• English
  • Login / Register

மாருதி பிரெஸ்ஸாவை விட Mahindra XUV 3XO காரில் கிடைக்கும் கூடுதலான 10 விஷயங்கள்

published on மே 22, 2024 04:53 pm by samarth for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக பிரெஸ்ஸா இருந்து வருகிறது. புதிதாக அறிமுகமாகியுள்ள 3XO அதிக வசதிகளை கொண்டுள்ளது.

Advantages of XUV 3XO over Brezza

சமீப காலங்களில் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார் பிரிவானது சந்தையில் மிகவும் கடும் போட்டி நிலவும் ஒன்றாக இருக்கின்றது. இந்த பிரிவில் மாருதி பிரெஸ்ஸா பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் இப்போது மஹிந்திரா XUV3XO (ஃபேஸ்லிப்டட் XUV300)  வசதிகளுடன் வந்துள்ளது. மாருதி பிரெஸ்ஸாவை விட எக்ஸ்யூவி 3XO -வில் கிடைக்கும் சில கூடுதல் வசதிகளின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பனோரமிக் சன்ரூஃப்

Mahindra XUV 3XO Sunroof

XUV 3XO ஆனது அதன் செக்மென்ட்டில் உள்ள ஒரே சப்-காம்பாக்ட் எஸ்யூவி ஆகும். இது பனோரமிக் சன்ரூஃப் உடன் வருகின்றது. இந்த வசதி முன்பு பெரிய, சிறிய எஸ்யூவி பிரிவில் உள்ளவற்றில் மட்டுமே வழங்கப்பட்டது. மாருதி பிரெஸ்ஸா உட்பட மற்ற அனைத்து போட்டி கார்களிலும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் மட்டுமே கிடைக்கும்.

ADAS

இந்த பிரிவில் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை வழங்கும் முதல் சப்-காம்பாக்ட் எஸ்யூவி XUV 3XO இல்லை. ஆனால் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங்கின் மேல் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் ஆகியவை எஸ்யூவியின் கொடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். பிரெஸ்ஸா -வில் இந்த கூடுதல் பாதுகாப்பு வசதிகள் இல்லை.

முன்பக்க பார்க்கிங் சென்சார்கள்

Mahindra XUV 3XO Grille

பிரெஸ்ஸாவை விட XUV 3XO -வில் கிடைக்கும் மற்றொரு பாதுகாப்பு வசதி, முன் பார்க்கிங் சென்சார்கள் ஆகும். இவை ஓட்டுநர்களுக்கு மற்றும் நெரிசலான போக்குவரத்து மற்றும் இறுக்கமான வாகன நிறுத்துமிடங்களில் உதவியாக இருக்கும். மாருதி எஸ்யூவி 360 டிகிரி வியூ கேமராவை பெற்றிருக்கின்றது ஆனால் கூடுதல் சென்சார்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

டூயல் ஜோன் ஏசி

Mahindra XUV 3XO Dual-zone AC

மாருதி பிரெஸ்ஸாவை விட XUV 3XO வழங்கும் மற்றொரு கேபின் வசதி டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் செட்டப் ஆகும். இது ஒவ்வொரு முன்பக்க பயணிகளுக்கும் வெவ்வேறு வெப்பநிலைகளை அமைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த வசதி XUV300 -யில் 2019 முதல் உள்ளது. ஆனால் இன்னும் மாருதி பிரெஸ்ஸாவில் கிடைக்கவில்லை. இரண்டு மாடல்களும் பின்புற ஏசி வென்ட்களை பெறுகின்றன.

பெரிய டிஸ்பிளேக்கள்

Mahindra XUV 3XO Infotainment System Main Menu

தொழில்நுட்பத்தை பொறுத்தவரை இது XUV 3XO முன்னிலையில் இருக்கிறது. இது பிரெஸ்ஸாவை விட பெரிய 10.25-இன்ச் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகின்றது. இதற்கிடையில் பிரெஸ்ஸா இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் அனலாக் டயல்களை மட்டுமே வழங்குகிறது.

அதிக செயல்திறன்

Mahindra XUV 3XO Engine

மாடல்

மஹிந்திரா XUV 3XO

மாருதி பிரெஸ்ஸா

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.2-லிட்டர் (டேரக்ட் இன்ஜெக்‌ஷன்) டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்

1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (CNG)

பவர்

112 PS

130 PS

117 PS

103 PS

101 PS

டார்க்

200 Nm

230 Nm

300 Nm

137 Nm

136 Nm

டிரான்ஸ்மிஷன்

6MT, 6AT

6MT, 6AT

6MT, 6AMT

5MT, 6AMT

5MT

XUV 3XO இரண்டு டர்போ-பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் இன்ஜினுடன் வருகிறது. அதே நேரத்தில் பிரெஸ்ஸா மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கின்றது. XUV 3XO அதிக இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குவது மட்டுமல்லாமல், அவை ஒவ்வொன்றிலும் அதிக செயல்திறனையும் வழங்குகிறது. மஹிந்திரா எஸ்யூவி -க்காக நிலையான பெட்ரோல் ஆப்ஷனும் கூட மாருதியை விட கூடுதல் 9PS மற்றும் 63 Nm அதிகமாக உள்ளது. இரண்டுமே பெட்ரோல் இன்ஜின்களை 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் வழங்குகின்றன. ஆனால் பிரெஸ்ஸா மட்டுமே தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட CNG எரிபொருள் ஆப்ஷனை பெறுகிறது.

மேலும் பார்க்க: Kia Sonet காரை விட Mahindra XUV 3XO காரில் கிடைக்கும் முக்கியமான 5 வசதிகள்

ஆல் டிஸ்க் பிரேக்குகள்

என்ட்ரி-லெவல் எஸ்யூவி -யின் பாதுகாப்பு அளவை மேலும் மேம்படுத்த மஹிந்திரா XUV 3XO க்கு ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகளை கொடுத்துள்ளது. இருப்பினும், மாருதி பிரெஸ்ஸா முன் சக்கரங்களுக்கு மட்டும் டிஸ்க் பிரேக்குகளை வழங்குகிறது, பின்புறத்தில் டிரம் பிரேக்குகள் உள்ளன.

எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

Mahindra XUV 3XO Electronic Parking Brake

XUV 3XO ஆனது எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குடன் வருகின்றது. இது ஒரு பட்டனை டச் செய்வதன் மூலமாக பிரேக்குகளை அப்ளை செய்கிறது. மேலும் டிரைவருக்கு கூடுதல் வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கேபினின் அழகியலையும் மேம்படுத்துகிறது. மறுபுறம் மாருதி பிரெஸ்ஸாவில் ஒரு மெக்கானிக்கல் பார்க்கிங் பிரேக் லீவர் உள்ளது. இது எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உடன் ஒப்பிடும் போது இதற்கு அதிக உடல் உழைப்பு தேவைப்படுகிறது மற்றும் கேபினுக்கு வழக்கமான தோற்றத்தை அளிக்கிறது.

பெரிய அலாய் வீல்கள்

Mahindra XUV 3XO Wheel

XUV300 -லிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மஹிந்திரா XUV 3XO -ன் மற்றொரு வசதி 17-இன்ச் அலாய் வீல்கள். மாருதி பிரெஸ்ஸா சிறிய 16-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது.

விலை

மஹிந்திரா XUV 3XO

மாருதி பிரெஸ்ஸா

ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை

ரூ.8.34 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம் வரை

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO -வை விட மாருதி பிரெஸ்ஸா அதிக என்ட்ரி விலையில் உள்ளது. இருப்பினும் டாப் வேரியன்ட்களில் மஹிந்திராவின் கூடுதல் வசதிகள் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்கள் மாருதி ஆப்ஷனை விட விலை அதிகம். இந்த சப்-4m எஸ்யூவி -களில் எந்த மாதிரியான விலையில் எதை  நீங்கள் தேர்வு செய்வீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO AMT

was this article helpful ?

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO

2 கருத்துகள்
1
A
arun
May 26, 2024, 6:38:22 AM

What is real fuel economy in city roads for petrol SUV with respect to Brezza ?

Read More...
    பதில்
    Write a Reply
    1
    A
    arun
    May 26, 2024, 6:36:36 AM

    What is actual fuel economy in petrol SUV with respect to Brezza ?

    Read More...
      பதில்
      Write a Reply

      explore similar கார்கள்

      ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

      புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

      கார் செய்திகள்

      • டிரெண்டிங்கில் செய்திகள்
      • சமீபத்தில் செய்திகள்

      trending எஸ்யூவி கார்கள்

      • லேட்டஸ்ட்
      • உபகமிங்
      • பிரபலமானவை
      • க்யா syros
        க்யா syros
        Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
        ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
        Rs.17 - 22.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • டாடா சீர்ரா
        டாடா சீர்ரா
        Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • டாடா harrier ev
        டாடா harrier ev
        Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      • பிஒய்டி sealion 7
        பிஒய்டி sealion 7
        Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
        ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
      ×
      We need your சிட்டி to customize your experience