• English
  • Login / Register

Skoda Slavia -வின் புதிய வேரியன்ட்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

published on செப் 02, 2024 07:31 pm by dipan for ஸ்கோடா ஸ்லாவியா

  • 70 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இன்ஜின் ரீதியாக எதுவும் மாறவில்லை. இந்த புதிய வேரியன்ட்களில் பிளாக் கலர் கிரில், பேட்ஜ்கள் மற்றும் ஸ்போர்ட்டியர் தோற்றத்தை கொடுக்கும் வகையில் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்கள் உள்ளன.

  • ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோ, மற்றும் ஸ்லாவியா மற்றும் குஷாக் ஸ்போர்ட்லைன் எடிஷன்களில் பிளாக்-அவுட் டிசைன் எலமென்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் மெக்கானிக்கலாக எதுவும் மாறாமல் இருக்கின்றன.

  • ஸ்லாவியா மான்டே கார்லோ டாப்-ஸ்பெக் பிரெஸ்டீஜ் டிரிமை அடிப்படையாகக் கொண்டது.

  • குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் ஸ்போர்ட்லைன் வேரியன்ட்கள் மிட்-ஸ்பெக் சிக்னேச்சர் வேரியன்டை அடிப்படையாகக் கொண்டவை.

  • ஸ்லாவியா மான்டே கார்லோ ரெட்-ஆக்ஸென்ட்களுடன் பிளாக் உட்புறம் மற்றும் 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவில் ரெட் கலர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இது 1 லிட்டர் TSI மற்றும் 1.5 லிட்டர் TSI இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

  • ஸ்போர்ட்லைன் டிரிம்கள் 10-இன்ச் டச் ஸ்கிரீன், பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற சிக்னேச்சர் டிரிமில் கிடைக்கும் வசதிகள் அப்படியே உள்ளன.

  • இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. ஆனால் பெரிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் DCT கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும். 

ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா புதிய ஸ்போர்டியர் தோற்றம் கொண்ட வேரியன்ட்களுடன் சில புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா இப்போது மான்டே கார்லோ பதிப்பு மற்றும் ஸ்போர்ட்லைன் வேரியன்ட் உள்ளது. அதே நேரத்தில் குஷாக் எஸ்யூவி இரண்டாவதை பெறுகிறது. இந்த இரண்டு மாடல்களும் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் காஸ்மெடிக் அப்டேட்களை பெறுகின்றன. விலை விவரங்கள் பின்வருமாறு:

மாடல்

விலை ரேஞ்ச்

ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோ

ரூ.15.79 லட்சம் முதல் ரூ.18.49 லட்சம்

ஸ்கோடா ஸ்லாவியா ஸ்போர்ட்லைன்

ரூ.14.05 லட்சம் முதல் ரூ.16.75 லட்சம்

ஸ்கோடா குஷாக் ஸ்போர்ட்லைன்

ரூ.14.70 லட்சம் முதல் ரூ.17.40 லட்சம் 

விலை விவரங்கள் அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா

இந்த புதிய வேரியன்ட்களின் இன்ஜினில் எதுவும் மாறாமல் உள்ளன. ஆனால் புதிய வடிவமைப்பு எலமென்ட்களை வெளியேயும் உள்ளேயும் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வேரியன்ட்டில் குஷாக்கின் மான்டே கார்லோ எடிஷன் கடந்த ஆண்டு 2023 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்கோடா மாடல்களில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வசதிகளின் விவரங்களை பார்ப்போம்:

ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோ

ஸ்லாவியாவின் புதிய மான்டே கார்லோ எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது செடானின் டாப்-ஆஃப்-லைன் ப்ரெஸ்டீஜ் டிரிம் அடிப்படையிலானது. எனவே இந்த புதிய வேரியன்ட்டின் விலை பட்டியல் இதோ:

பவர்டிரெய்ன் 

ஸ்கோடா ஸ்லாவியா பிரெஸ்டீஜ்

ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோ

விலை வேரியன்ட்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல் எம்டி

ரூ.15.99 லட்சம்

ரூ.15.79 லட்சம்

(- ரூ 20,000)

1-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஏடி

ரூ.17.09 லட்சம்

ரூ.16.89 லட்சம்

(- ரூ 20,000)

1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் டிசிடி

ரூ.18.69 லட்சம்

ரூ.18.49 லட்சம்

(- ரூ 20,000)

விலை விவரங்கள் அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா விலை விவரங்கள் அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா

குஷாக்கைப் போலவே ஸ்லாவியா மான்டே கார்லோவும் ஸ்போர்டியர் தோற்றத்தைக் கொடுக்க பிளாக்டு அவுட் டிசைன் டச்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பிளாக்-அவுட் கிரில், பிளாக் ஃபாக் லைட்ஸ் கார்னிஷ் மற்றும் முன் ஸ்பாய்லர், ஃபெண்டரில் ஒரு மான்டே கார்லோ பேட்ஜ் மற்றும் பிளாக் கலர்த்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட பூட் லிப் ஸ்பாய்லர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ஆல் பிளாக் 16-இன்ச் அலாய் வீல்கள், டோர் ஹேண்டில்களுக்கு டார்க் குரோம் ஆக்ஸன்ட்கள், பிளாக் ORVM (வெளிப்புற ரியர் வியூ மிரர்) கவர்கள், பிளாக் விண்டோ கார்னிஷ் மற்றும் பிளாக் கலர் பேட்ஜ்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

உள்ளே ஸ்லாவியா மான்டே கார்லோ ஏசி வென்ட்கள் முழுவதும் டாஷ்போர்டின் மேற்புறத்தில் ரெட் ஆக்ஸன்ட்களுடன் பிளாக் கலர் இன்ட்டீரியர் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் பிளாக் கலர் லெதரெட்டில் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் சில ரெட் கலர் எலமென்ட்கள் மற்றும் ஸ்டிச்கள் மற்றும் ஹெட்ரெஸ்ட்களில் மான்டே கார்லோ பொறிக்கப்பட்டுள்ளது. இது அலுமினிய பேட்ஜ்கள் மற்றும் மான்டே கார்லோ கல்வெட்டுகளுடன் கூடிய டோர் ஸ்கஃப் பிளேட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. டோர் ஸ்ட்ரிப்கள் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டில் ரெட் ஸ்டிச் உள்ளது. மேலும் 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவில் ரெட் கலர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.

10-இன்ச் டச் ஸ்கிரீன், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்ட டாப்-எண்ட் மாடலை போலவே வசதிகள் உள்ளது. இது பவர்டு ஓட்டுனர் மற்றும் கோ டிரைவர் சீட் மற்றும் இரண்டுக்கும் வென்டிலேஷன் ஃபங்ஷனும் உள்ளது. 

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கும்.

ஸ்லாவியா மான்டே கார்லோ பதிப்பு 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (115 PS/ 178 Nm) மற்றும் 1.5-லிட்டர் இன்ஜின் (150 PS/250 Nm) ஆகிய இரண்டிலும் வருகிறது. சிறிய இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 1.5-லிட்டர் இன்ஜின் பிரத்தியேகமாக 7-ஸ்பீடு DCT உடன் மட்டுமே கிடைக்கும்.

மேலும் படிக்க: செப்டம்பர் 2024 -ல் அறிமுகமாகும் புதிய கார்கள்

ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் ஸ்போர்ட்லைன்

ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் ஸ்போர்ட்லைன் ஆகியவை மிட்-ஸ்பெக் சிக்னேச்சர் டிரிம் அடிப்படையிலானவை. விலை விவரங்கள் பின்வருமாறு:

பவர்டிரெய்ன் 

ஸ்கோடா ஸ்லாவியா

ஸ்கோடா குஷாக்

 

ஸ்கோடா ஸ்லாவியா ஸ்போர்ட்லைன்

ஸ்கோடா ஸ்லாவியா சிக்னேச்சர்

வேரியன்ட்

ஸ்கோடா குஷாக் ஸ்போர்ட்லைன்

ஸ்கோடா குஷாக் சிக்னேச்சர்

வேரியன்ட்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல் எம்டி

ரூ.14.05 லட்சம்

ரூ.13.99 லட்சம்

+ ரூ 6,000

ரூ.14.70 லட்சம்

ரூ.14.19 லட்சம்

+ ரூ.51,000

1-லிட்டர் டர்போ-பெட்ரோல் ஏடி

ரூ.15.15 லட்சம்

ரூ.15.09 லட்சம்

+ ரூ 6,000

ரூ.15.80 லட்சம்

ரூ.15.29 லட்சம்

+ ரூ.51,000

1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT

ரூ.16.75 லட்சம்

ரூ.16.69 லட்சம்

+ ரூ 6,000

ரூ.17.40 லட்சம்

ரூ.16.89 லட்சம்

+ ரூ.51,000

விலை விவரங்கள் அறிமுகம் எக்ஸ்-ஷோரூம் (பான்-இந்தியா)

இந்த இரண்டு கார்களும் ஸ்லாவியா மான்டே கார்லோ போன்ற ஒத்த ஸ்டைலிங் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது நீங்கள் பிளாக்-அவுட் கிரில் மற்றும் கார் முழுவதும் பேட்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. பிளாக்-அவுட் அலாய் வீல்கள், பிளாக் பூட் லிப் ஸ்பாய்லர், பிளாக் ORVM (எக்ஸ்ட்டீரியர் ரியர் வியூ மிரர்) கவர்கள் மற்றும் பிளாக்டு அவுட் LED டெயில் லைட்கள் ஆகியவையும் உள்ளன.

Skoda Slavia Monte Carlo interior
Skoda Kushaq Sportline interior

உள்ளே இருக்கைகள் அந்தந்த கார்களுக்கு ஏற்ப சிக்னேச்சர் வேரியன்ட்களில் வழங்கப்பட்டுள்ள அதே ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி மற்றும் கேபின் தீம் ஆகியவற்றைப் பெறுகின்றன. எனவே ஸ்லாவியா ஸ்போர்ட்லைன் பிளாக் மற்றும் பீஜ் பெய்ஜ் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. குஷாக் ஸ்போர்ட்லைன் பிளாக் மற்றும் கிரே கலர் தீம் உள்ளது. இது மாடல் பெயர் கல்வெட்டுகள் மற்றும் அலுமினிய பெடல்கள் கொண்ட ஸ்கஃப் பிளேட்களும் உள்ளன.

DRL -களுடன் LED ஹெட்லைட்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10-இன்ச் டச் ஸ்கிரீன், பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி, சிங்கிள்-பேன் சன்ரூஃப், எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM -கள், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் ஆகியவை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ரியர்வியூ கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும். இரண்டு ஸ்போர்ட்லைன் வேரியன்ட்களும் பின்புற வைப்பர் மற்றும் பின்புற டிஃபோகர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்லாவியா மற்றும் குஷாக் ஸ்போர்ட்லைன் வேரியன்ட்களில் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (115 PS/178 Nm) 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டுள்ளது. இது 1.5-லிட்டர் இன்ஜினிலும் (150 PS/250 Nm) கிடைக்கிறது, ஆனால் பிரத்தியேகமாக 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Skoda Slavia Sportline rear

ஸ்கோடா மாடல்களின் இந்த புதிய வேரியன்ட்களில் எது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? கமென்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: ஸ்கோடா ஸ்லாவியா ஆன்ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Skoda ஸ்லாவியா

1 கருத்தை
1
R
raj
Sep 3, 2024, 12:57:47 AM

Why Kushaq Sportline with 1.5 MT is not offered like Slavia. That's Stepmotherly treatment

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending சேடன் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience