டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா vs ஹைகிராஸ்: விலையின் அடிப்படையில் இரண்டில் எது நமது பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும் ?
published on மே 04, 2023 08:00 pm by rohit for டொயோட்டா இனோவா கிரிஸ்டா
- 61 Views
- ஒரு கருத்தை எழுதுக
இன்னோவா கிரிஸ்ட்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கார் வரிசையை வழங்குகின்றன, ஆனால் பவர்டிரெயின்கள் மற்றும் உபகரணங்களுக்கு வரும்போது அப்படி இருப்பதில்லை
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இறுதியாக டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவின் முழு வேரியன்ட் வாரியான விலை பட்டியல் எங்களிடம் உள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய இரண்டு இன்னோவா மாடல்கள் உள்ளன: க்ரிஸ்டா மற்றும் ஹைகிராஸ். எனவே, இரண்டில் எது உங்கள் பட்ஜெட்டுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டறிய, கீழே உள்ள அவற்றின் விலை அட்டவணைகளைப் பாருங்கள்:
இன்னோவா கிரிஸ்டா |
இன்னோவா ஹைகிராஸ் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
ZX ஹைப்ரிட் - ரூ 29.35 லட்சம் |
|
ZX (O) ஹைப்ரிட் - ரூ 29.99 லட்சம் |
மேலும் விவரம் அறிந்து கொள்ளுங்கள் : ஜப்பானில் மெக்டொனால்டு விலையில் மினியேச்சர் வெர்ஷனில் கிடைக்கும் டொயோட்டா ஹிலக்ஸ்
டேக் அவேஸ்
-
பெட்ரோல்-CVT ஹைகிராஸ் கார் வேரியன்ட்களை விட டீசல் மட்டுமே கொண்ட கிரிஸ்ட்டா காரின் விலை அதிகம். இருப்பினும், ஹைபிரிட் வேரியன்ட்கள் அதிக விலை கொண்டவை மற்றும் டாப்-ஸ்பெக் கிரிஸ்ட்டா, என்ட்ரி-லெவல் ஹைகிராஸ்-க்கு சமமான விலை கொண்டது.
-
அப்டேட்டட் இன்னோவா கிரிஸ்ட்டா தனிப்பட்ட முறையில் வாங்குபவர்களுக்கு மூன்று வகையான வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.
-
மறுபுறம், இன்னோவா ஹைகிராஸ் MPV -யின் வழக்கமான மற்றும் ஹைப்ரிட் வெர்ஷன்க உட்பட தனியார் உரிமையாளர்களுக்கு ஐந்து ட்ரிம் நிலைகளில் வழங்கப்படுகிறது.
-
இந்த இரண்டு மாடல்களிலும் "இன்னோவா" பெயர்ப்பலகை மற்றும் MPV பாடி ஸ்டைல் ஆகியவை 7- மற்றும் 8 சீட்டர் உள்ளமைவுகள் தேர்வுடன் பொதுவானவை என்றாலும், அவை மட்டும் இரண்டுக்குமிடையே உள்ள ஒற்றுமைகள் ஆகும். இன்னோவா கிரிஸ்ட்டா இன்னும் ரியர் வீல் டிரைவ் ட்ரெயின் (RWD) கொண்ட லேடர்-ஃபிரேம் கட்டமைப்பைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் இன்னோவா ஹைகிராஸ் முன்பக்க வீல் டிரைவ் (FWD) அமைப்பைக் கொண்ட மோனோகாக் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது.
-
டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவை டீசல்-மேனுவல் காம்போவுடன் வழங்குகிறது, அதே நேரத்தில் ஹைகிராஸ் நிலையான மற்றும் மின்மயமாக்கப்பட்ட மாற்றங்களைக் கொண்ட பெட்ரோல் தேர்வை மட்டுமே கொண்ட மாடலாகும்.
-
ஹைகிராஸின் ரெகுலர் கார் வேரியன்ட்கள் CVT ஆப்ஷனை பெறுகின்றன, அதே நேரத்தில் அதன் ஹைபிரிட் கார் வேரியன்ட்கள் CVT யுடன் வருகின்றன, பிந்தையவை லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜைக் கொண்டுள்ளன.
-
பழைய தலைமுறை இன்னோவா காரின் டாப் வேரியன்ட்யில் பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, 8 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் லெதர்செட் அப்ஹோல்ஸ்டரி போன்ற சில பிரீமியம் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
-
நீங்கள் அதிக பிரீமியம் மற்றும் நவீன இன்னோவாவை விரும்பினால், கிரிஸ்ட்டாவுடன் ஒப்பிடும்போது அதன் அதிக மேம்பட்ட உட்புறம் மற்றும் விரிவான அம்சங்களின் பட்டியல் வேண்டுமென்றால் ஹைகிராஸ் தான் உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். 360 டிகிரி கேமரா, அகலமான சன்ரூஃப் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ஏடிஏஎஸ்) ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
இதையும் படிக்கவும்: ஜூலை மாதத்திற்குள் ‘மாருதி’ இன்னோவா ஹைகிராஸ் வெளியிடப்படும்
மேலும் படிக்கவும்: இன்னோவா கிரிஸ்டா டீசல்