சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Tata Nexon EV Fearless Plus Long Range மற்றும் Mahindra XUV400 EL Pro: எந்த EV -யை வாங்குவது சிறந்தது?

published on மார்ச் 29, 2024 05:16 pm by rohit for டாடா நெக்ஸன் இவி

கிட்டத்தட்ட ஒரே விலையில் இந்த இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவிகளும் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் உட்பட பெரும்பாலான விஷயங்களில் ஒரே போல உள்ளது.

டாடா நெக்ஸான் EV இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் எஸ்யூவியாக உள்ளது. மற்றும் அதன் நேரடி போட்டியாளராக மஹிந்திரா XUV400 உள்ளது. இரண்டு EV -களும் ஒரே மாதிரியான விலை புள்ளிகளில் கிடைப்பதால் அவற்றின் சில வேரியன்ட்களின் விலை மாற்றம் இருக்கலாம். இந்த ஒப்பீட்டில் ஹையர்-ஸ்பெக் டாடா நெக்ஸான் EV ஃபியர்லெஸ் பிளஸ் லாங் ரேஞ்ச் (LR) -யின் விலை மற்றும் டாப்-ஸ்பெக் மஹிந்திரா XUV400 EL Pro ஒரே போல இருப்பதைப் பார்க்கிறோம் (பெரிய பேட்டரி பேக்குடன் சிங்கிள்-டோன்).

விலை விவரங்கள் ?

டாடா நெக்ஸான் EV ஃபியர்லெஸ் பிளஸ் LR

மஹிந்திரா XUV400 EL Pro (ST 39.4 kWh)

ரூ.17.49 லட்சம்

ரூ.17.49 லட்சம்

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான்-இந்தியா) -க்கான விலை ஆகும்

இங்கே கருத்தில் கொள்ளப்படும் இரண்டு வேரியன்ட்களும் ஒரே மாதிரியான விலையில் உள்ளன. ஃபியர்லெஸ் ப்ளஸ் எல்ஆர் ஒரு ஹையர்-ஸ்பெக் வேரியன்ட் என்றாலும் EL Pro (பெரிய பேட்டரியுடன்) மஹிந்திரா EV-யின் ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட் ஆகும்.

அளவுகள்

அளவுகள்

டாடா நெக்ஸான் EV ஃபியர்லெஸ் பிளஸ் LR

மஹிந்திரா XUV400 EL Pro

நீளம்

3994 மி.மீ

4200 மி.மீ

அகலம்

1811 மி.மீ

1821 மி.மீ

உயரம்

1616 மி.மீ

1634 மி.மீ

வீல்பேஸ்

2498 மி.மீ

2600 மி.மீ

பூட் ஸ்பேஸ்

350 லிட்டர்

378 லிட்டர்

  • டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 க்கு இடையில் பிந்தையது ஒவ்வொரு அளவிலும் பெரியது. அதன் ICE இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) போட்டியாளரான XUV300 ஐ விட நீளமானது. ஆனால் டாடா EV ஆனது ICE-பவர்டு நெக்ஸான் -க்கு இணையான நேரடி EV என்பதால் சப்-4m கார் ஆகும்.

  • இரண்டுக்கும் இடையேயான வீல்பேஸ் அளவில் மஹிந்திரா XUV400 முன்னணியில் உள்ளது. இது விசாலமான கேபினை கொண்டிருக்கின்றது.

  • நீங்கள் ஒரு பெரிய பூட் ஸ்பேஸ் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவியை விரும்பினால் மஹிந்திரா XUV400 உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். ஏனெனில் இது கூடுதலாக 28 லிட்டர் ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்த இரண்டு EV -களிலும் முன்பக்க ஸ்டோரேஜ்(frank) ஆப்ஷன் இல்லை.

பவர்டிரெய்ன் விவரங்கள்

விவரங்கள்

டாடா நெக்ஸான் ஃபியர்லெஸ் பிளஸ் எல்ஆர்

மஹிந்திரா XUV400 EL Pro

பேட்டரி பேக்

40.5 kWh

39.4 kWh

எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை

1

1

பவர்

145 PS

150 PS

டார்க்

215 Nm

310 Nm

MIDC கிளைம்டு ரேஞ்ச்

465 கி.மீ

456 கி.மீ

  • இரண்டு EV -களும் ஒரே அளவிலான பேட்டரி பேக்குகளை கொண்டுள்ளன. நெக்ஸான் EV பவர் அவுட்புட் அடிப்படையில் சற்று முன்னிலையில் உள்ளது.

  • டார்க் அவுட்புட் எண்களுக்கு வரும்போது XUV400 வெற்றியாளராக உள்ளது. கிட்டத்தட்ட 100 Nm அதிக டார்க்கை வழங்குகிறது.

  • கிளைம்டு ரேஞ்ச் அடிப்படையில் நெக்ஸான் EV மஹிந்திரா EV -யை விட சற்று முன்னிலையில் உள்ளது.

சார்ஜிங் விவரங்கள்

சார்ஜர்

சார்ஜிங் நேரம்

டாடா நெக்ஸான் EV ஃபியர்லெஸ் பிளஸ் LR

மஹிந்திரா XUV400 EL Pro

3.3 kW AC சார்ஜர் (10-100%)

15 மணி நேரம்

13.5 மணி நேரம்

7.2kW AC ஃபாஸ்ட் சார்ஜர் (10-100%)

6 மணி நேரம்

6.5 மணி நேரம்

50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர்

56 நிமிடங்கள்

50 நிமிடங்கள்

  • நெக்ஸான் EV -யில் 3.3 kW AC சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்ய ஒன்றரை மணிநேரம் எடுக்கும்.

  • மஹிந்திரா XUV400 காரை 7.2 kW AC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி ஃபாஸ்ட் சார்ஜ் செய்ய முடியும்.

  • 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பொறுத்தவரை இரண்டு EVகளும் சார்ஜ் செய்யத் தேவைப்படும் நேரம் மீண்டும் ஒரே மாதிரியாக இருக்கும், மஹிந்திரா EV சற்று வேகமானது.

மேலும் படிக்க: Tata Nexon AMT காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது, இது ஸ்மார்ட் மற்றும் பியூர் வேரியன்ட்களில் கிடைக்கிறது

காரில் உள்ள வசதிகள்

அம்சங்கள்

Tata Nexon EV ஃபியர்லெஸ் பிளஸ் LR

மஹிந்திரா XUV400 EL Pro

வெளிப்புறம்

  • LED DRL -களுடன் ஆட்டோ-LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • ORVM-ஏற்றப்பட்ட டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள்

  • முன் ஃபாக் லைட்ஸ் வித் கார்னரிங் ஃபங்ஷன்

  • 16-இன்ச் அலாய் வீல்கள்

  • ரூஃப் ரெயில்ஸ்

  • பாடி கலர்டு பம்பர்கள்

  • ஷார்க் ஃபின் ஆண்டெனா

  • LED DRLகள் கொண்ட ஆட்டோ-ஹலோஜன் புரொஜெக்டர் ஹெட்லைட்கள்

  • முன்பக்க ஃபாக் லைட்ஸ்

  • ரூஃப் ரெயில்ஸ்

  • 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள்

  • LED டெயில்லைட்கள்

  • ORVMகளில் LED டர்ன் இண்டிகேட்டர்கள்

  • பாடி கலர்டு டோர் ஹேண்டில்ஸ்

  • ஷார்க் ஃபின் ஆண்டெனா

  • பிளாக் ORVMகள்

உட்புறம்

  • குரோம் உள்ளே கதவு கைப்பிடிகள்

  • லெதரைட் அப்ஹோல்ஸ்டரி

  • முன்பக்க ஆர்ம்ரெஸ்ட்

  • லெதரைட் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்

  • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஹெட்ரெஸ்ட்கள்

  • ரியர் பவர் அவுட்லெட்

  • முன்பக்க மற்றும் பின்பக்க USB Type-C 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்கள்

  • லெதரைட் இருக்கைகள்

  • லெதரைட் மூடப்பட்ட ஸ்டீயரிங்

  • முன் USB போர்ட் (X2)

  • ஸ்டோரேஜ் உடன் கூடிய முன் ஆர்ம்ரெஸ்ட்

  • கப்ஹோல்டர்களுடன் இரண்டாவது வரிசை ஆர்ம்ரெஸ்ட்

  • ஸ்மார்ட்போன் ஹோல்டருடன் பின்பக்கம் USB Type-C போர்ட்

  • 12V ஆக்ஸசரி சாக்கெட்

  • நான்கு கதவுகளிலும் பாட்டில் ஹோல்டர்

  • கேபின் விளக்கு

  • சன்கிளாஸ் ஹோல்டர்

  • இரண்டாவது வரிசை பயணிகளுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஹெட்ரெஸ்ட்கள்

கம்ஃபோர்ட் மற்றும் வசதி

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

  • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ஆட்டோ-ஃபோல்டிங் ORVMS

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • ஆல் பவர் விண்டோஸ்

  • புஷ்-பொத்தான் தொடக்கம்/நிறுத்தும்

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங்

  • கூல்டு க்ளோவ் பாக்ஸ்

  • ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள்

  • சன்ரூஃப்

  • 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

  • உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுநர் இருக்கை

  • ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள்

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங்

  • டூயல் ஜோன் ஏசி

  • பின்புற ஏசி வென்ட்கள்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் ஆட்டோ-ஃபோல்டிங் ORVMS

  • டிரைவிங் மோட்ஸ் (ஃபன் மற்றும் ஃபாஸ்ட்)

  • கீலெஸ் என்ட்ரி

  • புஷ்-பொத்தான் ஸ்டார்ட்/ஸ்டாப்

  • நான்கு பவர் விண்டோஸ்

இன்ஃபோடெயின்மென்ட்

  • 10.25-இன்ச் டச்ஸ்கிரீன்

  • Arcade.ev மோடு

  • 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 ட்வீட்டர்கள்

  • அலெக்சா கனெக்ட்டிவிட்டி

  • கனெக்டட் கார் டெக்னாலஜி

  • ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

  • 10.25-இன்ச் டச்ஸ்கிரீன்

  • கனெக்டட் கார் தொழில்நுட்பம்

  • அலெக்சா கனெக்ட்டிவிட்டி

  • 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்வீட்டர்கள்

  • ஸ்மார்ட்வாட்ச் கனெக்ட்டிவிட்டி

  • வாய்ஸ் கமென்ட்ஸ்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

பாதுகாப்பு

  • 6 ஏர்பேக்ஸ்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP)

  • ஆல் டிஸ்க் பிரேக்ஸ்

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • ரிவர்சிங் கேமரா ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள்

  • பின்புற டிஃபோகர்

  • பின்புற வைப்பர் மற்றும் வாஷர்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

  • 6 ஏர்பேக்ஸ்

  • ESP

  • பின்புற துடைப்பான் மற்றும் வாஷர்

  • பின்புற டிஃபோகர்

  • ஹில்-ஹோல்ட் அசிஸ்ட்

  • TPMS

  • அனைத்து டிஸ்க் பிரேக்குகள்

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • ரெயின் சென்ஸிங் ரியர் வைப்பர்

  • ரிவர்ஸிங் கேமரா வித் டைனமிக் கைடில்னெஸ்

  • அதே விலையில் இங்குள்ள இரண்டு EV -கள் LED விளக்குகள், டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற பிரீமியம் வசதிகள் கொண்டதாக இருக்கின்றது.

  • நெக்ஸான் EV ஆனது ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 6-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் போன்ற சில கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது.

  • மறுபுறம் மஹிந்திரா EV -யில் டூயல் ஜோன் ஏசி சன்ரூஃப் மற்றும் ரெயின் சென்ஸிங் ரியர் வைப்பர் போன்ற சில கூடுதல் வசதிகள் கிடைக்கும்.

தீர்ப்பு

இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவி -களின் ஒரே மாதிரியான விலையில் கிடைக்கும் போது ​​நீங்கள் எதைத் தேர்வு செய்தாலும் அவற்றின் ஒரே மாதிரியான ரேஞ்ச் மற்றும் வசதிகளுடன் பெரிதாக நீங்கள் அதிகம் இழக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

உங்கள் குடும்பத்திற்கு அதிக கேபின் இடம் அதிக செயல்திறன் மற்றும் சன்ரூஃப் மற்றும் டூயல்-ஜோன் ஏசி போன்ற ஃபீல்-குட் அம்சங்களை நீங்கள் விரும்பினால் நீங்கள் மஹிந்திரா XUV400 காரை தேர்வு செய்ய வேண்டும். மறுபுறம் நெக்ஸான் EV ஃபியர்லெஸ் பிளஸ் வேரியன்ட் மிகவும் நவீன தோற்றமுடைய EV ஆகும். இது பலவிதமான கனெக்டட் டெக்னாலஜி வசதிகள் மற்றும் கூடுதலான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: Tata Nexon EV ஆட்டோமெட்டிக்

r
வெளியிட்டவர்

rohit

  • 57 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா நிக்சன் EV

Read Full News

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.14.74 - 19.99 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.60.95 - 65.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை