ஸ்கோடா ஆக்டேவியா ஆண்டுவிழா பதிப்பு ரூ.15.75 லட்சத்திற்கு அறிமுகமானது .
ஸ்கோடா ஆக்டிவா 2013-2021 க்கு published on sep 15, 2015 10:20 am by bala subramaniam
- 10 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை: ஸ்கோடா இந்தியா நிறுவனம் ஆக்டேவியா காரின் புதிய ஆண்டுவிழா பதிப்பை பல சிறப்பம்சங்களுடன் ரூ.15.75 லட்சம், எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி விலைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஆக்டேவியா ஆண்டுவிழா மாடலில் 'ஸ்மார்ட் லிங்க் கனக்டிவிடி' , பின்புறம் பார்பதற்கு ஏற்ற ரியர் வியூ கேமரா , கீலெஸ் (சாவி இல்லா ) என்ட்ரி மற்றும் என்ஜின் ஸ்டார்ட் /ஸ்டாப் , பின்புற இருக்கைகளில் காற்றுப்பைகள் (ஏயர் பேக்) மற்றும் ஸ்டேரிங் வீலுடன் இணைக்கப்பட்ட கியர் மாற்றுவதற்கான கட்டுபாட்டு வசதி போன்ற சிறப்பம்சங்கள் இந்த புதிய ஆண்டுவிழா மாடலில் இணைக்கப்பட்டுள்ளது. . இந்த பிரிவு கார்களிலேயே ஆக்டேவியா கார்களில் தான் மிக அதிகப்படியாக 8 காற்றுப் பைகள் பொருத்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதைத் தவிர முதல் முறையாக ஸ்கோடா நிறுவனம் தனது சிறப்பு தொழில்நுட்ப அம்சமான 'ஸ்மார்ட் லிங்க் செயல்பாட்டையும் இந்த புதிய ஆக்டேவியா கார்களில் பொருத்தியுள்ளது.
இந்த நவீன ஸ்மார்ட் லிங்க் வசதி காரில் பொருத்தப்பட்டுள்ள இன்போடைன்மன்ட் அமைப்பில் வாடிக்கையாளர் தான் தேர்ந்தெடுத்த ஸ்மார்ட் போன் ஆப் களை மட்டும் பயன்படுத்த வழிவகை செய்கிறது. மேலும் இதில் ஆப்பிள் கார்ப்ளே , ஆன்டிராய்ட் ஆட்டோ மற்றும் மிரர் லிங்க் சிஸ்டம் ஆகிய அனைத்தும் உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட கனக்டிவிடி பேகேஜ் ஒன்றும் இருக்கிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஸ்கோடா தனது ரேபிட் கார்களின் லிமிடட் எடிஷன் ஒன்றை அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம். ரேபிட் எலிகன்ஸ் ப்ளஸ் என்ற அந்த காரிலும் பக்கவாட்டு கதவு பாயில்கள், எதிர்மறையான பளிச்சென்ற வண்ணத்தில் கூரை பகுதி பாயில்கள் மற்றும் நேர்த்தியான மர வேலைப்பாடுகளுடன் கூடிய உட்புறம், புரட்சிகரமான ட்ரேக்ப்ரோ கார் ட்ரேகிங் கருவி இணைக்கப்பட்ட அமைப்பு என்று ஏராளமான சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டிருந்தது. 2015 செப்டம்பர் மாத இறுதிவரை மட்டுமே இந்த சிறப்பு எடிஷன் ரேபிட் கார்கள் அனைத்து ஸ்கோடா டீலர்களிடமும் கிடைக்கும். அதே போல் இந்த புதிய ஆக்டேவியா ஆண்டுவிழா எடிஷன் கார்களும் குறிப்பிட்ட காலம் வரையே விற்பனை செய்யப்படும்.
- Renew Skoda Octavia 2013-2021 Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful