• English
  • Login / Register

டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் ரூ 14.74 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது

published on செப் 14, 2023 03:01 pm by tarun for டாடா நெக்ஸன் இவி

  • 25 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மிட் ரேஞ்ச் வேரியன்ட்கள் 325 கிமீ தூரம் வரை செல்லக்கூடியவை, அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் வேரியன்ட்கள் 465 கிமீ வரை பயணிக்கக் கூடியவை.

Tata Nexon EV 2023

  • நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் ரூ. 14.74 லட்சம் முதல் ரூ. 19.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்க்கும்..

  • கிரியேட்டிவ், ஃபியர்லெஸ் மற்றும் எம்பவர்டு ஆகிய மூன்று டிரிம்களில் கிடைக்கும்.

  • சிறப்பான தோற்றத்திற்காக உள்ளேயும் வெளியேயும் விரிவான ஸ்டைலிங் அப்டேட்களை பெறுகிறது.

  • இப்போது 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவருக்கான 10.25 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

  • ஆறு ஏர்பேக்குகள் (STD), 360-டிகிரி கேமரா, முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.14.74 லட்சம் முதல் ரூ.19.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் EV -யானது 2020 -ம் ஆண்டில் அறிமுகமான பிறகு அதன் முதல் பெரிய அப்டேட்டை பெறுகிறது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன, விரைவில் அதன் டெலிவரிகள் தொடங்கப்பட உள்ளன.

வேரியன்ட் வாரியான விலை

மூன்று டிரிம்களில் இந்த காரை செலக்ட்  செய்யலாம், அவை:

வேரியன்ட்

மிட்-ரேஞ்ச்

லாங்-ரேஞ்ச் 

கிரியேட்டிவ்+

ரூ.14.74 லட்சம்

-

ஃபியர்லெஸ்

ரூ.16.19 லட்சம்

ரூ.18.19 லட்சம்

ஃபியர்லெஸ் +

ரூ.16.69 லட்சம்

ரூ.18.69 லட்சம்

எம்பவர்டு

ரூ.17.84 லட்சம்

-

எம்பவர்டு +

-

ரூ.19.94 லட்சம்

அடுத்த காலாண்டில் இருந்து EV -சார்ந்த டீலர்ஷிப்களை அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, ஐந்து டீலர்ஷிப்களை டாடா தொடங்கவுள்ளது, இது காலப்போக்கில் அதிகரிக்கப்படவுள்ளன.

புதிய ஸ்டைலிங்

நேர்த்தியான கிரில், இணைக்கப்பட்ட LED DRLகள் மற்றும் டெயில் விளக்குகள், ஸ்பிலிட் ஹெட்லேம்ப் செட்டப் மற்றும் புதிய வடிவிலான பம்ப்பர்கள் ஆகியவற்றுடன் ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் மிகவும் நவீன மற்றும் நவநாகரீக ஸ்டைலிங்கை மாற்றியமைக்கிறது. இது புதிய ஏரோடைனமிகல் பாணியிலான 16-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பு மாற்றங்கள் கிட்டத்தட்ட நெக்ஸானுடன் ஒத்துப்போகின்றன, ஆனால் அதை மேலும் வேறுபடுத்த உதவும் வகையில், பிரத்யேகமான வடிவமைப்பை டாடா சேர்த்துள்ளது.

கேபின் புதிய டூயல்-டோன் தீம், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டாஷ்போர்டு, மெலிதான ஏசி வென்ட்கள் மற்றும் டச்-என்பில்டு ஏசி கண்ட்ரோல் பேனல் ஆகியவற்றுடன் புதிய வாழ்க்கையை பெறுகிறது. டாடா அவின்யாவால் ஈர்க்கப்பட்ட 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலும், டாடா லோகோவை கொண்ட பேக்லிட் டிஸ்ப்ளேவும் உள்ளது.

கூடுதல் அம்சம் நிறைந்தது

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் பல பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது, அவை:

  • 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

  • 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட​ சிஸ்டம்

  • நேவிகேஷன் உடன் கூடிய டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்பிளே

  • எலக்ட்ரிக் சன்ரூஃப்

  • ஆட்டோமெட்டிக் ஏசி

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • க்ரூஸ் கன்ட்ரோல்

  • வென்டிலேட்டட் முன் இருக்கைகள்

  • இணை ஓட்டுநர் இருக்கைக்கான உயரத்தை சரி செய்து கொள்ளும் வசதி

இது இப்போது பாதுகாப்பானது

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் அதன் பாதுகாப்பு அளவை அதிகரிப்பது போன்ற அம்சங்களுடன்:

  • ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு)

  • 360 டிகிரி கேமரா

  • பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங்

  • முன் பார்க்கிங் சென்சார்கள்

  • ESC

  • ISOFIX சைல்டு சீட் மவுண்ட்ஸ்

  • ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள்

  • மழையை உணரும் வைப்பர்கள்

புதுப்பிக்கப்பட்ட பேட்டரி பேக்குகள்

Tata Nexon EV 2023

விவரம்

மிட்-ரேஞ்ச்

லாங்-ரேஞ்ச் 

பேட்டரி

30kWh

40.5kWh

ரேஞ்ச்

325 கி.மீ

465 கி.மீ

பவர்/டார்க்

129PS/ 215Nm

144PS/ 215Nm

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் 30kWh மற்றும் 40.5kWh பேட்டரி பேக்குகளை பெறுகிறது. இருந்தாலும், 325 கிமீ (+13 கிமீ) மற்றும் 465 கிமீ (+12 கிமீ) வரை இதன் ரேஞ்ச் மேம்பட்டுள்ளது. இரண்டு வேரியன்ட்களிலும் அதிகபட்ச டார்க் விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன, அதே சமயம் லாங்-ரேஞ்ச் வேரியன்ட் வெறும் 1PS பவர் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் நேரம்

Tata Nexon EV 2023

சார்ஜிங் நேரம் (10-100 சதவீதம்)

மிட்-ரேஞ்ச்

லாங்-ரேஞ்ச் 

15A பிளக் பாயிண்ட்

10.5 மணி நேரம்

15 மணி நேரம்

3.3kW ஏசி வால்பாக்ஸ்

10.5 மணி நேரம்

15 மணி நேரம்

7.2கிலோவாட் ஏசி

4.3 மணி நேரம்

6 மணி நேரம்

ஃபாஸ்ட் சார்ஜிங்

56 நிமிடங்கள்

56 நிமிடங்கள்

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் DC ஃபாஸ்ட் சார்ஜருக்கு நன்றி, இதன் மூலமாக வெறும் 56 நிமிடங்களில் 10 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இது வெஹிகிள் டூ லோட் மற்றும் மற்றும் வெஹிகிள் டூ வெஹிகிள் சார்ஜ் செய்யும் செயல்பாடுகளை ஆதரிக்கிறது, மின் சாதனங்களுக்கான பவர் பேங்காக செயல்படுகிறது, மேலும் பிற EV -க்களையும் கூட சார்ஜ் செய்து கொள்ளலாம்!

போட்டியாளர்கள்

Tata Nexon EV 2023

டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் மஹிந்திரா XUV400 போன்றவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும் போது ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் MG ZS EV ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் 2023-2023 AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata நெக்ஸன் இவி

Read Full News

explore மேலும் on டாடா நெக்ஸன் இவி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • ஜீப் அவென்ஞ்ஜர்
    ஜீப் அவென்ஞ்ஜர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • மாருதி இவிஎக்ஸ்
    மாருதி இவிஎக்ஸ்
    Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs.63 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev5
    க்யா ev5
    Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience