ஃபியட் கார்களின் விற்பனை ஏன் மந்தமாக உள்ளது? – இந்திய நுகர்வோர்களின் பார்வை
published on டிசம்பர் 15, 2015 09:41 am by manish for ஃபியட் கிராண்டி புண்டோ
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
இத்தாலியர்கள் ஒரு பேப்பர் பென்சில் மட்டுமே கொண்டு கலை நயம் மிக்க வடிவங்களை உருவாக்குவதில் வல்லவர்கள் என்று ஏற்கனவே நாம் சொன்னதை மீண்டும் உண்மையாக்கியுள்ளது இத்தாலிய ஃபியட் நிறுவனம். ஃபியட் கார்கள் அனைத்தும் மிகச் சிறந்த கலை நயம் மிக்க வாகன வடிவமைப்பிற்கு பேர் போனவை (நிச்சயமாக மல்டிப்லா மாடல் இதற்கு விதிவிலக்கு). இந்த இத்தாலிய வாகன தயாரிப்பு நிறுவனம், தனது கார்களுக்கான அதிநவீன தோற்ற மேம்பாடுகளை உலகில் வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (புண்ட்டோ மாடலின் ஃபேஸ்லிஃப்ட் தற்போது இந்தியாவில் கிடைக்கிறது, ஆனால் இங்கிலாந்து சந்தைகளில் இன்று வரை ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முந்தைய வெர்ஷன்களே கிடைக்கின்றன என்பது கூடுதல் செய்தி).
ஃபியட்டின் இஞ்ஜின் வகைகளும் நமக்கு ஏமாற்றம் தருவது போல இல்லை, ஏனெனில், கிட்டத்தட்ட அனைத்து ஃபியட் கார்களும் சிறந்த மெக்கானிக்கல் சக்தி கொண்டவைகளாக உள்ளன. இது போன்ற வெற்றிக்கான பல காரணிகள் இருந்தும், ஃபியட் இந்தியா நிறுவனம், இந்தியாவில் உள்ள ஹுண்டாய், மாருதி சுசுகி மற்றும் ஏனைய கார் நிறுவனங்களுடன் களத்தில் இறங்கி போட்டி போட்டு வெற்றி பெற முடியவில்லை என்பதே உண்மை. இந்திய வாகன சந்தையில், ஃபியட் நிறுவனத்தின் பங்களிப்பு சிறந்த முறையில் இல்லாமல் இருப்பதற்கு, இந்திய நுகர்வோரின் எண்ணமே காரணம் என்று கூறலாம்.
தற்போது, இந்த இத்தாலிய வாகன தயாரிப்பாளரின் ‘ஃபியட் கஃபேக்கள்’ நாடு முழுவதிலும் பறந்து விரிந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய காத்திருந்தாலும், இதற்கு முன்பு இந்நிறுவனம் டாடா மோட்டார்ஸூடன் மேற்கொண்ட வணிக இணைப்பு காரணமாக ஏற்பட்ட முறையற்ற வாடிக்கையாளர் சேவை மற்றும் உறவு மேலாண்மையினால், பல்வேறு வாடிக்கையாளர்கள் அதிருப்திக்கு உள்ளானார்கள். தற்போது, ஃபியட் நிறுவனத்தின் கார்கள் சிறந்த தரத்தில் உற்பத்தி செய்யப்பட்டாலும், இதற்கு முந்தைய மாடல்களான சீயானா, பாலியோ மற்றும் பெட்ரா போன்ற கார்கள், நம்பகத்தன்மை இல்லாத ஃபியட் கார்களின் உதாரணங்களாக இருக்கின்றன. இது தவிர, உதிரி பாகங்களின் அதிக விலை மற்றும் பராமரிப்புக்கு ஆகும் கூடுதல் செலவுகள் போன்றவை மக்களுக்கு ஃபியட் கார்களின் மேல் அதிருப்தியை உருவாக்கி உள்ளன. ஃபியட் கார்களின் அடக்க விலை பற்றி பேசினால், மேலும் அதிருப்தி உண்டாகிறது. ஏனெனில், இவற்றின் தயாரிப்பில் செயல்திறன் அல்லது சொகுசு வசதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படுகின்றது. மிக முக்கியமான எரிபொருள் சிக்கனத்தை என்றுமே இந்நிறுவனம் கவனத்தில் கொள்வதில்லை, ஆனால் ஹோண்டா (ஜாஸ் மாடலில் டீசல் வேரியண்ட் இந்த பிரிவிலேயே மிகச் சிறந்த 27.3 kmpl மைலேஜ் தருகிறது), மாருதி, ஹுண்டாய் மற்றும் பல நிறுவனங்கள் சிறந்த எரிபொருள் சிக்கனத்தைத் தரும் கார்களைத் தயாரித்து வெற்றி பெறுகின்றன.
ஃபியட் நிறுவனம், தற்போது இந்த உண்மைகளை உணர்ந்துள்ளது என்றே கூறவேண்டும். தனது கார்களின் செயல்திறன் அம்சங்களை மேம்படுத்துவத்தில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்பதற்கு சிறந்த சாட்சியாக, இந்த நிறுவனத்தின் ஃப்லாக்ஷிப் ஹாட்ச்பேக் காரான ஃபியட் அபார்த் புண்ட்டோ எவோ கார் உள்ளது.
மேலும் வாசிக்க