• English
  • Login / Register

2 மாதங்களில் 50,000 முன்பதிவுகளைக் கடந்த Kia Seltos Facelift, இந்த பண்டிகை காலத்தில் இரண்டு புதிய ADAS வேரியன்ட்களையும் பெறுகிறது

published on செப் 21, 2023 06:46 pm by shreyash for க்யா Seltos

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த புதிய வேரியன்ட்களை நீங்கள் டாப்-ஸ்பெக் டிரிம்களுடன் ஒப்பிடுகையில் ரூ.40,000 வரை சேமிக்க முடியும். இருந்தாலும், அம்சங்கள் அளவில் சில சமரசங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

Kia Seltos Facelift Surpasses 50,000 Bookings In 2 Months, Gets Two New ADAS Variants This Festive Season

  • 2023 செல்டோஸின் ஹையர் வேரியன்ட் (HTX  முதல்) மொத்த புக்கிங்குகளில் 77 சதவீதத்தை கொண்டுள்ளன.

  • அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்(ADAS) பொருத்தப்பட்ட வேரியன்ட்களுக்காக 47 சதவீத ரிசர்வேசன்கள் செய்யப்பட்டுள்ளன.

  • இந்த பண்டிகை காலத்தில் செல்டோஸின் விலை குறைவான ADAS GTX+ (S) மற்றும் X-லைன் (S)  வேரியன்ட்களை கியோ-வும் அறிமுகப்படுத்தியது.

  • இந்த புதிய வேரியன்ட்கள் பெட்ரோலில் 7-ஸ்பீடு DCT மற்றும் டீசலில் 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனிலும் மட்டுமே கிடைக்கிறது.

இந்த வருடத்தில் ஜூலை மாதத்தில்  கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் , அறிமுகப்படுத்தப்பட்டது, வெறும் இரண்டு மாதங்களில் 50,000க்கும் அதிகமான புக்கிங்குகளை கடந்து அது சந்தையின் கவனத்தை மீண்டும் ஈர்த்தது.  கார் தயாரிப்பு நிறுவனத்தின்படி, 2023 செல்டோஸிற்காக தினமும் 806 ரிசர்வேசன்கள் செய்யப்படுகின்ன.

செல்டோஸின் உயர் வேரியன்ட்களுக்காக(HTX வேரியன்ட்கள் முதலாக) 77 சதவீத புக்கிங்கள் செய்யப்பட்டுள்ளது மற்றும் அதிலும் அட்வான்ஸ்டு டிரைவிர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) பொருத்தப்பட்ட வேரியன்ட்களுக்காக 47 சதவீத ரிசர்வேசன்கள் செய்யப்பட்டிருந்தன,   கியா  ADAS பொருத்தப்பட்ட இரண்டு புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது : GTX+ (S) மற்றும் X-லைன் (S). கீழே உள்ள அட்டவணையில் அவற்றின் விலைகளின் விவரங்கள் உள்ளன.

 
புதிய  வேரியன்ட்கள்

 
ஏற்கனவே உள்ள GTX+ மற்றும் X-Line வேரியன்ட்கள்

 வித்தியாசம்

 
GTX+ (S) 1.5 டர்போ-பெட்ரோல் 7-ஸ்பீடு DCT - ரூ 19.40 லட்சம்

 
GTX+ 1.5 டர்போ பெட்ரோல் 7-ஸ்பீடு DCT - ரூ 19.80 லட்சம்

 
-ரூ 40,000

 
X-Line (S) 1.5 டர்போ-பெட்ரோல் 7-ஸ்பீடு DCT - ரூ 19.60 லட்சம்

 
X-லைன் 1.5 டர்போ-பெட்ரோல் 7-ஸ்பீடு DCT - ரூ 20 லட்சம்

 
-ரூ 40,000

 
GTX+ (S) 1.5 டீசல் 6-ஸ்பீடு AT - ரூ 19.40 லட்சம்

 
GTX+ 1.5 டீசல் 6-ஸ்பீடு AT - ரூ 19.80 லட்சம்

 
-ரூ 40,000

 
X-லைன் (S) 1.5 டீசல் 6-ஸ்பீடு AT - ரூ 19.60 லட்சம்

 
X-லைன் 1.5 டீசல் 6-ஸ்பீடு AT- ரூ 20 லட்சம்

 
-ரூ 40,000

Kia Seltos Facelift Surpasses 50,000 Bookings In 2 Months, Gets Two New ADAS Variants This Festive Season

GTX+,க்கு கீழே GTX+ (S) இடம்பெற்றுள்ளது, அதேபோன்று டாப்-ஸ்பெக் X-லைன்-க்கு கீழ் X-லைன் (S) இடம் பெற்றுள்ளது. கேமராவை ரிவர்ஸ் செய்வதற்காக மட்டுமே நீங்கள் 360 டிகிரி கேமராவை வாங்க விரும்பினால், மற்றும் பிராண்டு அல்லாத 6-ஸ்பீக்கர் செட் அப்பிற்கான 8-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம் ஆகியவை உள்ள இந்த வேரியன்ட்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால் ரூ.40,000 வரை நீங்கள் சேமிக்க முடியும்.

10.25-இன்ச் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்அப், டூயல்-ஜோன் ஆட்டோமெட்டிக் AC, ஏர் ப்யூரிஃபையர், 8-வே அட்ஜஸ்டபிள் பவர்டு டிரைவர்ஸ் சீட், ஆம்பியன்ட் லைட் செட்டப், மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட GTX+ மற்றும் X-லைன் -லிருந்து பெற்ற மற்ற அம்சங்களை கொண்டுள்ள புதிய (S) வேரியன்ட் விற்பனைக்கு தயாராக உள்ளன. பாதுகாப்பு தொழில்நுட்பத்தை பொருத்தவரை டாப்-ஸ்பெக் வேரியன்ட்களை போலவே புதிய வேரியன்ட்களும் உள்ளன. லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்டு-கொலிசன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற ADAS  அம்சங்களுடன், அது ஆறு ஏர்பேகுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில்-அசிஸ்ட் கன்ட்ரோல் (HAC), மற்றும் நிலையானதாக டயர் பிரசர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) போன்றவற்றை பெறுகிறது.

மேலும் படிக்க: சன்ரூஃப் கொண்ட Kia Sonet இப்போது விலை குறைந்துள்ளது 

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்

Kia Seltos Facelift Surpasses 50,000 Bookings In 2 Months, Gets Two New ADAS Variants This Festive Season

செல்டோஸின் புதிய வேரியன்ட்களை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களை 7-ஸ்பீடு DCT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கியா வழங்குகிறது. இந்த இரண்டு இன்ஜின்களும் செல்டோஸின் கீழ் மற்றும் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களுடன் 6-ஸ்பீடு iMT (கிளட்ச் அல்லாத மேனுவல்) உடனும் வழங்குகிறது.

குறைவான காத்திருக்கும் காலமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Kia Seltos Facelift Surpasses 50,000 Bookings In 2 Months, Gets Two New ADAS Variants This Festive Season

இந்த புதிய வேரியன்ட்களின் அறிமுகத்துடன், செல்டோஸின் காத்திருப்பு காலம் 15 முதல் 16 வாரங்களிலிருந்து 7 முதல் 9 வாரங்களாக குறையும் என கியா எதிர்பார்க்கிறது. இதுவரை, செல்டோஸ் 2019 -ல் அதன் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து சுமார் 4 லட்சம் வாடிக்கையாளர்களை இந்தியாவில் பெறறுள்ளது.

விலை வரம்பு மற்றும் போட்டியாளர்கள்

கியா செல்டோஸ் கார்களின்  விலை ரூ. 10.90 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம் டெல்லி) இருக்கும். அது மாருதி சுஸூகி கிரான்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர் ,ஃபோக்ஸ்வேகன் டைகுன் , ஸ்கோடா குஷாக் ,ஹீண்டாய் கிரெட்டா  மற்றும்  MG ஆஸ்டர் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது

மேலும் படிக்க: கியா செல்டோஸ் டீசல்

was this article helpful ?

Write your Comment on Kia Seltos

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • M ஜி Majestor
    M ஜி Majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience