Honda Elevate உடன் ஒப்பிடும் போது Tata Curvv கூடுதலாக இந்த 7 வசதிகளை கொண்டிருக்கும்
published on ஜூலை 31, 2024 07:20 pm by shreyash for டாடா கர்வ்
- 30 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா எலிவேட் உடன் ஒப்பிடும் போது டாடா கர்வ்வ் ஆனது நவீன வடிவமைப்பை தவிர பெரிய ஸ்கிரீன்கள் மற்றும் கூடுதல் வசதிகளையும் வழங்கும்.
டாடா கர்வ்வ் இந்தியாவில் முதல் பட்ஜெட் சந்தை எஸ்யூவி கூபேக்களில் ஒன்றாகும். ஏற்கனவே இதன் விவரங்கள் வெளியிடப்பட்டது மற்றும் விரைவில் இது விற்பனைக்கு வரவுள்ளது. கர்வ்வ் நெரிசலான காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் ஹோண்டா எலிவேட் உடன் போட்டியிடும். ஹோண்டா எஸ்யூவி -யை விட கர்வ்வ் காரில் கிடைக்கும் கூடுதல் விஷயங்கள் இங்கே.
நவீன LED லைட்டிங் எலமென்ட்கள்
டாடா கர்வ்வ் ஆனது ஒரு எஸ்யூவி-கூபே ஸ்டைல் காராக தற்போது விற்பனையில் உள்ள பெரும்பாலான காம்பாக்ட் எஸ்யூவி -களை விட ஏற்கனவே மிகவும் நவீனமானதாக தோற்றமளிக்கின்றது. முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் கனெக்டட் லைட்டிங் எலமென்ட்களால் இதன் வடிவமைப்பு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் கனெக்டட் LED DRL -கள் மற்றும் பின்புறத்தில் LED டெயில் லைட்ஸ் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்களுடன் டர்ன் இண்டிகேட்டர்களுக்கான தொடர்உள்ளன. நெக்ஸான், நெக்ஸான் EV, ஹாரியர், மற்றும் சஃபாரி போன்ற சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் டாடா மாடல்களில் இதே போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தன.
மறுபுறம் ஹோண்டா எலிவேட் மிகவும் பாரம்பரியமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் LED DRL -கள் மற்றும் எளிமையான ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்கள் மட்டுமே உள்ளன.
பெரிய ஸ்கிரீன்கள்
டாடா கர்வ்வ் ஐ 12.3-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளேவுடன் வழங்கும். ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்பிளே வழியாக க்ளஸ்டரில் மேப்களை காண்பிக்கும். இங்குள்ள டிரைவர்ஸ் டிஸ்பிளேவை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
ஹோண்டா எலிவேட்டில் சிறிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீனை மட்டுமே கொடுக்கிறது. மேலும் இது ஒரு பார்ட்-டிஜிட்டல் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவையும் பெறுகிறது.
பிராண்டட் ஆடியோ சிஸ்டம்
மற்ற டாடா கார்களில் காணப்படுவது போல், கர்வ்வ் ஆனது மொத்தம் 9 ஸ்பீக்கர்களுடன் பிராண்டட் ஆடியோ சிஸ்டத்தையும் (JBL யூனிட்டாக இருக்கலாம்) பெறும். இதற்கிடையில் ஹோண்டா எலிவேட் 4-ஸ்பீக்கர்கள் மற்றும் 4-ட்வீட்டர்களை பெறுகிறது.
மேலும் பார்க்க: 2024 Tata Curvv ஆனது Maruti Grand Vitara -வை விட கூடுதலான 5 வசதிகளை கொண்டிருக்கும்
பனோரமிக் சன்ரூஃப்
ஹோண்டா எலிவேட்டை சிங்கிள்-பேன் சன்ரூஃப் வழங்கினாலும் பெரிய பனோரமிக் சன்ரூஃப் கிடைக்கும் என்பதால், டாடா கர்வ்வி ஒரு படி முன்னிலையில் இருக்கிறது. கர்வ்வ் காரில் உள்ள சன்ரூஃப் வாய்ஸ்-கண்ட்ரோல் வசதியையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வென்டிலேட்டட் மற்றும் பவர்டு இருக்கைகள்
ஹோண்டா எலிவேட்டில் இல்லாத முக்கிய வசதிகளில் ஒன்று வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகும், இது டாடா கர்வ்வ் நிச்சயமாக வழங்கும். வென்டிலேட்டட் இருக்கைகள் இந்திய கோடைகால சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை இருக்கைகளை விரைவாக குளிர்விக்க உதவுகின்றன. கர்வ்வ் கூடுதலாக எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கையுடன் வரும், அதே சமயம் எலிவேட்டில் மேனுவலாக மட்டுமே அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.
பவர்டு டெயில்கேட்
ஹோண்டா எலிவேட்டை விட டாடா கர்வ்வ் கொண்டிருக்கும் மற்றொரு வசதி, ஜெஸ்டர் கன்ட்ரோல்டு வசதியுடன் கூடிய பவர்டு டெயில்கேட் ஆகும். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரியில் இந்த வசதி ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் எலிவேட், சந்தையில் உள்ள மற்ற மாஸ்-மார்க்கெட் கார்களைப் போலவே எளிமையான எலக்ட்ரிக் டெயில்கேட் ரிலீஸ் உடன் வருகிறது.
சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பம்
6 ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா, லேன்-வாட்ச் கேமரா (இடதுபுற ORVM கீழ் அமைந்துள்ளது) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களின் (ADAS) முழுமையான தொகுப்பு போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் ஹோண்டா எலிவேட் வருகிறது. எலிவேட்டில் உள்ள ADAS தொழில்நுட்பம் கேமரா அடிப்படையிலானது ஆனால் டாடா கர்வ்வ் ரேடார் அடிப்படையிலான டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை கொண்டிருக்கும். கேமரா-அடிப்படையிலான ADAS குறைந்த-வெளிச்சம் உள்ள இடங்களில் சற்று மந்தமாக செயல்படும். காரணம் இந்த தொழில்நுட்பத்தால் சாலையில் உள்ள பொருள்கள், வாகனங்கள் அல்லது நபர்களை துல்லியமாகத் கணிக்க முடியாமல் போகலாம். கூடுதலாக கர்வ்வ் ஆனது 360-டிகிரி கேமரா அமைப்பு மற்றும் ஹோண்டா எலிவேட் மீது ஆட்டோ ஹோல்டுடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்கை கொண்டிருக்கும்.
ஹோண்டா எலிவேட்டை விட டாடா கர்வ்வ் இந்த நன்மைகளை கொண்டுள்ளது. ஆகவே நீங்கள் இன்னும் ஹோண்டா எலிவேட்டை தேர்ந்தெடுப்பீர்களா அல்லது அதிக வசதிகள் நிறைந்த டாடா கர்வ்வ் -க்காக காத்திருப்பீர்களா ? கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஹோண்டா எலிவேட் ஆட்டோமேட்டிக்