சன்ரூஃப் கொண்ட Kia Sonet இப்போது விலை குறைந்துள்ளது
published on ஆகஸ்ட் 29, 2023 04:52 pm by rohit for க்யா சோனெட் 2020-2024
- 46 Views
- ஒரு கருத்தை எழுதுக
சன்ரூஃப் முன்பு அதே வேரியன்ட்டில் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்பட்டது.
-
கியா, சோனெட்டை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மூன்று வேரியன்ட்களில் மட்டுமே வழங்குகிறது: HTE, HTK மற்றும் HTK+.
-
1.2 லிட்டர் பெட்ரோல் HTK+ வேரியன்ட் இப்போது சன்ரூஃப் பெறுகிறது மற்றும் அதன் விலை ரூ.9.76 லட்சம்.
-
சோனெட்டின் HTK+ ஆட்டோ AC, 8 இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் நான்கு ஏர்பேக்குகளுடன் வருகிறது.
-
1.2-லிட்டர் யூனிட் தவிர, சோனெட் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் வருகிறது.
-
சப் -4m எஸ்யூவி வேரியன்ட்ளின் விலை ரூ. 7.79 லட்சம் முதல் ரூ. 14.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும்.
கியா சோனெட் ஒரு சிறிய அப்டேட்டை பெற்றுள்ளது, இது சிங்கிள்-பேன் சன்ரூஃப் -ன் மேலும் விலை குறைந்துள்ளது. இது இப்போது HTK+ வேரியன்ட்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ரூ.9.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இந்த இன்ஜினுடன் வழங்கப்படும் மற்ற சோனெட் வேரியன்ட்கள் HTE மற்றும் HTK ஆகும். 1-லிட்டர் டர்போ-பெட்ரோலுடன் தொடர்புடைய வேரியன்ட் ஏற்கனவே சன்ரூஃபை பெற்றுள்ளது. இது சோனெட்டில் ரூ.70,000 க்கு மேல் சன்ரூஃபை குறைவான விலையில் கிடைக்க செய்கிறது.
வேறு ஏதாவது மாற்றம் உள்ளதா ?
HTK+, 1.2-லிட்டர் பெட்ரோல் கார் வேரியன்ட் சன்ரூஃப் சேர்க்கப்படுவதை தவிர, எஸ்யூவி -யின் உபகரணப் பட்டியலை கியா இணைக்கவில்லை. சோனெட் 1.2-லிட்டர் HTK+ ஆனது ஆட்டோ ஹெட்லைட்கள், ஆட்டோ AC, 8-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட், உயரத்தை சரி செய்து கொள்ளக் கூடிய டிரைவர் இருக்கை மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற அம்சங்களை இன்னும் கொண்டுள்ளது.
சப்-4m கியா எஸ்யூவி -யின் உயர் வேரியன்ட், பெரிய 10.25-இன்ச் தொடுதிரை, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பல உபகரணங்களை பெறுகின்றன.
நான்கு ஏர்பேக்குகள், EBDஉடன் கூடிய ABS , டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ரியர் டிஃபோகர் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா மூலம் பயணிகளின் பாதுகாப்பு கவனிக்கப்படுகிறது. ஹையர் கார் வேரியன்ட்களில் ஆறு ஏர்பேக்குகள், ஆட்டோ-டிம்மிங் IRVM மற்றும் வாஷருடன் கூடிய பின்புற வைப்பர் ஆகியவை கிடைக்கும்.
மேலும் காண: சோதனையின் போது தென்பட்ட Kia Sonet Facelift ;2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படலாம்
இன்ஜின்களின் அதே தொகுப்பு
கியா சோனெட் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.லிட்டர் டர்போ- பெட்ரோல் இன்ஜின் (120PS /172Nm) மற்றும் 1.2-லிட்டர்பெட்ரோல் இன்ஜின் (83PS /115Nm) மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்(115PS /250Nm) உடன் வருகிறது. டர்போ-பெட்ரோல் இன்ஜின் 6-ஸ்பீடு iMT (கிளட்ச்லெஸ் மேனுவல்) அல்லது 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) உடன் இணைக்கப்பட்டுள்ளது, 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுக்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு iMT அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் டீசல் யூனிட் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று இன்ஜின்களுக்கும் மேனுவல் மற்றும் iMT ஆப்ஷன்களுடன் HTK+ வேரியன்ட்டை கியா வழங்குகிறது.
விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா அதன் சப்-4m எஸ்யூவி -யை ரூ.7.79 லட்சம் முதல் ரூ.14.89 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்பனை செய்கிறது. டாடா நெக்ஸான், நிஸான் மேக்னைட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, மாருதி பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர் மற்றும் சப்-4mகிராஸ் ஓவரான மாருதி ஃப்ரான்க்ஸ் ஆகியவற்றுடன் சோனெட் போட்டியிடுகிறது .
மேலும் படிக்க: சோனெட் டீசல்