• English
  • Login / Register

ஃபேஸ்லிஃப்டட் டாடா சஃபாரி -யின் மறைக்கப்படாத இன்டீரியர் படம் பிடிக்கப்பட்டுள்ளது

published on ஜூலை 28, 2023 02:36 pm by stuti for டாடா சாஃபாரி

  • 35 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டின் கேபினில் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் டாடா அவின்யாவிலிருந்து பெறப்பட்ட 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை மையத்தில் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

2024 Tata Safari spied

  • புதிய சென்டர் கன்சோலின் ஒரு பகுதியாக 2024 டாடா சஃபாரியின் டச் ஸ்கிரீன் ஹௌசிங்குகளும் மாற்றியமைக்கப்படலாம்.

  •  எஸ்யூவி -யானது வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் அகலமான சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறும்.

  •  அதன் பாதுகாப்பு கிட் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படலாம்.

  •  இது தற்போதைய சஃபாரியில் இருந்து 2 லிட்டர் டீசல் இன்ஜினை தக்க வைத்துக் கொள்ளும்.

  •  2024 டாடா சஃபாரி 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை பெறலாம்.

  •  ரூ.16 லட்சம் (எக்ஸ்-ஷோ ரூம்) ஆரம்ப விலையுடன் இது அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என நாங்கள் நம்புகிறோம்.

டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்படும் வெளியீட்டிற்கு முன்னதாக அதன் வேகத்தை முழுமையாகக் கொண்டு வருகிறது. அதன் புதுப்பிக்கப்பட்ட உட்புறம் ஏற்கனவே கேமராவில் சிக்கியிருந்தாலும், சமீபத்திய ஸ்பை ஷாட்டுகளில் எந்த உருவ மறைப்பும் இல்லாமல் அதை காட்டுகின்றன, இது புதிய சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீல் வடிவமைப்பின் தெளிவான பார்வையை  நமக்கு வழங்குகிறது.

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல்

Tata Safari Facelift Interior

மறுசீரமைக்கப்பட்ட சென்டர் AC  வென்ட்கள் மற்றும் அதே 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட்டுக்கான திருத்தப்பட்ட ஹௌசிங்குகள் உட்பட, சென்டர் கன்சோலுக்கான குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளை படம் காட்டுகிறது. அதன் கீழே புதிய கிளைமேட் கன்ட்ரோல் செட்டப்  உள்ளது, இது ஹாப்டிக் கன்ட்ரோல்களுடன்  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் டாடாவின் அவின்யா கான்செப்டில் இருந்து  ஈர்க்கப்பட்ட அனைத்து புதிய 4-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகும். இது மையத்தில் ஒரு டிஸ்பிளேயை உள்ளடக்கியது, இது ஒரு ஒளிரும் டாடா லோகோ மற்றும் கூடுதல் ஓட்டுநர் தகவலைக் கொண்டிருக்கும். முந்தைய ஸ்பை ஷாட்களில், அது புதிய டிரைவ் மோடு செலக்டரையும் பெறும் என்பது தெரிகிறது,  டாடா நெக்ஸான் EV மேக்ஸில் உள்ளதைப் போன்ற ஒரு டிஸ்பிளேயைக் கொண்டிருக்கும். அதன் பின்னால், ஒரு புதிய கியர் செலக்டரும் தெரிகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

Tata Safari cabin

2024 டாடா சஃபாரி அதன் தற்போதைய பதிப்பில் இருந்து டிரைவருக்கான  டிஜிட்டல் டிஸ்ப்ளே, 9-ஸ்பீக்கர் JBL  சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், ஆம்பியன்ட்  லைட்டுகளுடன் கூடிய பனோரமிக் சன்ரூஃப், 6-வே பவர் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டிருக்கும். அட்ஜஸ்டபிள் ஓட்டுநர் இருக்கை, மற்றும் வென்டிலேட்டட் முன்புற மற்றும் நடுத்தர வரிசை இருக்கைகள் (பிந்தையது 6-சீட்டர் உள்ளமைவுடன் மட்டுமே கிடைக்கும்)ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தற்போதைய சஃபாரி ஏற்கனவே ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் (ADAS) அம்சங்களைக் கொண்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மூலம், சஃபாரி அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆறு ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாகப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரையில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்கவும்: சாலையில் தென்பட்ட டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் சோதனை கார்

பவர்டிரெயின்கள் விவரம்

Tata Safari engine

ஃபேஸ்லிஃப்டட் SUV கரன்ட் மாடலில் இருந்து 2-லிட்டர் டீசல் இன்ஜினை (170PS மற்றும் 350Nm) தக்கவைத்துக் கொள்ளும். இந்த யூனிட் 6 வேக மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன்  இணைக்கப்பட்டுள்ளது

2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் டாடா புதுப்பிக்கப்பட்ட சஃபாரியை வழங்கக்கூடும். இந்த இன்ஜின் 170PS மற்றும் 280Nm -ஐ உருவாக்குகிறது, மேலும் DCT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஃபேஸ்லிஃப்டட் டாடா சஃபாரியின்  தொடக்க விலை ரூ.16 லட்சம் (எக்ஸ் ஷோ ரூம்) ஆக இருக்கலாம். அது அறிமுகப்படுத்திய உடன் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா XUV700 மற்றும் ஹூண்டாய் அல்காஸர் ஆகியவற்றுடன் போட்டியைத் தொடரும்.

படங்களின் ஆதாரம்

was this article helpful ?

Write your Comment on Tata சாஃபாரி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience