சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

அக்டோபர் மாதத்தில் விலை உயர்வை பெறப்போகும் 2023 கியா செல்டோஸ் மற்றும் கியா கேரன்ஸ்

க்யா Seltos க்காக செப் 28, 2023 06:15 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

இதன் மூலமாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2023 கியா செல்டோஸின் அறிமுக விலை சலுகைகள் முடிவுக்கு வருகின்றன

  • 2023 செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் விலை இரண்டு சதவீதம் வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்போது கிடைக்கப் பெற்ற செய்திகளின்படி, அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட செல்டோஸில் முதலீடுகள் ஆகியவை விலை உயர்வுக்கான காரணங்களாக நிறுவனத்தின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

  • செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் இரண்டும் ஒரே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகின்றன, இருப்பினும் இந்த MPV -யானது CVT ஆட்டோமேட்டிக்கை இழக்கிறது.
  • இந்த விலை உயர்வு அக்டோபர் 1. 2023 முதல் அமலுக்கு வரும்.

நிதியாண்டின் இரண்டாம் பாதியை நெருங்கி வரும் தருணத்தில், கார் உற்பத்தியாளர்கள் விலையை மாற்றத் தொடங்கியுள்ளனர். அக்டோபர் முதல் 2023 கியா செல்டோஸ் மற்றும் கியா கோன்ஸ் ஆகிய இரண்டு பிரபலமான மாடல்களுக்கான விலை உயர்வை அறிமுகப்படுத்துவதன் மூலம் கியா மஹிந்திராவின் வழியை பின்பற்றுகிறது. கேரன்ஸ் இந்த ஆண்டு அதன் இரண்டாவது விலை உயர்வை பெறும், அதே சமயம் ஃபேஸ்லிஃப்டட் செல்டோஸின் அறிமுக விலை சலுகைகள் முடிவுக்கு வருவதையும் இது குறிக்கும்.

விலை எவ்வளவு உயரலாம் ?

அறிக்கைகளின்படி, 2023 செல்டோஸ் மற்றும் கேரன்ஸின் விலை 2 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தேசியத் தலைவர் ஹர்தீப் எஸ் பிரார், பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பல நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தாலும், கியா அவ்வாறு செய்வதை தவிர்த்து வந்தது. கியா ஜூலை மாதம் புதுப்பிக்கப்பட்ட செல்டோஸை சந்தையில் அறிமுகப்படுத்தியது, மேலும் 2023 செல்டோஸின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முதலீடு சென்றதால், அதன் விலையை திருத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், இந்த அறிக்கைகளின்படி இந்த சுற்று உயர்வுகளில் சோனெட் சப்காம்பாக்ட் எஸ்யூவி -யின் விலையை கியா அதிகரிக்காது.

இதையும் பாருங்கள்: கூகுள் 25 ஆண்டுகள் நிறைவு செய்கிறது: நவீன கார்களை எப்படி வடிவமைத்தது மற்றும் எங்கள் ஓட்டுநர் அனுபவங்கள் என்பது பற்றி இங்கே.

செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் என்ன வழங்குகிறது?

அப்டேட்டட் கியா செல்டோஸ் டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்), டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது. இது ஒரு ஏர் பியூரிபையர், ஆம்பியன்ட் லைட்ஸ், வார்னிங் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளையும் பெறுகிறது. அதன் பாதுகாப்பு தொகுப்பில், இப்போது ஆறு ஏர்பேக்குகள் (தரநிலை), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் லேன்-கீப் அசிஸ்ட், முன்னோக்கி-மோதல் எச்சரிக்கை மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.

கியா சமீபத்தில் செல்டோஸின் மிகவும் மலிவு விலையில் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பொருத்தப்பட்ட வேரியன்ட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதைப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே காணலாம்.

மறுபுறம், கேரன்ஸ் MPV ஆனது 6- அல்லது 7-இருக்கை அமைப்புடன் 3-வரிசை காராக வருகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரையில் ஆறு ஏர்பேக்குகள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும்டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன.

பவர்டிரெயின்கள்

2023 கியா செல்டோஸ் மற்றும் கியா கேரன்ஸ் இரண்டும் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகின்றன, இதில் ஒரு இயற்கையான-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், ஒரு டர்போ-பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் ஆகியவை அடங்கும். அவற்றின் விவரக்குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

இன்ஜின்

1.5 –லிட்டர் பெட்ரோல்

1.5-லிட்டர் T-GDi டர்போ பெட்ரோல்

1.5-லிட்டர் டீசல்

பவர்

115PS

160PS

116PS

டார்க்

144Nm

253Nm

250Nm

டிரான்ஸ்மிஷன்

6-MT, CVT (செல்டோஸ் மட்டும்)

6-iMT, 7-DCT

6-iMT, 6-AT

டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் வழக்கமான மேனுவல் ஷிஃப்டர் ஆப்ஷனை பெறவில்லை. அதற்கு பதிலாக, கியா அவர்களுக்கு அதன் iMT (கிளட்ச் பெடல் இல்லாமல் ஒரு மேனுவலை) வழங்குகிறது.

தற்போதைய விலை வரம்பு

தற்போது, ​​2023 கியா செல்ட்டோஸ் ரூ. 10.90 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் விலை வரம்பிலும் (அறிமுகம்), கியா கேரன்ஸ் ரூ. 10.45 லட்சம் முதல் ரூ. 18.95 லட்சம் விலை வரம்பிலும் (இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. செல்டோஸ் வாகனம் மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.

கேரன்ஸ், மாருதி எர்டிகா மற்றும் மாருதி XL6, க்கு ஒரு பிரீமியம் மாற்றாக உள்ளது, அதே நேரத்தில் இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மாருதி இன்விக்டோ மற்றும் டொயோட்டா இன்னோவா ஆகியவற்றிற்கு விலை குறைவான மாற்றாகக் கருதப்படலாம்.

மேலும் படிக்க: செல்டோஸ் டீசல்

Share via

Write your Comment on Kia Seltos

explore similar கார்கள்

க்யா Seltos

டீசல்19.1 கேஎம்பிஎல்
பெட்ரோல்17.7 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை