ஜூலை மாதத்திற்குள் ‘மாருதி’ இன்னோவா ஹைகிராஸ் வெளியிடப்படும்
published on ஏப்ரல் 28, 2023 06:08 pm by tarun for டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்
- 94 Views
- ஒரு கருத்தை எழுதுக
அது மாருதியின் இரண்டாவது ஸ்ட்ராங்-ஹைபிரிட் காராக இருக்கும் மற்றும் அடாஸ் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் காராகவும் இருக்கும்.
-
மாருதி தனது இன்னோவா ஹைகிராஸ்-இன் வெர்ஷனை ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தும்.
-
அது அகலமான சன்ரூஃப், 10-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு தொழில்நுட்பம், அடாஸ் போன்றவற்றைப் பெறும்.
-
21.1கிமீ/லி ரேன்ஜை -ஐ கொண்டுள்ள ஸ்ட்ராங்-ஹைபிரிட் தேர்வுடன் கூடிய 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை ஹைகிராஸ் பயன்படுத்தும்.
-
இதன் விலை சுமார் ரூ.20 இலட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் தேவைகளின் காரணமாக டொயோட்டா சமீபத்தில் இன்னோவா ஹைகிராஸ்’ டாப்-ஸ்பெக் மாடல்களின் புக்கிங்குகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. 12 மாதங்களுக்கும் மேலாக காத்திருப்புக் காலம் தொடர்கிறது. கவலைப்பட வேண்டாம். மாருதியின் MPV வெர்ஷன் விரைவில் வெளிவர உள்ளது, அது ஜூலை மாதத்திற்குள் வெளிவரக்கூடும்.
நிறுவனத்தின் சமீபத்திய வருடாந்திர நிதி முடிவுகள் மாநாட்டில், மாருதி சுஸூகி சேர்மன், RC பார்கவா, " டொயோட்டாவிலிருந்து நாங்கள் ஒரு வாகனத்தை பெறுகிறோம், அது 3-வரிசை கொண்ட ஸ்ட்ராங் ஹைபிரிட் காராகும் மேலும் விலையின் அடிப்படையில் வாகனங்களிலேயே முதன்மையானதாக இருக்கும்" என்று கூறினார். அதன் தயாரிப்பு அளவு மிக அதிகமாக இருக்காது ஆனால் அது புது வழியை உருவாக்குவதாக இருக்கும்" என்று பார்கவா கூறினார். மாருதியின் தலைவர் மேலும் கூறுகையில் இந்த ஸ்ட்ராங் ஹைபிரிட் MPV அடுத்து வரும் இரு மாதங்களில் விற்பனை வரும் என்றும் தெரிவித்தார்.
இன்னோவா ஹைகிராஸ்-அடிப்படையிலான MPV டொயோட்டா-பேட்ஜ் கொண்ட முதல் மாருதி காராக இருக்கும். மாருதி MPV அதே அடித்தளம், பவர்டிரெயின்கள், டிரான்ஸ்மிஷன் மற்றும் ஹைகிராஸின் ஸ்ட்ராங்-ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும். கிரான்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் இரண்டு கார்களும் கூட அவற்றின் தளங்கள் மற்றும் பவர் டிரெயின்களை பகிர்ந்து கொள்கின்றன.
மேலும் படிக்கவும்: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல் vs ஹைபிரிட்:மின்மயமாக்கப்பட்ட MPV எவ்வளவு சிக்கனமானது?
மாருதி MPV, இன்னோவா-இன் ப்ரீமியம் அம்சப் பட்டியலைக் கொண்டு வரும், அதில் அகலமான சன்ரூஃப், 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் மற்றும் பவர்டு இரண்டாவது-வரிசை ஒட்டோமான் இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பாதுகாப்பு என்பது அடாஸ் (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்), ஆறு ஏர்பேகுகள் வரை, மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இன்னோவா -வைப் போன்ற ஒத்த அம்சப்பட்டியலை மாருதியின் MPV பெற்றிருக்கும்.
ஸ்ட்ராங்-ஹைபிரிங் தொழில்நுட்பத்தேர்வுடன் கூடிய 2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் பயன்படுத்துகிறது. 21.1கிமீ/லி வரையிலான எரிபொருள் சிக்கனத்தை ஸ்ட்ராங்-ஹைபிரிட் கார்கள் பெற்றிருக்கும். ஸ்டாண்டர்டு பெட்ரோல் இன்ஜினுக்கு CVT டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டாக இருக்கும் அதேநேரத்தில் ஹைபிரிட் கார்கள் e-CVT -யைப் பெற்றிருக்கும். மாருதி MPV -யிலும் அதே தளம் மற்றும் இன்ஜினைக் காண முடியும்.
மேலும் படிக்கவும்: EVஸ் vs ஸ்ட்ராங் ஹைபிரிட்ஸ் : எதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் ?
இன்னோவா ஹைகிராஸ் கார்களின் விலை ரூ. 19.40 லட்சம் முதல் ரூ. 29.72 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம் டெல்லி) இருக்கும். ரூ.20 லட்சத்தை தொடுமாறு மாருதி எடிஷனின் அறிமுக விலையும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னோவா போன்றே, மாருதி MPV -க்கு அதன் டொயோட்டா உடன்பிறப்புகளைத் தவிர்த்து நேரடி போட்டியாளர்கள் இல்லை
மேலும் படிக்கவும்: டொயோட்டோ இன்னோவா ஹைகிராஸ் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful