2024 Hyundai Creta பழையது மற்றும் புதியது : முக்கியமான வித்தியாசங்கள் என்ன ?
published on ஜனவரி 22, 2024 04:01 pm by ansh for ஹூண்டாய் கிரெட்டா
- 39 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த அப்டேட் மூலமாக, ஹூண்டாய் கிரெட்டா -வுக்கு புதிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேபினும் புதுப்பிக்கப்பட்டுள்ளது மேலும் பல புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் விற்பனையில் உள்ள இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா -க்கு இப்போது ஃபேஸ்லிப்ட் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் அதன் ஸ்டார் எஸ்யூவி -க்கு ஒரு பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளது. இரண்டாம் தலைமுறை கார் அறிமுகப்படுத்தப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த கீழே உள்ள விரிவான படங்களில் காம்பாக்ட் எஸ்யூவி எவ்வளவு மாறியிருக்கின்றது என்பதை நீங்கள் பார்க்கலாம்.
முன்பக்கம்
2020 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய பதிப்போடு ஒப்பிடும்போது புதிய கிரெட்டாவின் முன்பக்கம் முழுமையாக மாற்றப்பட்டுள்ளதை பார்க்கலாம். முன்பக்க தோற்றத்தை பொறுத்தவரையில் புதிய கிரெட்டா -வில் புதிய கிரில் (ஹூண்டாய் வென்யூ -வில் உள்ளதை போன்றது) கொண்ட தட்டையாக உள்ளது. மேலும் பானெட் முழுவதும் உள்ள DRL -கள் மற்றும் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள செவ்வக ஹெட்லைட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்க பம்பர் மேலும் மிரட்டலான தோற்றத்திற்காக புதிய வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது..
இதையும் பார்க்கவும்: புதிய ஹூண்டாய் Hyundai Creta E Base வேரியன்ட்டை பற்றிய விவரங்களை 5 படங்கள் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்
பழைய கிரெட்டாவை பொறுத்தவரை, முன்பக்கம் சற்று வளைவான வடிவமைப்பைக் கொண்டிருந்தது, பானட்டின் மேல் ஷார்ப் லைன்கள். அதன் முக்கோண ஹெட்லேம்ப் யூனிட் பல LED DRL -களால் சூழப்பட்டுள்ளன, மேலும் பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவை சிறியதாகவே இருந்தன.
பக்கவாட்டு தோற்றம்
பக்கவாட்டு தோற்றத்தைப் பொறுத்தவரை, பெரிய மாற்றமில்லை. புதிய கிரெட்டா அதே ஷேடில் இருக்கின்றது மற்றும் டோர் லைன்களும் ஒரே மாதிரியானவை. புதிய கிரெட்டாவும், பழைய பதிப்பை போலவே அதே சி-பில்லர் ஃபினிஷை பெறுகிறது.
இருப்பினும், ஒரு சில மாற்றங்களையும் பார்க்க முடிகின்றது. முற்றிலும் புதிய வடிவமைப்பைக் கொண்ட 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் புதிய காரில் உள்ளன, முன்பு வட்டமாக இருந்த எரிபொருள் மூடி மூடி இப்போது சதுர வடிவில் உள்ளது.
பின்புறம்
கிரெட்டாவின் பின்புற தோற்றம் முற்றிலும் புதிதாக உள்ளது. இது நேர் கோடுகளுடன், முன்புறத்தைப் போலவே ஒரு தட்டையான பின்புற முனை கொண்டதாக உள்ளது. இணைக்கப்பட்ட எல்இடி டெயில் லைட்டுகள்தான் இங்கு நாம் பார்க்கக்கூடிய மிகப்பெரிய மாற்றம். முந்தைய பதிப்பில் டெயில்லேம்ப்கள் ஹெட்லைட்கள் மற்றும் DRL -களின் ஸ்பிளிட் வடிவமைப்பை முன்பக்கத்தில் பிரதிபலித்தது.
மேலும் படிக்க: 2024 Hyundai Creta இந்தியாவில் அடுத்த N லைன் மாடலாக வெளியாகவுள்ளதா ?
புதிய கிரெட்டா முற்றிலும் புதிய வடிவிலான பம்பரை பெறுகிறது மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுடன் வருகிறது.
டாஷ்போர்டு
2024 ஃபேஸ்லிஃப்ட்டுடன் கிரெட்டாவின் டேஷ்போர்டு முற்றிலும் மாறிவிட்டது. இது இப்போது டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே தீம், லெயர்டு எலமென்ட்களுடன் வருகிறது. வெளிச்செல்லும் பதிப்பில் இரண்டு கேபின் தீம்கள் இருந்தன: ஆல் பிளாக் மற்றும் பிளாக் வித் பெய்ஜ் என இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கும்.
புதிய கிரெட்டாவின் மிகப்பெரிய மாற்றம் புதிய திரை அமைப்பாகும். பழைய SUV ஆனது 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் 7-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைப் பெறுகிறது, இது டூயல்-இன்டெகிரேட்டட்10.25-இன்ச் டிஸ்ப்ளேக்களுடன் (டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே) மாற்றப்பட்டுள்ளது.
மற்றொரு மாற்றம் புதிய சென்டர் கன்சோல் ஆகும், இது இப்போது கிளாஸி பிளாக் ஃபினிஷ் மற்றும் டூயல் டோன் கிளைமேட் கன்ட்ரோல் உடன் வருகிறது.
இருக்கைகள்
ஹூண்டாய் இருக்கைகளையும் மாற்றியமைத்துள்ளது. பழைய கிரெட்டாவில் கேபின் தீம் சார்ந்து பிளாக் அல்லது பெய்ஜ் கலர் சீட்கள் இருந்தன, ஆனால் புதிய கார் டூயல்-டோன் பிளாக் மற்றும் கிரே கலர் லெதரெட் இருக்கைகளுடன், வித்தியாசமான வடிவமைப்புடன் வருகிறது.
பின் இருக்கைகளும், முன்பக்க இருக்கைகளை போன்றே உள்ளன.
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவை விட இலகுவான கேபின் தீம் மூலமாக கேபின் கூடுதலான வென்டிலேஷன் உணர்வை தரும் அதே வேளையில், பனோரமிக் சன்ரூஃப் வசதியும் உள்ளது.
விலை
எக்ஸ்-ஷோரூம் விலை |
|
2024 ஹூண்டாய் கிரெட்டா |
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா |
ரூ.11 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை |
ரூ.10.87 லட்சம் முதல் ரூ.19.20 லட்சம் |
ஹூண்டாய் கிரெட்டாவின் டாப்-ஸ்பெக் எடிஷனின் விலை ரூ.80,000 அதிகரித்துள்ளது. பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் ரூ.13,000 கூடுதலாக உள்ளது. மேலே உள்ள புதிய கிரெட்டாவின் விலை விவரங்கள் அறிமுக காலத்துக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது, வரும் மாதங்களில் கண்டிப்பாக உயரும். 2024 கிரெட்டாவை பற்றிய விவரங்கள், வேரியன்ட் வாரியான விலை மற்றும் அம்சங்கள் போன்ற மீதமுள்ள விவரங்களை நீங்கள் இங்கே பார்க்கலாம்
மேலும் படிக்க: கிரெட்டா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful