சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 Kia Carnival காருக்கான முன்பதிவு தொடங்கியது

modified on செப் 16, 2024 12:03 pm by dipan for க்யா கார்னிவல்

லிமோசின் மற்றும் லிமோசின் பிளஸ் என இரண்டு வேரியன்ட்களில் கியா கார்னிவல் MPV கிடைக்கும்.

  • கியா நான்காம் தலைமுறை கார்னிவல் மாடலை அக்டோபரில் இந்தியாவிற்கு விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

  • இது வெர்டிகல் ஹெட்லைட்கள், கனெக்டட் LED DRL -கள் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

  • இரண்டாவது வரிசையில் கேப்டன் சீட்களுடன் 3-வரிசை சீட் ஆப்ஷன் கிடைக்கும்.

  • 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், வென்டிலேட்டட் முன் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள், டூயல் சன்ரூஃப்கள் மற்றும் 12-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம் ஆகியவை இதில் அடங்கும்.

  • பாதுகாப்பு -க்காக 8 ஏர்பேக்குகள், லெவல்-2 ADAS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.

  • 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் (193 PS/441 Nm) 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • விலை ரூ.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 கியா கார்னிவல் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் அக்டோபர் 3, 2024 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இப்போது இந்த காருக்கான முன்பதிவுகள் இப்போது இந்தியாவில் 2 லட்ச ரூபாய்க்கு ஆன்லைனில் மற்றும் கார் தயாரிப்பாளரின் பான்-இந்திய டீலர்ஷிப்களில் திறக்கப்பட்டுள்ளன. இந்த MPV ஏற்கனவே அதன் இரண்டாம் தலைமுறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் 2023 ஆண்டு அது விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. நீங்கள் ஆர்வமாக இருந்தால் அப்டேடட் நான்காவது தலைமுறை கியா கார்னிவல் காரில் உள்ள அனைத்தையும் விரைவாகப் பாருங்கள்:

மிரட்டலான வடிவமைப்பு

இந்திய-ஸ்பெக் கியா கார்னிவல் 2023 -ல் அப்டேட்டட் சர்வதேச-ஸ்பெக் மாடலை போலவே உள்ளது. இது கியாவின் சமீபத்திய வடிவமைப்பை அப்படியே பிரதிபலிக்கிறது, இதில் முக்கிய கிரில் (குரோம் கார்னிஷ் ஆகியவை இடம்பெற்றுள்ளன), வெர்டிகல் 4-பீஸ் LED ஹெட்லைட்கள் மற்றும் கனெக்டட் LED DRL -கள் ஆகியவை உள்ளன. இந்தியாவில் விற்கப்பட்ட முந்தைய மாடலை விட முன்பக்கம் பெரிய, நிமிர்ந்த மற்றும் பெரிய கிரில் உள்ளது.

பின்பக்க பயணிகளுக்கான பவர்-ஸ்லைடிங் டோர்களில் எந்த மாற்றமும் இல்லை. இது இரண்டாம் தலைமுறை கார்னிவலில் இருந்து தொடரும் விஷயம் ஆகும். புதிய மாடலில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்டுகளும் இருக்கும். இந்த MPV -யின் அளவுகள் கீழே உள்ளன:

அளவுகள்

2024 கியா கார்னிவல்

நீளம்

5,155 மி.மீ

அகலம்

1,995 மி.மீ

உயரம்

1,775 மி.மீ

வீல்பேஸ்

3,090 மி.மீ

பட்டு போன்ற இன்ட்டீரியர்

கியா கார்னிவலின் உட்புறமும் குளோபல்-ஸ்பெக் மாடலை போலவே உள்ளது. இது இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் மற்றும் கடைசி வரிசையில் ஒரு பெஞ்ச் இருக்கையுடன் 3-வரிசை செட்டப் கொண்டுள்ளது. இது இரண்டு உட்புற வண்ண தீம்களுடன் வருகிறது: நேவி ப்ளூ மற்றும் கிரே, மற்றும் டான் மற்றும் பிரவுன்.

ஒரு பிரீமியம் வசதி மற்றும் பாதுகாப்பு

2024 கார்னிவல் இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டச் ஸ்கிரீன் ஒன்று மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவுக்கு ஒன்று) மற்றும் 11-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது லும்பார் சப்போர்ட் உடன் 12-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை மற்றும் 8-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் பயணிகள் இருக்கை ஆகியவற்றைப் பெறுகிறது. இது வென்டிலேட்டட் ஹீட்டட் மற்றும் கால் நீட்டிப்பு ஆதரவுடன் இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகளை கொண்டுள்ளது. இரண்டு சிங்கிள்-பேன் சன்ரூஃப்கள், 3-ஜோன் ஆட்டோ ஏசி, ஒரு பவர்டு டெயில்கேட் மற்றும் 12-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளுடன் கியா கார்னிவலை வழங்குகிறது.

பாதுகாப்பிற்காக கார்னிவல் 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, நான்கு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் TPMS (டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம்) ஆகியவற்றுடன் வருகிறது. முன் மோதல் எச்சரிக்கை மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகள் உடன் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பையும் இது கொண்டுள்ளது.

மேலும் படிக்க: MG விண்ட்ஸர் EV பேட்டரி வாடகை திட்டத்துடன் வெளியீடு: இது இந்தியாவில் வெற்றிபெறுமா? எங்கள் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இங்கே ?

பவர்டிரெய்ன் ஆப்ஷன்

2024 கியா கார்னிவல் ஒரு பவர்டிரெய்ன் ஆப்ஷனை மட்டுமே பெறுகிறது. விவரங்கள் பின்வருமாறு:

விவரங்கள்

2024 கியா கார்னிவல்

இன்ஜின்

2.2 லிட்டர் டீசல்

பவர்

192 PS

டார்க்

441 Nm

டிரான்ஸ்மிஷன்

8-ஸ்பீடு ஆட்டோமெட்டிக்

2023 -ல் நிறுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை மாடலில் வழங்கப்பட்ட அதே இன்ஜின் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச-ஸ்பெக் கியா கார்னிவல் 3.5-லிட்டர் V6 பெட்ரோல் (287 PS/353 Nm) மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் (242 PS/367 Nm) உடன் உட்பட பல இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது.

கூடுதல் விலை நிர்ணயம்

2024 கியா கார்னிவல் விலை சுமார் ரூ.40 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மற்றும் மாருதி இன்விக்டோ போன்ற மாடல்களுக்கு பிரீமியம் மாற்றாக இது இருக்கும். கூடுதலாக டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லெக்ஸஸ் LX ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இது மிகவும் விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும்.

2024 கியா கார்னிவல் பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

d
வெளியிட்டவர்

dipan

  • 126 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Kia கார்னிவல்

கம்மெண்ட்டை இட
2 கருத்துகள்
S
suhas
Sep 18, 2024, 12:43:03 PM

Compared to vellfire anything is cheap. But 50 lakhs is too high for Kia.

D
dr chiranjeevi manohar
Sep 17, 2024, 4:23:01 PM

Overall good.What about it's safety features

Read Full News

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை