செப்டம்பரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய Tata Curvv இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
published on ஆகஸ்ட் 07, 2024 03:47 pm by samarth for டாடா கர்வ்
- 57 Views
- ஒரு கருத்தை எழுதுக
கர்வ்வ் ICE ஆனது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பலவிதமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் இருக்கும்.
-
டாடா கர்வ்வ் ICE -யை ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் அக்கம்பிளிஸ்டு என 4 வேரியன்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
-
கர்வ்வ் ICE காரில் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன் கொண்ட வெர்டிகலாக அடுக்கப்பட்ட ஹெட்லைட்களுடன் கனெக்டட் LED DRL ஸ்ட்ரிப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
பின்புறத்தில் கனெக்டட் எல்இடி டெயில் லைட்ஸ், உயரமான பூட்லிட் மற்றும் ஸ்பாய்லர் ஆகியவற்றை பார்க்க முடிகிறது.
-
12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
-
கர்வ்வ் ICE இரண்டு டர்போ-பெட்ரோல் ஆப்ஷன்கள் மற்றும் பலவிதமான டிரான்ஸ்மிஷன்ங்கள் உட்பட 3 இன்ஜின்களுடன் வழங்கப்படும்.
-
கர்வ்வ் ICE -யின் விலை ரூ. 10.50 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செப்டம்பர் 2 ஆம் தேதி விற்பனைக்கு வரும்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த டாடா கர்வ்வ் EV இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் சேர்ந்து டாடா உற்பத்திக்கு தயாராகவுள்ள டாடா கர்வ்வ் இன்டர்னல் கம்பஸ்டன்இன்ஜின் பதிப்பு காரையும் அறிமுகப்படுத்தியது. டாடாவால் உருவாக்கப்பட்ட புதிய அடாப்டிவ் டெக்-ஃபார்வர்ட் லைஃப்ஸ்டைல் ஆர்கிடெக்சர் (ATLAS) தளத்தை அடிப்படையாகக் கொண்டு கர்வ்வ் ICE ஆனது வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் செப்டம்பர் 2 அன்று ICE பதிப்பின் விலை விவரங்களை வெளியிடவுள்ளது. மேலும் இது 4 வேரியன்ட்களில் விற்பனைக்கு வரும்: ஸ்மார்ட், ப்யூர், கிரியேட்டிவ் மற்றும் அகாம்ப்ளிஸ்டு. எஸ்யூவி-கூபே -வின் ICE வெர்ஷன் தொடர்பாக எங்களிடம் உள்ள அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
வெளிப்புறம்
கர்வ்வ் ICE காரில் வெல்கம் மற்றும் குட்பை செயல்பாடுகளுடன் கனெக்டட் LED DRL ஸ்டிரிப் கொடுக்கப்பட்டுள்ளது. இது இப்போது டாடாவின் புதிய எஸ்யூவி மாடல்களுக்கான சிக்னேச்சர் வடிவமைப்பாக மாறியுள்ளது. முன்பக்கம் எலக்ட்ரிக் பதிப்பில் உள்ள குளோஸ்டு கிரில் போல இல்லாமல் ஹாரியரில் உள்ளதை போலவே போன்ற குரோம் ஸ்டுட் வடிவமைப்பு உள்ளது. ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்ஸ் வெர்டிகலாக ஒரு முக்கோண ஹவுஸிங்கிற்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பம்பரில் முன் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது இது 360 டிகிரி அமைப்பின் ஒரு பகுதியாகும்.
இது ஃப்ளஷ் வேரியன்ட் டோர் ஹேண்டில்கள் மற்றும் புதிய பெட்டல்-லீஃப் போல வடிவமைக்கப்பட்ட 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு காருக்கு ஒரு சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது.
பின்பக்கம் கனெக்டட் டெயில் லைட் செட்டப், ஸ்பாய்லர், டால்-இஷ் பூட்லிட் மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனா ஆகியவை உள்ளன. பூட் கேட் குரோம் ஃபினிஷ்ட் ‘கர்வ்வ்’ பிராண்டிங்கை கொண்டுள்ளது. மேலும் பின்புற பம்பரில் சில்வர் ஃபினிஷுடன் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளது. இந்த கார் 208 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. கர்வ்வ் ICE -யின் பூட் ஸ்பேஸ் 500 லிட்டர் ஆகும். இரண்டாவது வரிசை இருக்கைகளை கீழே மடித்து 973 லிட்டர் வரை இதை அதிகரித்து கொள்ளலாம்.
கர்வ்வ் ICE 6 மோனோடோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்: டேடோனா கிரே, பிரிஸ்டைன் ஒயிட், ஃபிளேம் ரெட், ஓபரா புளூ, ப்யூர் கிரே மற்றும் கோல்ட் எசென்ஸ்.
கேபின், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
கர்வ்வ் ICE காரில் டாஷ்போர்டு டூயல்-டோன் பர்கண்டி கலர் தீமில் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இது 9-ஸ்பீக்கர் ஜேபிஎல்-டியூன் செய்யப்பட்ட சவுண்ட் சிஸ்டத்துடன் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 60:40 ஸ்பிளிட் உடன் கூடிய டூ-ஸ்டெப் ரிக்ளைனிங் பின்புற இருக்கைகள் ஆகியவற்றைப் பெறுகிறது. காரில் ஒரு பனோரமிக் சன்ரூஃப் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் இருக்கை 6-வே பவர்டு அட்ஜெஸ்ட்மென்ட் வசதியுடன் வருகிறது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
பவர்டிரெய்ன்
கர்வ்வ் ICE பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும். அதன் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2-லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் இன்ஜின் (புதியது) |
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் இன்ஜின் |
பவர் |
125 PS |
120 PS |
118 PS |
டார்க் |
225 Nm |
170 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT* |
*DCT- டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் ICE விலை ரூ. 10.50 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. இது சிட்ரோன் பசால்ட் -க்கு நேரடி போட்டியாக இருக்கும். து ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக், மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போன்ற சிறிய எஸ்யூவி -களுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful