• English
    • Login / Register

    Tata Nexon EV -யில் 40.5 kWh பேட்டரி பேக் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது

    டாடா நெக்ஸன் இவி க்காக பிப்ரவரி 19, 2025 08:31 pm அன்று yashika ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 68 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    டாடாவின் ஆல்-எலக்ட்ரிக் சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆனது இப்போது 30 kWh (மீடியம் ரேஞ்ச்) மற்றும் 45 kWh (லாங் ரேஞ்ச்) என இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வருகிறது.

    Tata Nexon EV

    2024 அக்டோபர் ஆண்டில் டாடா நெக்ஸான் EV -யின் பேட்டரி பேக் மற்றும் வசதிகள் அப்டேட் செய்யப்பட்டன. இதன் மூலம் 45 kWh பேட்டரி பேக் 489 கி.மீ என கிளைம் செய்யப்பட்டது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே 30 kWh மற்றும் 40.5 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன்  கிடைத்தது. இருப்பினும் டாடா இப்போது நெக்ஸான் EV வரிசையிலிருந்து 40.5 kWh பேட்டரி பேக்கை இப்போது அகற்றியுள்ளது. இப்போது நெக்ஸான் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது: 30 kWh மற்றும் 45 kWh. அதன் விலை விவரங்கள்:

    பேட்டரி பேக்குகள்

    விலை

    30 kWh

    கிரியேட்டிவ் பிளஸ்

    ரூ.12.49 லட்சம்

    ஃபியர்லெஸ்

    ரூ.12.29 லட்சம்

    ஃபியர்லெஸ் பிளஸ்

    ரூ.13.79 லட்சம்

    ஃபியர்லெஸ் பிளஸ் எஸ்

    ரூ.14.29 லட்சம்

    எம்பவர்டு

    ரூ.14.79 லட்சம்

    45 kWh

    கிரியேட்டிவ்

    ரூ.13.99 லட்சம்

    ஃபியர்லெஸ்

    ரூ.14.99 லட்சம்

    எம்பவர்டு

    ரூ.15.99 லட்சம்

    எம்பவர்டு பிளஸ்

    ரூ.16.99 லட்சம்

    (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி)

    டாடா நெக்ஸான் EV: கிடைக்கும் பேட்டரி பேக்குகள்

    Tata Nexon EV Side

    இப்போது கிடைக்கும் பேட்டரி பேக்குகளின் விரிவான விவரங்கள் இங்கே:

    பேட்டரி பேக்

    30 kWh

    45 kWh

    கிளைம்டு ரேஞ்ச்

    275 கி.மீ (MIDC* பகுதி I+II)

    489 கி.மீ (MIDC* பகுதி I+II)

    பவர்

    130 PS

    144 PS

    டார்க்

    215 Nm

    215 Nm

    MIDC - மாடிஃபைடு இந்தியன் டிரைவ் சைக்கிள்

    முன்பு கிடைத்த 40.5 kWh பேட்டரி பேக் ஆனது நெக்ஸான் EV -யின் 45 kWh பேட்டரி பேக் பதிப்பின் அதே பவர் மற்றும் டார்க் அவுட்புட்களை கொண்டிருந்தது. இது 390 கி.மீ (MIDC பகுதி I+II) வரை கிளைம்டு ரேஞ்சை கொடுக்கிறது.

    டாடா நெக்ஸான் EV: வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    Tata Nexon EV Dashboard

    டாடா நெக்ஸான் EV ஆனது ஒரு பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் கிளைம்டு ரேஞ்ச், கனெக்டட் கார் கன்ட்ரோல், வென்டிலேட்டட் புஷ் க்ரூன்ட் டெக்னாலஜி போன்ற விரிவான வசதி மற்றும் வசதி அம்சங்களை உள்ளடக்கியது.

    டாடா நெக்ஸான் EV ஆனது ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. பாரத் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்களில் டாடா நெக்ஸான் இவி முழுமையாக 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. 

    டாடா நெக்ஸான் EV: போட்டியாளர்கள்

    டாடா நெக்ஸான் EV -க்கு உள்ள ஒரே ஒரு நேரடி போட்டியாளர் மஹிந்திரா XUV400 EV மட்டுமே. உங்கள் பட்ஜெட்டை கொஞ்சம் அதிகரிக்க முடிந்தால், MG ZS EV -யையும் கவனத்தில் வைக்கலாம். மாற்றாக இதே போன்ற விலை வரம்பில் உள்ள காம்பாக்ட் எஸ்யூவி -களான ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றின் ICE வேரியன்ட்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம். 

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Tata நெக்ஸன் இவி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience