டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் vs 7 சீட்டர் எஸ்யூவி -கள்: அதே விலை, இதர ஆப்ஷன்கள்
published on மே 08, 2023 05:02 pm by ansh for டொயோட்டா இனோவா கிரிஸ்டா
- 43 Views
- ஒரு கருத்தை எழுதுக
நீங்கள் இன்னோவா கிரிஸ்டா டீசல்-ஒன்லி காரை மட்டும் வாங்க இறுதியாக திட்டமிட்டிருந்தால், நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று-வரிசை கொண்ட மற்ற கார்கள் உங்களுக்காக இங்கே.
நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு, , டொயோட்டா இறுதியாக 2023 இன்னோவா கிரிஸ்டா வின் விலைகளை வெளியிட்டுள்ளது மேலும் சந்தையில் டீசலால் இயங்கும் MPV-ஐ மறுபடியும் இறக்கியுள்ளது . அதன் விலைகளை கவனத்தில் வைத்து பார்க்கையில், ரூ.19.99 லட்சம் முதல் ரூ.25.43 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நீங்கள் சில 7 இருக்கை கொண்ட டீசலால் இயங்கும் எஸ்யூவிக்களின் மாற்றுகளையும் கவனத்தில் கொள்ளலாம். இப்போது அதே விலையில் உள்ள மற்ற ஆப்ஷன்களை இப்போது பார்க்கலாம்:
ஆப்ஷன்கள்
|
|
|
|
|
|
|
|||
|
|
|
|
|
|
|
|||
|
|
|||
|
||||
|
||||
|
||||
|
||||
|
|
|
||
|
|
|||
|
|
|||
|
|
|||
|
||||
|
|
|||
|
||||
|
|
|||
|
|
* 7 இருக்கை டீசல் கார் வேரியன்ட்களின் விலைகள்
-
இங்கே இன்னோவா கிரிஸ்டா மிக அதிகமான என்ட்ரி விலையைக் கொண்டது T சஃபாரி டார்க்-இன் என்ட்ரி லெவல் -க்கு நெருக்கமான விலை கொண்டது மற்றும் XUV700 மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் இன் மிட்-ஸ்பெக் வேரியன்ட் ரூ.1 லட்சத்துக்கு நெருங்கிய விலையில் கிடைக்கிறது. அதேநேரத்தில் ,அதே ப்ரீமியத்தில், அல்கசார் டாப்-ஸ்பெக் டீசல் ஆட்டோ காரை நீங்கள் பெற முடியும்.
-
சுமார் ரூ.4 லட்சம் கூடுதல் விலையில் அடுத்த கிரிஸ்டா காரின் விலை உயர்ந்துள்ளது அதே விலையில், டாப்-ஸ்பெக் டீசல்-மேனுவல் XUV700 அல்லது அதன் டீசல்-ஆட்டோ AWD ஆப்ஷனையும் நீங்கள் கவனத்தில் வைக்கலாம். அதற்கு மாறாக, சஃபாரி-இன் ஆட்டோமெட்டிக் கார்வேரியன்ட்களில் டாப் வேரியன்ட்க்கு அடுத்துள்ள அட்வென்ச்சர், டார்க் மற்றும் ரெட் டார்க் எடிஷன்களும் கிடைக்கும்.
-
டாப்-ஸ்பெக் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மிட் ஸ்பெக் இன்னோவா கிரிஸ்டா-ஐவிட சுமார் ஒரு லட்சம் விலை குறைவானது.
-
டொயோட்டா டாப்-ஸ்பெக் இன்னோவா கிரிஸ்டாவின் விலையை 7 இருக்கை எஸ்யூவி -களை விட கூடுதலாக நிர்ணயித்துள்ளது. XUV700 மற்றும் சஃபாரி இரண்டின் டாப்-ஸ்பெக் டீசல்-ஆட்டோமெடிக் வேரியன்ட்க் கார்களின் விலையைவிட இது ரூ.50,000 விலை கூடுதலானது.
பவர்டிரெயின்கள்
ஒரே மாதிரி விலையுள்ள அதன் போட்டியாளர்களைவிட இன்னோவா கிரிஸ்டா அதன் செயல்திறன் விவரக்குறிப்புகளில் எவ்வாறு மேம்பட்டுள்ளது என்பதைக் காண்போம் வாருங்கள்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
150PS |
|
170PS |
170PS |
115PS |
|
343Nm |
Up to 450Nm |
350Nm |
350Nm |
250Nm |
|
|
|
|
|
|
இங்கே அனைத்து மாடல்களிலும் மஹிந்திரா XUV700, மிக ஆற்றல்மிக்க டீசல் யூனிட்டுடன் வருகிறது. சஃபாரி மற்றும் ஹெக்டர் ப்ளஸ் இரண்டும் ஒரே அவுட்புட்டுடன் \ கூடிய 2-லிட்டர் டீசல் யூனிட்டைப் பெறுகின்றன மற்றும் அல்கசார் குறைந்த ஆற்றல் மற்றும் டார்க் கொண்ட சிறிய யூனிட்டைப் பெறுகிறது. இன்னோவா மற்றும் ஹெக்டர் ப்ளஸ்-ஐத் தவிர அனைத்து மாடல்களும் டீசல் யூனிட்களுடன் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்குகின்றன என்பதை நாம் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும்
மேலும் படிக்கவும்: டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா vs ஹைக்ராஸ்:விலையின் அடிப்படையில் இரண்டில் எது நமது பாக்கெட்டுக்கு நட்பானது?
மேலும், XUV700, ஹெக்டர் ப்ளஸ் மற்றும் அல்கசார் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகின்றன, இன்னோவா கிரிஸ்டாவில் அது கிடைக்காது. ஆனால் நீங்கள் டொயோட்டா பேட்ஜ் கொண்ட பெட்ரோலால் இயங்கும் 7 இருக்கை காரை விரும்பினால், நீங்கள் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஐ வாங்கலாம்.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா: முன்னர் இருந்த அம்சங்களையே இன்னோவா கிரிஸ்டா பெறுகிறது:எட்டு-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எட்டு-வழிகளில் சரி செய்யக்கூடிய பவர்டு டிரைவர் சீட், பின்புற ஏசி துளைகளுடன் கூடிய ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் EBD உடன் கூடிய ABS, வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (VSC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்
மஹிந்திரா XUV700: மேற்குறிப்பிட்ட XUV700 யின் வேரியன்ட்கள் டூயல்-இன்டக்ரேடட் 10.25 இன்ச் டிஸ்பிளேக்கள், அகலமான சன்ரூஃப், டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் அதிகபட்சம் ஏழு ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் அழுத்தக் கண்காணிப்பு சிஸ்டம்(TPMS), 360 -டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல் போன்ற அடாஸ் அம்சங்கள், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அம்சங்களை வழங்குகின்றன.
டாடா சஃபாரி: 2023 கிரிஸ்டாவின் விலை வரம்பில் இருக்கும் டாடா சஃபாரி, 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏழு-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்பிளே, காற்றோட்டமான மற்றும் பவர் அட்ஜஸ்டபிள் முன்புற இருக்கைகள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் அகலமான சன்ரூஃப் ஆகிய அம்சங்களை வழங்குகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS செயல்பாடுகளை முன்னோக்கி மோதல் எச்சரிக்கை, லேன்-கீப் அசிஸ்ட் போன்றவற்றை வழங்குகிறது. குருட்டு புள்ளி கண்காணிப்பு மற்றும் தன்னாட்சி அவசரகால பிரேக்கிங்.
எம்ஜிஹெக்டர் பிளஸ் 2023 இல் தோற்றத்தில் பொலிவு கூட்டப்பட்ட ஹெக்டர் ப்ளஸ் உடன், நீங்கள் 14-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அகலமான சன்ரூஃப், காற்றோட்டமான முன்புற இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பவர்டு டெயில்கேட், அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குள், EBD உடன் கூடி ABS டயர் அழுத்தக் கண்காணிப்பு சிஸ்டம்(TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறலாம். ஹெக்டர் ப்ளஸ், அடாஸ் செயல்பாடுகளையும் பெறுகிறது, அவை டாப் ஸ்பெக் டிரிம் கார்களில் மட்டுமே கிடைக்கின்றன, அவை இன்னோவா கிரிஸ்டாவைவிட மிக அதிக விலை கொண்டவை.
ஹீண்டாய் அல்கசார்: இந்த பட்டியலில் கடைசியாக உள்ள மாடல் அல்கசார் காரும் டூயல் 10.25 இன்ச் டிஸ்பிளேக்கள், அகலமான சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் , காற்றோட்டமான முன்புற இருக்கைகள் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றை வழங்குகிறது பாதுகாப்பைப் பொருத்தவரை, அது அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி திட்டம் கன்ட்ரோல்(ESC), அனைத்து சக்கர டிஸ்க் பிரேக்குகள், டயர் அழுத்தக் கண்காணிப்பு சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது.
மேலும் படிக்கவும்: காலந்தோறும் மாறாத டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா - 18 ஆண்டுகளாக வெல்ல இயலாத இடத்தில் !
இன்னோவா கிரிஸ்டாவின் அதே விலையில் உங்களுக்கு கிடைக்கும் மாற்று கார்கள் இதோ புதிய தொழில்நுட்பங்களுடன் கூடுதலாக பொருத்தப்பட்ட எஸ்யூவிகள் நன்றாகத் தெரிந்தாலும் கூட, டொயோட்டா கார்கைளப் போல மக்கள் பயன்பாட்டிற்கான பயண கார்கள் அவை அல்ல. நீங்கள் பிரபலமான டொயோட்டா MPV -ஐ தேர்ந்தெடுப்பீர்களா அல்லது பிற 7 இருக்கை எஸ்யுவிக்களை தேர்ந்தெடுப்பீர்களா? கீழே உள்ள கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்கவும்: இன்னோவா கிரிஸ்டா டீசல்