டெலிவரி தொடங்குவதால் டீலர்ஷிப்புகளை வந்தடையும் ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகனின் லாவா ப்ளூ செடான்கள்

published on மே 17, 2023 06:05 pm by shreyash for ஸ்கோடா ஸ்லாவியா

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஸ்கோடா "லாவா ப்ளூ" நிறத்தை ஸ்லேவியாவில் ஒரு சிறப்பு எடிஷனாக அறிமுகப்படுத்தியது, அதே நேரத்தில் ஃபோக்ஸ்வேகன் அதை வெர்ச்சுஸில் வழக்கமான வண்ணத் தேர்வாக வழங்குகிறது.

Skoda Slavia and Virtus Lava Blue Editions

  • ஸ்கோடா ஸ்லேவியாவின் "லாவா புளூ" எடிஷனை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் கார் வேரியன்ட்களுடன் வழங்குகிறது.

  • ஃபோக்ஸ்வேகன் இந்த புதிய நீல நிற ஷேடை வெர்ச்சுஸின் 1.0 -லிட்டர் மற்றும் 1.5 -லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல்களுடன் வழங்குகிறது.

  • இந்த பிரீமியம் தோற்றம் கொண்ட பெயிண்ட் ஸ்கீம் ஆக்டேவியா மற்றும் கோடியாக் போன்ற ஹையர்-என்ட் ஸ்கோடா கார்களில் இருந்து வருகிறது.

  • ஃபோக்ஸ்வேகன் போல இல்லாமல், ஸ்லேவியாவின் "லாவா ப்ளூ" எடிஷனுக்கு  ஸ்கோடா ரூ.28,000 பிரீமியமாக வசூலிக்கிறது.

ஸ்கோடா ஸ்லேவியா  மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் ஆகியவை இப்போது புதிய "லாவா ப்ளூ " வெளிப்புற ஷேடில் கிடைக்கின்றன, மேலும் அவற்றின் கார்கள் டீலர்ஷிப்களை வந்தடைந்துள்ளன. "லாவா ப்ளூ" பெயிண்ட் எடிஷன் முதலில் குஷாக் மற்றும் ஸ்லேவியா ஆகிய இரண்டு மாடல்களிலும் ஸ்கோடாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பிரீமியம் தோற்றமளிக்கும் நீல நிற ஷேடு, பிராண்டின் பிரீமியம் தயாரிப்புகளான சூப்பர்ப், ஆக்டவியா  மற்றும் கோடியாக் ஆகியவற்றில் கிடைக்கிறது . சில நாட்களுக்குப் பிறகு, வோக்ஸ்வேகனும் இந்த வண்ணத் தேர்வை விர்டஸ் மற்றும் டைகுன் உடன் அவற்றின் மேம்படுத்தப்பட்ட கார் தயாரிப்புகளுடன் அறிமுகப்படுத்தியது.

இதில் என்ன புதிதாக உள்ளது ?

Skoda Slavia
வெளிப்புறத்தில் நீல நிற ஷேடைத் தவிர, ஸ்லேவியாவின் லாவா ப்ளூ பதிப்பில் அறுகோண கிரில்லில் குரோம் ரிப்ஸ் உள்ளது. காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறத்தில் வேறு தோற்ற மாற்றங்கள் எதுவும் இல்லை.

மேலும் படிக்கவும்: 2023 ஸ்கோடா கோடியாக் இப்போது விற்பனைக்கு கிடைக்கிறது ஆனால் இன்னும் குறைந்த எண்ணிக்கையிலேயே  உள்ளது

Volkswagen Virtus

விர்ட்டஸைப் பற்றி பேசுகையில், "லாவா ப்ளூ" ஒரு எடிஷன் அல்ல, ஆனால் வழக்கமான பெயிண்ட் தேர்வாக வழங்கப்படுகிறது. ஸ்லேவியாவைப் போலல்லாமல், ஃபோக்ஸ்வேகன் செடான் தோற்ற மாற்றங்கள் அல்லது குரோம் ஆட் ஆன் -களைக் கொண்டிருக்கவில்லை.

லாவா ப்ளூ ஷேடு இந்த செடான்களில் அறிமுகமான பிரகாசமான ரைசிங் ப்ளூ (விர்டஸ்) மற்றும் கிரிஸ்டல் ப்ளூ (ஸ்லாவியா) ஆகியவற்றுக்கு மிகவும் முதிர்ந்த மாற்றாக செயல்படுகிறது. இருப்பினும், அந்த ஷேடுகள் டூயல் டோன் ஆப்ஷனுடன் வழங்கப்படுகின்றன, அங்கு ரூஃப் பிளாக்டு அவுட் செய்யப்பட்டு இருக்கும்.

மேலும் படிக்கவும்: டீசரில்  4 புத்தம் புதிய EVக்களுடன் புதிய-தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் & கோடியாக்

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

Volkswagen Virtus Engine

6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் தேர்வுகள் இரண்டிலும் கிடைக்கும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் விருப்பத்துடன் ஸ்லேவியாவின் இந்த சிறப்பு வண்ண எடிஷனை ஸ்கோடா மட்டுப்படுத்தியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் உடன், 1-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் அவற்றின் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் உட்பட, "லாவா ப்ளூ" நிறத்தை அதன் முழு தயாரிப்பு  வரிசையிலும் காணமுடியும்.

விலை

ஸ்லேவியாவின் "லாவா ப்ளூ" பதிப்பிற்கு ஸ்கோடா ரூ.28,000 கூடுதல் பிரீமியமாக வசூலிக்கிறது. இதன் விலை ரூ.17.28 லட்சம் முதல் ரூ.18.68லட்சம் வரை உள்ளது. முன்பே குறிப்பிட்டது போல், விர்டஸ் இன் "லாவா ப்ளூ" வெளிப்புற வண்ணம் ஒரு வழக்கமான பெயிண்ட் விருப்பமாகும், மேலும் அனைத்து கார் வேரியன்ட்களிலும் மற்றும் இரண்டு என்ஜின் விருப்பங்களிலும் வழங்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் செடான்  ரூ. 11.48 லட்சம் முதல் ரூ. 18.57 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது. ஸ்லேவியா மற்றும் விர்டஸ் இரண்டும் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள்.

மேலும் படிக்கவும்: ஸ்லேவியா ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஸ்கோடா ஸ்லாவியா

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience