ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இந்த நிலைமையா ! Hyundai Creta N Line காரை வாங்க 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்
published on மார்ச் 04, 2024 06:07 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா என் லைன்
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
கிரெட்டா எஸ்யூவி -யின் ஸ்போர்ட்டியர் தோற்றம் கொண்ட வெர்ஷனாக இந்த கார் இருக்கும். இது மார்ச் 11 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
-
கிரெட்டா N லைனுக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் மற்றும் டீலர்ஷிப்களில் ரூ.25,000க்கு ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
-
எஸ்யூவி அறிமுகமான நாளிலிருந்து 6 முதல் 8 வாரங்கள் வெயிட்டிங் பீரியட் எனப்படும் காத்திருப்பு காலம் இருக்கலாம்.
-
வெளிப்புறத்தில் ரெட் நிற ஹைலைட்ஸ் மற்றும் சுற்றிலும் 'N லைன்' பேட்ஜ்கள் உள்ளன.
-
டாஷ்போர்டில் ரெட் ஆக்ஸன்ட்களுடன் ஆல் பிளாக் கேபின் கொடுக்கப்படலாம்
-
போர்டில் உள்ள அம்சங்களில் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள், 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
6-ஸ்பீடு MT மற்றும் 7-ஸ்பீடு DCT இரண்டையும் கொண்ட 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டை பெறுகிறது.
-
விலை ரூ.17.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார்களில் ஒன்றான ஹூண்டாய் கிரெட்டா N லைன் மார்ச் 11 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஹூண்டாய் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் அதன் டீலர்ஷிப்களில் 25,000 ரூபாய்க்கு ஸ்போர்ட்டியர் எஸ்யூவி -க்கான முன்பதிவை தொடங்கிவிட்டது. மே 2024 முதல் டெலிவரிகள் தொடங்கும். கிரெட்டா N லைன் அறிமுகப்படுத்தப்படுவதற்கு 6 முதல் 8 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கலாம் என ஹூண்டாய் கணித்துள்ளது. ஸ்போர்ட்டியர் கிரெட்டாவின் விலை அறிவிப்புக்கு முன்னதாக அதன் விரைவான கண்ணோட்டம் இங்கே:
காரில் உள்ள ஒட்டுமொத்த மாற்றங்கள்
ஹூண்டாய் கிரெட்டா N லைன் அதன் வழக்கமான இணையுடன் ஒப்பிடும்போது ஸ்போர்ட்டியர் தோற்றத்தைக் கொண்டுள்ளது. கிரெட்டா N லைனில் ஸ்டாண்டர்டான கிரெட்டா -வுடன் உள்ள மாற்றங்களை பார்க்கும் போது புதிய கிரில், ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், வெளிப்புறத்தில் பல 'N லைன்' பேட்ஜ்கள், ரெட் ஹைலைட்ஸ், டூயல் டிப் எக்ஸாஸ்ட் மற்றும் ரெட் பிரேக் காலிப்பர்களுடன் கூடிய பெரிய 18-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை கொடுக்கப்படும். இது கான்ட்ராஸ்ட் பிளாக் ரூஃப் உடன் கூடிய தண்டர் ப்ளூ என்ற புதிய ஷேடையும் பெறுகிறது.
உட்புறத்தில் ஹூண்டாய் ஆல் பிளாக் தீம் -யும் வழங்கவுள்ளது. இது டாஷ்போர்டில் ரெட் ஹைலைட்ஸ் மற்றும் அப்ஹோல்ஸ்டரிக்கு கான்ட்ராஸ்ட் ரெட் ஸ்டிச் கொடுக்கப்படலாம். கிரெட்டா N லைன், N லைன் போன்ற ஸ்டீயரிங் வீலுடன் வரும்.
இதில் உள்ள வசதிகள் ?
ஸ்டாண்டர்டான மாடலில் உள்ள டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்காக மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்காக), வென்டிலேட்டர் முன் இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் ஜோன் ஏசி ஆகியவற்றுடன் கிரெட்டா N லைனை ஹூண்டாய் வழங்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்த ஸ்போர்ட்டியர் ஹூண்டாய் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை ஆட்டோ ஹோல்டு ஆகியவை இருக்கும். கிரெட்டா N லைன் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்தையும் பெறலாம்.
மேலும் படிக்க: EV கார் திட்டங்களை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்: ஜெனரேட்டிவ் AI -மீது முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக அறிவிப்பு
டர்போசார்ஜ் இன்ஜின்
ஹூண்டாய் அதே 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (160 PS/ 253 Nm) கிரெட்டா N லைனை ஸ்டாண்டர்டான மாடலாக வழங்கும். ஆனால் 7 - ஸ்பீடு DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) -க்கு பதிலாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வழங்க வாய்ப்புள்ளது. -
வழக்கமான கிரெட்டாவுட ஒப்பிடும் போது சிறப்பான கையாளுதலுக்கான சற்றே வித்தியாசமான சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் விரைவான ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸை கொண்டிருக்கும் எதிர்பார்க்கிறோம். ஹூண்டாய் இதை ஸ்போர்ட்டியர்-சவுண்ட் எக்ஸாஸ்ட் உடன் வழங்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா N -லைன் ஆரம்ப விலை ரூ.17.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கியா செல்டோஸ் ஜிடிஎக்ஸ்+ மற்றும் எக்ஸ்-லைன் உடன் போட்டியிடும். மற்றும் ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி லைன் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்றவற்றுக்கு ஸ்போர்ட்டியர் தோற்றமுடைய மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை