Tata Nexon EV Facelift: காரை ஓட்டியபோது நாங்கள் தெரிந்து கொண்ட 5 விஷயங்கள்
published on செப் 22, 2023 04:50 pm by ansh for டாடா நெக்ஸன் இவி
- 128 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய நெக்ஸான் EV செயல்திறன் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் சிறப்பாக செயல்படுகிறது, ஆனால் ஃபேஸ்லிஃப்ட் -க்கு முந்தைய நெக்ஸான் EV -யில் இன்னும் சில சிக்கல்கள் உள்ளன.
டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் ரூ. 14.74 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இப்போது முற்றிலும் புதுமையான வடிவமைப்பு, நிறைய புதிய அம்சங்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரேஞ்சை பெறுகிறது. அதன் வெளியீட்டிற்கு முன்னதாக, எலக்ட்ரிக் எஸ்யூவி -யை ஓட்டுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது, நாங்கள் கவனித்த விஷயங்கள் இங்கே:
ஒரு EV -யாக வடிவமைக்கப்பட்டுள்ளது
நெக்ஸான் EV -யின் முந்தைய பதிப்பு நெக்ஸான் காரின் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) பதிப்பிலிருந்து பெறப்பட்டது. EV-சார்ந்த நீல நிற கூறுகள் மற்றும் மூடிய கிரில்லைத் தவிர்த்து, இது ஒரே மாதிரியாக இருந்தது மற்றும் குறைந்த அளவிலான ஒப்பனை மாற்றங்களை மட்டுமே கொண்டிருந்தது. ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் EV உடன், டாடா இதற்கு நேர்மாறாகச் செய்ததாகத் தெரிகிறது: முதலில் நெக்ஸான் EV - யை ஆரம்பத்தில் எலக்ட்ரிக் வாகனமாக வடிவமைத்து, பின்னர் வடிவமைப்பை இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பிற்கு கொண்டு சென்றது.
இந்த வழியில், இணைக்கும் LED DRL -கள், ஏரோடைனமிக் அலாய் வீல்கள், பம்பரில் உள்ள வெர்டிகல் எலமென்ட்கள் மற்றும் நெக்ஸான் EV -யின் தோற்றமும் இந்த வடிவமைப்பு கூறுகள் மிகவும் இயற்கையாகத் தோற்றமளிக்க உதவுகின்றன மற்றும் நெக்ஸான் EV -க்கு அதன் சொந்த அடையாளத்தை கொடுக்கிறது.
சேர்க்கப்பட்டுள்ள சிறந்த அம்சங்கள்
ஒரு தனித்துவமான புதிய தோற்றத்தைத் தவிர, 2023 நெக்ஸான் EV அம்சங்களுடன் கிடைக்கிறது, அவற்றில் சில இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) நெக்ஸான் வாகனத்தில் கூட இல்லை. EV பிரத்தியேக டாப்-எண்ட் வேரியன்ட்டில் புதிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிகப்பெரிய அம்சம் கூடுதலாகும். இந்த பெரிய திரையானது சிறந்த இன்ஃபோடெயின்மென்ட் அனுபவத்தை அளிக்கிறது மற்றும் டாடாவின் Arcade.ev மூலம் நிறுத்தப்படும் போது OTT இயங்குதளங்களை ஸ்ட்ரீம் செய்ய உங்களை அனுமதிக்கிறது.
மேலும் படிக்க: 2023 டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் எதிராக மஹிந்திரா எக்ஸ்யூவி 400 EV எதிராக எம்ஜி ZS EV: விலை ஒப்பீடு
இந்த ஸ்கிரீனை தவிர, இது 10.25-இன்ச் டிஜிட்டல் ஓட்டுநர் டிஸ்ப்ளே, 360-டிகிரி கேமரா, ப்ளைண்ட் வியூ மானிட்டர் மற்றும் வெஹிகிள் டூ வெஹிகிள் மற்றும் வெஹிகிள் டூ லோட் சார்ஜ் செய்யும் வசதி. இது இந்த பிரிவில் உள்ள கார்களுக்கு நெக்ஸான் EV சவால் விடுவது போல் உள்ளது.
ஒட்டுமொத்த மென்மையான டிரைவ் அனுபவம்
ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய நெக்ஸான் EV சில மக்கள் விரும்பிய ஒரு உச்ச செயல்திறனை வழங்கியது, ஆனால் இது புதிய EV வாங்குபவர்களுக்கு மிகவும் இனிமையான அனுபவமாக இருக்கவில்லை. தற்போதைய நெக்ஸன் EV மூலம், டாடா ஒரு புதிய ஜென் 2 மின்சார மோட்டாரில் வைத்துள்ளது, மேலும் இது புதிய நெக்ஸன் EV -யின் டிரைவ் அனுபவத்தை மென்மையாகவும் புதிய EV வாங்குபவர்களுக்கு நட்பாகவும் ஆக்கியுள்ளது. இந்த புதிய மோட்டார்கள் 129PS / 215Nm மற்றும் 144PS / 215Nm என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் சக்தி அதிகமாக உள்ளது என்றாலும் டார்க் குறைவாக உள்ளது, இது நெக்ஸான் EVயை வேகப்படுத்தும் போது கொஞ்சம் குறைவான பன்ச் ஆக மாற்றுவதற்கு ஒரு முக்கிய காரணியாகும். ஆனால் இது அதன் ஒட்டுமொத்த செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, நெக்ஸான் இன்னும் விரைவானது மற்றும் அதன் அதிகபட்ச வேகமும் மணிக்கு 140கிமீ -லிருந்து மணிக்கு 150கிமீ ஆக அதிகரித்துள்ளது.
இதையும் பாருங்கள்: டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பியூர் வேரியன்ட் படங்களில் விளக்கப்பட்டுள்ளது
நெக்ஸான் EV -யின் சவாரி தரம் அபாரமாக உள்ளது. இது இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்ம் (ICE) நெக்ஸானை விட சற்று உறுதியானதாக இருந்தாலும், அது சங்கடமானதாக இல்லை. இது மேடுகள் மற்றும் மோசமான சாலைகளை எளிதாக சமாளிக்கிறது மற்றும் அதன் அதிவேகத்தில் நிலைத்தன்மையும் நன்றாக உள்ளது.
சற்றுக் குறைவான இடவசதி
நெக்ஸான் EV உடன் கேபின் இடம் அதிக பிரச்சனை இல்லை மற்றும் நெக்ஸானின் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் ( ICE) பதிப்பை போல உள்ளது. ஆனால், நெக்ஸான் லாங் ரேஞ்ச் (முன்பு நெக்ஸான் EV மேக்ஸ்) உடன், பெரிய பேட்டரி வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக பின்புற இருக்கைகள் சற்று உயர்த்தப்பட்டுள்ளன. கூடுதல் குஷனிங்குடன் இதை இணைப்பதால் பின் இருக்கை பயணிகளுக்கு இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது.
எரகனாமிக் கேபின் சிக்கல்கள் இன்னும் இருக்கின்றன
நெக்ஸான் EV அடிப்படைகளுக்கு வரும்போது, நடைமுறையின் அடிப்படையில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், நெக்ஸான் அதன் ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய பதிப்பில் சில பணிச்சூழலியல் சிக்கல்களைக் கொண்டிருந்தது, துரதிருஷ்டவசமாக அவை தொடர்ந்து வருகின்றன. முதலாவது, முன்பக்கத்தில் பயன்படுத்தக்கூடிய கப்ஹோல்டர்கள் இல்லை, சார்ஜிங் போர்ட்கள் கியருக்கு பின்னால் வைக்கப்பட்டுள்ளன, இதனால் அவற்றை அணுகுவது கடினமாகிறது, பின்புறத்தில் கதவு பாக்கெட்டுகள் இன்னும் சிறியதாகவே உள்ளன, மற்றும் தடைபட்ட ஃபுட்வெல் பிரச்சினை இன்னும் தொடர்ந்து உள்ளது.
இதையும் படியுங்கள்: கியா சோனெட்டை விட அதிகமாக டாடா நெக்ஸான் பெற்ற 7 அம்சங்கள்
இந்தச் சிக்கல்களைத் தவிர, நெக்ஸான் என்பது உங்கள் தினசரி பயணங்களுக்கு போதுமான நடைமுறைக்கு உதவக்கூடிய சிறப்பானகார் ஆகும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
புதிய டாடா நெக்ஸான் EVயின் விலை ரூ.14.74 லட்சத்தில் இருந்து ரூ.19.94 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் இது மஹிந்திரா XUV400 -க்கு நேரடி போட்டியாக உள்ளது. இது எம்ஜி ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இது கருதப்படலாம்.
மேலும் படிக்க: டாடா நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful