வரும் காலங்களில், சுசூக்கி ஸ்விஃப்ட் கார்கள் 1.4 லிட்டர் பூஸ்டர் ஜெட் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும்
published on ஆகஸ்ட் 25, 2015 09:07 am by அபிஜித் for மாருதி ஸ்விப்ட் 2014-2021
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
சமீபத்தில், இந்தியாவில் மிகவும் பிரபலமான 1.4 லிட்டர் இஞ்ஜினுடன் கூடிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஹாட்ச்பேக் கார், அடுத்து வரும் டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதன் பெட்ரோல் வகை மோட்டார், பூஸ்டர் ஜெட் (டர்போசார்ஜ்ட்) தொழில்நுட்பத்துடன் சந்தைக்கு வருகிறது. இந்த கார் முதலில் வெளிநாட்டு சந்தையில் அறிமுகபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் சிறிய ரக கார்களின் சந்தை விரைவாக முன்னேற்றம் அடைந்து வருவதால், இந்த கார் நமது சந்தையிலும் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. வோல்ஸ்வாகனின் போலோ GT TSi மற்றும் ஃபியட்டின் அபார்த் புன்ட்டோ EVO ஆகிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு தயார் செய்யபடுவது போல, ஸ்விஃப்ட் ஸ்போர்ட்டும் இந்தியாவில் அதி விரைவில் வெளிவரும் வாய்ப்பு உள்ளது.
வரவிருக்கும் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஹாட்ச்பேக் காரை பற்றி பேசுகையில், இது சந்தையில் உள்ள தற்போதைய ஸ்விஃப்ட் மாடலில் இருந்து மாறுபட்டதாக இருந்தாலும், வெளித்தோற்ற வடிவங்கள் அனைத்தும் ஒரே உணர்வையே ஏற்படுத்துகின்றன. தற்போதைய ஸ்விஃப்ட் மாடலை விட பெரிதான இந்த புதிய கார், 1.8 மீட்டர் அகலம் உடையதாக உள்ளது என்று அறியப்படுகிறது. சுழலூட்டு விசைபொறியுடன் (டர்போசார்ஜ்ட்) கூடிய 1.4 லிட்டர் மோட்டார் கணிசமான ஒடுதிறனையும், துரிதமான முறுக்கு விசையையும் தரவல்லதாக உள்ளது. மேலும் இது DCT தானியங்கி உட்செலுத்தியுடன் இணைக்கப்பட்டு அனைத்து சக்கர ஓட்டுதல் (ஆல்-வீல் ட்ரைவ்) வசதியுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி மிகுந்த வாகன சந்தையை சமாளிக்க, சுசூக்கி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நவீன தொழில்நுட்பங்களை தருவதில் சமீப காலமாக மிகவும் தீவிரமாக உள்ளது. இதன் ஆர்வத்திற்கான மற்றொரு காரணம், அனைத்து திசைகளில் இருந்து எழும் வலுவான போட்டியும் காரணமாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான சுசூக்கி, பெருகும் இந்திய வாகன உற்பத்தித் துறையில் தன்னுடைய முன்னணி இடத்தை இழக்க விரும்பவில்லை.