ட்ரிமேன் கார்கள் இந்தியாவில் ரூ. 36.5 லட்சத்திற்கு அறிமுகம் ஆகியுள்ளது.
published on ஆகஸ்ட் 06, 2015 11:22 am by nabeel for மினி கூப்பர் கன்ட்ரிமேன் 2018-2021
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
2014 நியூயார்க் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொலிவூடப்பட்ட மினி கண்ட்ரிமேன் கார்களை பிஎம்டபுள்யூ நிறுவனம் 36.5 லட்சம் என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிப்புற தோற்றத்தில் சிறிய மாற்றங்களே செய்யப்பட்டுள்ளன. இந்த 2015 கண்ட்ரிமேனில் புதிய முன்புற கிரில், புதிய அல்லாய் சக்கரங்கள், பகலிலும் ஒளிதரும் எல்இடி மற்றும் பனி விளக்குகள் (பாக் லாம்ப்) என்று மாற்றங்களை காணமுடிகிறது. மேலும் மூன்று விதமான வண்ணங்களில் இந்த புதிய கண்ட்ரிமேன் கார்கள் வெளிவந்துள்ளன. அடர்ந்த பச்சை(ஜங்கிள் கிரீன்), மெட்டாலிக் நீல நிறம் மற்றும் மெட்டாலிக் சாம்பல் நிறங்களில் கண்ட்ரிமேன் மிக அழகாக காட்சி அளிக்கிறது. இந்தியாவிற்குள் முழுமையாக தயாரான காராக இறக்குமதி செய்யப்பட்டு (சிபியூ வகையைச் சார்ந்து ) 2013 ஆம் ஆண்டு முதல் இங்கே பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு (அசெம்பிளிங்)) விற்பனைக்கு வருகின்றன.
புதிதாக பொருத்தப்பட்டுள்ள இன்போடைன்மென்ட் சிஸ்டம் மற்றும் கருப்பு நிற டயலை தவிர வேறு எந்த பெரிய அளவிலான மாற்றங்களையும் உட்புறத்தில் பார்க்க முடியவில்லை. ஸ்விட்ச் மற்றும் வென்ட் கள் குரோம் பூச்சுப் பெற்றுள்ளன. மற்றபடி அனைத்தும் அப்படியே உள்ளன. இந்த புதிய மினியை உள்ளிருந்து இயக்குவது 2 லிட்டர், 4 சிலிண்டர் பொருத்தப்பட்ட டர்போ சார்ஜ் டீசல் என்ஜின் ஆகும். இந்த இஞ்சின் 112 எச்பி சக்தியையும் 270 என் எம் என்ற அளவுக்கு முறுக்கு விசையையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. மேலும் ஆறு ஸ்டெப்டராணிக் கியர் சிஸ்டம் ( வேண்டும் போது தானியங்கியாகவோ அல்லது கைகளால் இயக்கக்கூடிய வகையிலோ எளிதில் மாற்றி அமைத்துக்கொள்ளும் அமைப்பு ) பொருத்தப்பட்டு உள்ளது. வெறும் 11.3 வினாடிகளில் 0 – 100 5 டோர் கி.மீ வேகத்தை தொட்டுவிடும் அபரிதமான ஆற்றல் இந்த என்ஜின் அமைப்புக்கு உண்டு என்பதை நன்கு புரிந்துக்கொள்ளலாம். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 185 கி.மீ. வேகம் வரை பாய்ந்து செல்லும் திறன் பெற்றது.
மேலும் பிஎம்டபுள்யூ இந்திய நிறுவனம் இந்த மினி கார்களை பல ரகங்களில் வெளியிட்டுள்ளன. அவைகலின் விவரம் பின்வருமாறு: மினி கூப்பர் டி 5, மினி கூப்பர் டி 5 டோர், மினி கூப்பர் டி 3 டோர் , மினி கூப்பர் எஸ் 3 டோர், மினி கூப்பர் கன்வர்டிபல் பற்றும் இந்த புத்தம் புதிய 2015 மினி கூப்பர் டி கண்ட்ரிமேன். விலையை பொறுத்தவரை மினி கூப்பர் டி 3 டோர் 28. 5 லட்சத்தில் தொடங்கி மினி கூப்பர் டி கண்ட்ரிமேன் 36.5 லட்சம் வரை பல் வேறு விலைகளில் கிடைக்கிறது.