Force Gurkha 5-டோர் காருடன் ஒப்பிடும்போது Mahindra Thar 5-டோரில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 10 வசதிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
மஹிந்திரா தார் ராக்ஸ் க்காக ஜூலை 17, 2024 06:36 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 65 Views
- ஒரு கருத்தை எழுதுக
5-டோர் ஃபோர்ஸ் கூர்க்காவுடன் ஒப்பிடும்போது மஹிந்திரா தார் 5-டோர் அதிக பவரை வழங்கும்.
மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா ஆகியவை நீண்ட காலமாக இந்திய சந்தையில் மிகவும் வலிமையான ஆஃப்-ரோடர்களாக உள்ளன. ஃபோர்ஸ் கூர்காவின் 5-டோர் வேரியன்ட் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதன் நேரடி போட்டியாளரான மஹிந்திரா தார் 5-டோர், அடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 5-டோர் தார் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஏறக்குறைய ஒரு மாதம் உள்ள நிலையில் ஏராளமான ஸ்பை ஷாட்கள் இதன் எதிர்பார்க்கப்படும் பல முக்கிய விஷயங்களை ஏற்கனவே காட்டியுள்ளது. இந்தக் கட்டுரையில் தற்போதைய-ஸ்பெக் ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோரை விட 5-டோர் தார் வழங்கக்கூடிய எதிர்பார்க்கப்படும் 10 விஷயங்களை நாங்கள் உங்களுக்காக தொகுத்துள்ளோம்:
அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்
தார் 5-டோரின் ஸ்பை ஷாட்களில் ஒன்று அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பேக்கேஜை சேர்ப்பதைக் குறிக்கிறது. இது தற்போதைய முதன்மை மஹிந்திரா எஸ்யூவி, XUV700-இலிருந்து பெறப்பட்டிருக்கலாம். குறைவான விலையில் மஹிந்திரா XUV 3XO சப்-4m எஸ்யூவி-க்கு ADAS வசதியை சமீபத்தில் சேர்த்ததன் மூலம் பாதுகாப்பான பயணத்தை இது உறுதிசெய்கிறது.
பனோரமா சன்ரூஃப்
சமீப காலங்களில் புதிய கார் வாங்குபவர்களால் மிகவும் விரும்பப்படும் வசதிகளில் ஒன்றாக சன்ரூஃப் உள்ளது. ஃபோர்ஸ் கூர்க்கா நீண்ட வீல்பேஸ் மற்றும் கூடுதல் வசதிகள் போன்ற புதுப்பிப்புகளைப் பெற்றாலும் அது இப்பொழுதும் சன்ரூஃப் வசதியை வழங்கவில்லை. அதற்க்கு மாறாக ப்ரொடக்ஷன்-ஸ்பெக் மஹிந்திரா தார் 5-டோரின் சமீபத்திய ஸ்பை ஷாட்கள் எஸ்யூவி-யில் பனோரமிக் சன்ரூஃப் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன.
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் ஆனது தற்போது 9-இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 EV-இலிருந்து பெறப்பட்ட தார் 5-டோர் ஒரு பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறவுள்ளது என்பதை ஸ்பை ஷாட்கள் வெளிப்படுத்துகின்றன. கூடுதலாக இந்த பெரிய யூனிட் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை இப்போது இது ஆதரிக்கும்.
மேலும் படிக்க: ஆகஸ்ட் 15 அறிமுகத்திற்கு முன்னதாக Mahindra Thar 5-டோர் காரின் படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன
ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புடன் தார் 5-டோர் 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மஹிந்திரா XUV400 EV-இல் இருந்து பெறப்பட்டது. இதற்கு நேர்மாறாக கூர்க்கா 5-டோர் மிகவும் பாரம்பரியமான செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை மட்டுமே வழங்கி வருகிறது. இது தாரின் டெக்னிக்கல் அப்க்ரேட்களில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்குகிறது.
வயர்லெஸ் போன் சார்ஜிங்
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், பயணத்தின்போது அவற்றை தொடர்ந்து சார்ஜ் செய்ய வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. மேலும், பயணத்தின்போது சார்ஜிங் கேபிளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவையும் அதிகரித்துள்ளது. மஹிந்திரா தார் 5-டோர் வயர்லெஸ் ஃபோன் சார்ஜரை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வயர் மற்றும் கேபிள்களின் தேவையை நீக்கி உங்களின் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
360-டிகிரி கேமரா
மஹிந்திரா தார் 5-டோரின் சமீபத்தில் வெளிவந்த ஸ்பை ஷாட்கள் ORVM-இல் பொருத்தப்பட்டிருந்த கேமராவை வெளிப்படுத்தியது. இது ப்ரொடக்ஷன்-ஸ்பெக் மாடலில் 360 டிகிரி கேமராவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்ஸ் கூர்காவில் கேமராக்கள் எதுவும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
டூயல்-ஜோன் ஏசி
மஹிந்திரா தார் 5-டோரின் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தொகுப்பு XUV700 இலிருந்து டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோலை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் ஒட்டுமொத்த வசதியையும் சேர்க்கிறது. மஹிந்திரா தார் 5-டோருடன் ஒப்பிடுகையில் கூர்க்கா 5-டோர் ஒரு மேனுவல் ஏசி ஆப்ஷனை மட்டுமே வழங்குகிறது.
6 ஏர்பேக்குகள்
போர்ஸ் சமீபத்தில் கூர்க்காவைப் அப்டேட் செய்தாலும் பாதுகாப்பு வசதிகள் எதுவும் அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. 5-டோர் கொண்ட கூர்க்காவில் அரசின் பாதுகாப்பு வசதிகளின் கட்டாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு நேர்மாறாக தார் 5-டோர் மொத்தம் 6 ஏர்பேக்குகளுடன் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக சக்திவாய்ந்த பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
தற்போதைய 3-டோர் வடிவத்தில், தார் ஏற்கனவே கூர்க்காவுடன் ஒப்பிடும்போது அதிக சக்திவாய்ந்த டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. இது டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் வசதியையும் வழங்குகிறது. இந்த வலுவான ப்ரொடக்ஷன்-ஸ்பெக் பவர்டிரெய்ன்கள் 5-டோருக்கும் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் ஃபோர்ஸ் போட்டியாளரை விட மிகவும் சக்திவாய்ந்த பவர்டிரெய்ன் செட்-அப்பை கொண்ட ஒரு வலிமையான போட்டியாளராக ஆக்குகிறது.
மேலும் படிக்க: ஃபோர்ஸ் கூர்க்கா விரைவில் ஒரு ஆட்டோமேட்டிக் ஆப்ஷனைப் பெற முடியுமா?
ரியர் டிஸ்க் பிரேக்குகள்
மஹிந்திரா தார் 5-டோர் அதன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. முந்தைய டெஸ்ட் மியூல்களில் பார்த்தது போல், ரியர் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இது மேம்பட்ட பிரேக்கிங் செயல்திறனை உறுதியளிக்கிறது. இதற்கு மாறாக, அப்டேட் செய்யப்பட்ட கூர்க்காவின் முன்பக்கத்தில் டிஸ்க் செட்-அப்பையும் பின்புறத்தில் டிரம் பிரேக்குகளை மட்டுமே வழங்குகிறது.
ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோரை காட்டிலும் மஹிந்திரா தார் 5-டோர் சிறந்த ஆப்ஷன் போல தோன்றினாலும். இறுதித் தீர்ப்பு ஆகஸ்ட் 15 அன்று அதிகாரப்பூர்வ விவரத்தின் மூலமாக தெரிய வரும். விலையை பொறுத்தவரை மஹிந்திரா தார் 5-டோரின் விலை 15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபோர்ஸ் கூர்க்கா 5- டோர் உடன் நேரடியாக போட்டியிடும். மேலும் இதன் விலை ரூ. 18 லட்சமாக உள்ளது மற்றும் மாருதி ஜிம்னிக்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும். இதன் விலை ரூ.12.74 முதல் 14.95 லட்சம் வரை உள்ளது.
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்-க்கானவை
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமேட்டிக்