சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Skoda Enyaq iV எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ansh ஆல் பிப்ரவரி 02, 2024 01:43 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
26 Views

ஸ்கோடா என்யாக் iV, இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. ஆகவே விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.

  • என்யாக் iV கார் உலகளவில் மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன: 52 kWh, 58 kWh மற்றும் 77 kWh, 510 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.

  • முதல் இரண்டும் ரியர்-வீல்-டிரைவ் ட்ரெயின் செட்டப் உடன் வருகின்றன, மூன்றாவது ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் செட்டப்களுடன் வருகிறது.

  • இது 125 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது, இதைப் பயன்படுத்தி வெறும் 38 நிமிடங்களில் 5 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

  • 13-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 9 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்பட்லாம்.

  • இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில், மற்றொரு EV-யாக ஸ்கோடா என்யாக் iV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சோதனை செய்யப்படும் போது சில சில யூனிட்களை பார்க்க முடிந்தது, இருந்தாலும் ஸ்கோடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கோடா இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி -யை இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் அது அறிமுகப்படுத்தப்படும் போது ஸ்கோடா -வின் முதல் EV -யாக இருக்கும். ஸ்கோடாவின் எலெக்ட்ரிக் காரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இங்கே உள்ளன.

வெளிப்புறம்

முன்பக்கத்தில், என்யாக் ஸ்கோடாவின் சின்னமான கிரில் வடிவமைப்புடன் வருகிறது, ஆனால் 130 LED -களை உள்ளடக்கிய முன்பக்கத்தில் இல்லுமினேட்டட் யூனிட் ஆக செயல்படுகிறது. ஹெட்லைட்கள் மற்றும் கீழ் முனையில் மெலிதான LED DRL உடன் உள்ளன. இது பானட் மற்றும் பம்பர்களில் ஷார்ப் லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன, இது ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்தை கொடுக்கின்றது.

பக்கவாட்டில் இதைப் பார்க்கும்போது, ​​எலக்ட்ரிக் கிராஸ்ஓவரின் சாய்வான கூரையை பார்க்க முடியும், இது ஏரோடைனமிக் செயல்திறனுக்கு உதவும் மற்றும் 21-இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் ஆகியவற்றையும் உங்களால் பார்க்க முடியும். பின்புற வடிவமைப்பு ஒப்பிடுகையில் இன்னும் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் உள்ளது. இது ஒரு இன்டெகிரேட்டட் ஸ்பாய்லர், நடுவில் 'ஸ்கோடா' முத்திரையுடன் கூடிய நேர்த்தியான டெயில் லைட்ஸ் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் கொண்ட டார்க் பிளாக் பம்பர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

கேபின்

உள்ளே, குளோபல்-ஸ்பெக் என்யாக் iV தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களின் அடிப்படையில் வெவ்வேறு தீம்களுடன் குறைந்தபட்ச ஆனால் பிரீமியம் கேபினை பெறுகிறது. டாஷ்போர்டில் பல லேயர்கள் உள்ளன, அதன் மேல் பெரிய டச் ஸ்கிரீன்க்கு இடமளிக்க நடுவில் பெரிதாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Tata Curvv பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 -ல் தயாரிப்புக்கு நெருக்கமான வடிவத்தில் காட்சிப்படுத்தப்பட்டது

ஸ்கோடா எலக்ட்ரிக் எஸ்யூவி -யானது லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, டாஷ்போர்டின் அகலம் முழுவதும் பவர்டு ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் முன் சென்டர் ஆர்ம்ரெஸ்டுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ள சென்டர் கன்சோலை பெறுகிறது.

பேட்டரி பேக் ஆப்ஷன்கள்

பேட்டரி பேக் (சராசரி)

52 kWh

58 kWh

77 kWh

பவர்

148 PS

179 PS

306 PS வரை

டார்க்

220 Nm

310 Nm

460 Nm வரை

டிரைவ்டிரெய்ன்

RWD

RWD

RWD/ AWD

கிளைம்டு ரேஞ்ச் (WLTP)

340 கி.மீ

390 கி.மீ

510 கிமீ வரை

சர்வதேச அளவில், ஸ்கோடா என்யாக் iV மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறுகின்றது: 52 kWh, 58 kWh மற்றும் 77 kWh (சாராசரியான புள்ளிவிவரங்கள்). முதல் இரண்டு ரியர்-வீல் டிரைவ் அமைப்பில் வருகின்றன, மேலும் பெரியது டூயல்-மோட்டார் ஆல்-வீல்-டிரைவ் செட்டப் தேர்வுடன் வருகிறது.

மேலும் படிக்க: 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: டாடா நெக்ஸான் EV டார்க் பதிப்பு வெளியிடப்பட்டது

என்யாக் iV கார் 125 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது, அதைப் பயன்படுத்தி அதன் பேட்டரி பேக்கை வெறும் 38 நிமிடங்களில் 5 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

என்யாக் iV என்பது ஸ்கோடாவின் நிறைய வசதிகளைக் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி -யாகும். வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 13-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், மசாஜ் அம்சத்துடன் பவர்டு டிரைவர் இருக்கை, ஹீட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள், 3 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ: Mercedes-Benz EQG கான்செப்ட் இந்தியாவில் அறிமுகமாகிறது

பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 9 ஏர்பேக்குகள், ABS வித் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்(TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்), பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

CBU (முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டது) மாடலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது, ஸ்கோடா என்யாக் iV -யின் விலை ரூ.60 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது கியா EV6, ஹூண்டாய் IONIQ 5, மற்றும் வால்வோ XC40 ரீசார்ஜ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Share via

Write your Comment on Skoda என்யாக்

explore similar கார்கள்

ஸ்கோடா என்யாக்

4.45 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
Rs.65 லட்சம்* Estimated Price
அக்டோபர் 16, 2025 Expected Launch
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

ஓலா எலக்ட்ரிக் கார்

4.311 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
Rs.40 லட்சம்* Estimated Price
டிசம்பர் 16, 2036 Expected Launch
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை