Toyota Innova Crysta : ரூ.37,000 வரை விலை உயர்ந்துள்ளது
published on ஆகஸ்ட் 03, 2023 02:29 pm by shreyash for டொயோட்டா இனோவா கிரிஸ்டா
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு மாதங்களில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா இரண்டாவது தடவையாக விலை உயர்வை பெற்றுள்ளது.
● இதன் மிட்-ஸ்பெக் VX டிரிம் இப்போது ரூ.35,000 அதிக விலையில் உள்ளது.
● Innova Crysta ஆனது 2.4 லிட்டர் 150PS டீசல் எஞ்சினுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.
● 8-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, தானியங்கி ஏசி மற்றும் 8-வே எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
● இதன் புதிய விலைகள் ரூ.19.99 லட்சம் முதல் ரூ.26.05 லட்சம் வரை.
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக விலை உயர்வை பெறுவதால், இப்போது, இந்த காரை வாங்கும் போது நீங்கள் இன்னும் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். டாப்-ஸ்பெக் டிரிம் மிக அதிக விலை உயர்வை பெற்றுள்ளது, அதே சமயம் அதன் பேஸ்-ஸ்பெக் டிரிம் விலை மாறாமல் உள்ளது. கீழே உள்ள அட்டவணையில் இன்னோவா கிரிஸ்டாவின் வேரியன்ட் வாரியான விலை திருத்தத்தை பார்க்கலாம்.
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
GX (7S) |
ரூ. 19.99 லட்சம் |
ரூ. 19.99 லட்சம் |
எந்த வித்தியாசமும் இல்லை |
GX (8S) |
ரூ. 19.99 லட்சம் |
ரூ. 19.99 லட்சம் |
ஒரு வித்தியாசமும் இல்லை |
VX (7S) |
ரூ. 24.04 லட்சம் |
ரூ. 24.39 லட்சம் |
+ ரூ. 35,000 |
VX (8S) |
ரூ. 24.09 லட்சம் |
ரூ. 24.44 லட்சம் |
+ ரூ. 35,000 |
ZX (7S) |
ரூ. 25.68 லட்சம் |
ரூ. 26.05 லட்சம் |
+ ரூ. 37,000 |
அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை
டாப் வேரியண்ட் ரூ.37,000 என்ற விலையில் சற்றே அதிக பெறுவதால் கூட விலை உயர்வு நியாயமான அளவில் உள்ளது. இந்த விலை உயர்வால் பேஸ்-ஸ்பெக் ஜிஎக்ஸ் வேரியன்ட்கள் பாதிக்கப்படவில்லை, மேலும் பேஸ்-ஸ்பெக் இன்னோவா ஹைகிராஸை விட ரூ. 32,000 விலை அதிகமாக உள்ளது.
மேலும் பார்க்கவும்: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை இப்போது ஆம்புலன்சாக மாற்றியமைக்கலாம்
இன்னோவா கிரிஸ்ட்டா என்ன வழங்குகிறது?
இன்னோவா கிரிஸ்டா -வில் இருக்கும் வசதிகளின் பட்டியலை பார்க்கும் போது, இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் AC, 8 வே அட்ஜஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை, லெதரைட் சீட்கள், ஒரு டச் டம்பிள் இரண்டாவது வரிசை இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. .
ஏழு ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை பாதுகாப்புக்காக இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்னும் இது டீசல் எம்பிவி -யாக கிடைக்கிறது
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா MPV -யின் முக்கிய கவன ஈர்ப்புகளில் ஒன்று, அது இன்னும் 2.4 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது மேலும் இது 150PS மற்றும் 343Nm ஐ கொடுக்கும். இதற்கு நேர்மாறாக, இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர் ட்ரெயின்களுடன் வழங்கப்படுகிறது, மேலும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இல்லை.
போட்டியாளர்கள்
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் விலை இப்போது ரூ.19.99 லட்சத்தில் இருந்து ரூ.26.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூ.ம் டெல்லி) வரை உள்ளது. எம்பிவி மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் கியா கேரன்ஸ் ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டீசல்
0 out of 0 found this helpful