Tata Harrier மற்றும் Tata Safari ஸ்டீல்த் எடிஷன் விலை ரூ. 25.09 லட்சமாக நிர்ணயம்
ஹாரியர் மற்றும் சஃபாரியின் புதிய ஸ்டீல்த் பதிப்பு மொத்தமாக 2,700 யூனிட்கள் மட்டுமே கிடைக்கும்.
-
ஹாரியர் மற்றும் சஃபாரி ஸ்டீல்த் ஆகிய இரண்டும் க்ரில், பம்பர் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்களுடன் கறுப்பு நிறத்தில் உள்ளன.
-
கறுப்பு நிற லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் அனைத்து கறுப்பு இன்ட்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.
-
12.3-இன்ச் டச் ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர்டு டெயில்கேட் போன்ற வசதிகளை உள்ளடக்கியது.
-
7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன.
-
அதே 2-லிட்டர் டீசல் இன்ஜின் 170 PS மற்றும் 350 Nm அவுட்புட்டை கொடுக்கும்.
-
6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி எஸ்யூவி -களின் ஸ்டீல்த் எடிஷன் வேரியன்ட்களுக்கான விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.25.09 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) தொடங்குகிறது. ஜனவரி 17 அன்று நடந்த ஆட்டோ எக்ஸ்போ 2025 ஆண்டில் சஃபாரி மற்றும் ஹாரியர் EV -ன் இந்த சிறப்பு எடிஷனை டாடா முதலில் காட்சிப்படுத்தியது. இருப்பினும் ஹாரியர் EV இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஹாரியர் மற்றும் சஃபாரியின் இந்த புதிய பதிப்பில் மேட் பிளாக் எக்ஸ்ட்டீரியர் ஃபினிஷ் மற்றும் ஸ்டீல்த் பிளாக் இன்டீரியர் தீம் உள்ளது. மேலும் விவரங்களுக்குச் செல்வதற்கு முன்னர் இந்த எஸ்யூவி -களுக்கான வேரியன்ட் வாரியான விலை விவரங்களை இங்கே பார்ப்போம்.
விலை விவரங்கள்
டாடா ஹாரியர்
வேரியன்ட் |
வழக்கமான விலை |
ஸ்டெல்த் பதிப்பு விலை |
வேறுபாடு |
ஃபியர்லெஸ் பிளஸ் MT |
ரூ.24.35 லட்சம் |
ரூ.25.10 லட்சம் |
+ ரூ 75,000 |
ஃபியர்லெஸ் பிளஸ் AT |
ரூ.25.75 லட்சம் |
ரூ.26.50 லட்சம் |
+ ரூ 75,000 |
டாடா சஃபாரி
வேரியன்ட் |
வழக்கமான விலை |
ஸ்டெல்த் பதிப்பு விலை |
வேறுபாடு |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் MT 7-சீட்டர் |
ரூ.25 லட்சம் |
ரூ.25.75 லட்சம் |
+ ரூ 75,000 |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் AT 7-சீட்டர் |
ரூ.26.40 லட்சம் |
ரூ.27.15 லட்சம் |
+ ரூ 75,000 |
அக்கம்பிளிஸ்டு பிளஸ் AT 6-சீட்டர் |
ரூ.26.50 லட்சம் |
ரூ.25.25 லட்சம் |
+ ரூ 75,000 |
புதிய ஸ்டீல்த் எடிஷன் வெறும் 2,700 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
ஆல் புதிய மேட் பிளாக் ஷேடு
புதிய ஸ்டீல்த் பதிப்பில் ஹாரியர் மற்றும் சஃபாரி இரண்டும் புதிய ஸ்டீல்த் மேட் பிளாக் வெளிப்புற ஷேடில் வழங்கப்படுகின்றன. இரண்டு எஸ்யூவி -களிலும், முன்பக்க கிரில், பம்ப்பர்கள், அலாய் வீல்கள் ஆகியவை கறுப்பு கலர் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கனெக்டட் LED லைட்டிங் எலமென்ட்கள் மற்றும் எஸ்யூவி -களின் ஷேடு ஆகியவற்றுடன் ஒட்டுமொத்த வடிவமைப்பும் அனைத்தும் அப்படியே உள்ளது.
ஆல் பிளாக் இன்ட்டீரியர்
ஹாரியர் மற்றும் சஃபாரி ஸ்டெல்த் இரண்டும் கறுப்பு நிற லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் இன்ட்டீரியர் தீம் உடன் வருகிறது.
12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், டூயல்-ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் ஹாரியர் மற்றும் சஃபாரியின் இந்த ஸ்பெஷன் எடிஷனை டாடா கொடுத்துள்ளது. 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றால் பாதுகாப்பு கவனிக்கப்படுகிறது.
இன்ஜினில் எந்த மாற்றங்கள் இல்லை
ஹாரியர் மற்றும் சஃபாரி ஸ்டீல்த் எடிஷன் எஸ்யூவி -களில் டாடா இன்ஜின் ரீதியாக எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. முழுமையான விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
2 லிட்டர் டீசல் |
பவர் |
170 PS |
டார்க் |
350 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
போட்டியாளர்கள்
டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஸ்டீல்த் எடிஷன் ஆனது கியா செல்டோஸ் எக்ஸ்-லைனுக்கு போட்டியாக இருக்கும்.