சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Toyota Innova Crysta -வின் புதிய மிட்-ஸ்பெக் GX பிளஸ் வேரியன்ட் ரூ.21.39 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வேரியன்ட் 7- மற்றும் 8-சீட்டர் அமைப்பில் கிடைக்கிறது. என்ட்ரி-ஸ்பெக் GX டிரிமை விட ரூ.1.45 லட்சம் வரை கூடுதலாக இருக்கும்.

  • டொயோட்டா இப்போது இன்னோவா கிரிஸ்டாவை 4 வேரியன்ட்களில் விற்பனை செய்கிறது: GX, GX Plus, VX மற்றும் ZX.

  • போர்டில் உள்ள வசதிகளில் ஆட்டோ-ஃபோல்டிங் ORVMகள், 8-இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் 3 ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும்.

  • 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 5-ஸ்பீடு MT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • இன்னோவா கிரிஸ்டா விலை ரூ.19.99 லட்சத்தில் இருந்து ரூ.26.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கின்றது.

டொயோட்டா 2024 ஆம் ஆண்டில் மற்றொரு வேரியன்ட்-அப்டேட்டை பெற்றுள்ளது. சமீபத்தில் பெட்ரோல்-ஒன்லி டொயோட்டா இன்னோவா ஹைகிராஸின் புதிய டாப்-ஸ்பெக் GX (O) வேரியன்ட்டை அறிமுகப்படுத்திய பிறகு டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா -வின் வரிசையில் இப்போது புதிய மிட்-ஸ்பெக் GX பிளஸ் வேரியன்ட்டை சேர்த்துள்ளது.

வேரியன்ட் வாரியான விலை விவரங்கள்

வேரியன்ட்

விலை

GX பிளஸ் 7-சீட்டர்

ரூ.21.39 லட்சம்

GX பிளஸ் 8-சீட்டர்

ரூ.21.44 லட்சம்

டீசலில் பவர்டு இந்த காரின் என்ட்ரி லெவல் GX டிரிமை விட புதிய GX பிளஸ் வேரியன்ட்டின் விலை ரூ.1.45 லட்சம் வரை அதிகம்.

GX பிளஸ் 5 கலர்களில் கிடைக்கும்: சூப்பர் ஒயிட், ஆட்டிட்யூட் பிளாக் மைக்கா, அவண்ட்-கார்ட் ப்ரோன்ஸ் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பேர்ல் மற்றும் சில்வர் மெட்டாலிக்.

வசதிகள்

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா GX பிளஸ் வேரியன்ட்டில் ஆட்டோ-ஃபோல்டிங் வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMகள்), துணி இருக்கைகள் மற்றும் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இன்னோவா கிரிஸ்டாவின் GX பிளஸ் பின்புற பார்க்கிங் கேமரா, 3 ஏர்பேக்குகள் (ஓட்டுனர் பக்க முழங்கால் ஏர்பேக் உட்பட) மற்றும் வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSC) ஆகியவற்றைப் பெறுகிறது.

டீசல் இன்ஜின் மட்டுமே கிடைக்கும்

இது ஒரு 2.4 லிட்டர் டீசல் இன்ஜினுடன் (150 PS மற்றும் 343 Nm), 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு டிரைவ் மோடுகள் உள்ளன: ஈகோ மற்றும் பவர்.

மேலும் படிக்க: புதிய Toyota Rumion மிட்-ஸ்பெக் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் அறிமுகம், விலை ரூ.13 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

விலை மற்றும் போட்டியாளர்கள்

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் விலை ரூ.19.99 லட்சம் முதல் ரூ.26.30 லட்சம் வரையில் உள்ளது. இது மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் கியா கேரன்ஸ் ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும். டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் மாருதி இன்விக்டோ ஆகிய டீசல் கார்களுக்கு இணையாக இருக்கும்.

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி -க்கானவை

மேலும் படிக்க: இன்னோவா கிரிஸ்டா டீசல்

r
வெளியிட்டவர்

rohit

  • 87 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டொயோட்டா இனோவா Crysta

Read Full News

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.10.44 - 13.73 லட்சம்*
Rs.19.77 - 30.98 லட்சம்*
Rs.10.52 - 19.67 லட்சம்*
Rs.2 - 2.50 சிஆர்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை