பிரபல நடிகர் சஞ்சய் தத் 65 -வது பிறந்த நாளில் புதிய Range Rover SV காரை வாங்கியுள்ளார்
அனைத்து விதமான கஸ்டமைசேஷன்களுடன் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் SV காரின் விலை சுமார் ரூ. 5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.
-
சஞ்சய் தத் வாங்கிய ரேஞ்ச் ரோவர் SV ஆனது லேண்ட் ரோவர் வழங்கும் செரினிட்டி பேக்குடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.
-
கிரில், முன் பம்பர் மற்றும் டெயில்கேட் ஆகியவற்றில் புரோன்ஸ் இன்செர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
செரினிட்டி தீம் உடன், ரேஞ்ச் ரோவர் எஸ்வி வொயிட் கலர் ஹைலைட்ஸ் உடன் கேரவே பிரவுன் இன்ட்டீரியர் இந்த காரில் உள்ளது.
-
போர்டில் உள்ள வசதிகளில் 13.1-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவை அடங்கும்.
-
பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
ரேஞ்ச் ரோவர் SV ஆனது 4.4 லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 615 PS மற்றும் 750 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவரது 65 -வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஆடம்பர லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி ஒன்றை வாங்கியுள்ளார். இதன் மூலமாக மற்ற பாலிவுட் பிரபலங்களான கார்த்திக் ஆர்யன், பூஜா ஹெக்டே, ஷிகர் தவான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் வரிசையில் இப்போது இணைந்துள்ளார். அல்ட்ரா மெட்டாலிக் கிரீன் எக்ஸ்ட்டீரியர் ஷேடு கொண்ட புதிய ரேஞ்ச் ரோவரை சஞ்சய் தத் ஓட்டும் வீடியோ ஆன்லைனில் சமீபத்தில் வெளியானது.
சஞ்சய் தத் -ன் புதிய எஸ்யூவி -யை பற்றிய கூடுதல் விவரங்கள்
துர்கேஷ் நகாதே (@gadi_dekho_yt) ஷேர் செய்த ஒரு பதிவு
சஞ்சய் தத் வாங்கிய ரேஞ்ச் ரோவர் செரினிட்டி பேக்குடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட SV இதுவாகும். இந்த பேக்கில் கிரில்லில் புரோன்ஸ் இன்செர்ட்கள், புரோன்ஸ் ஆக்ஸென்ட்களுடன் முன் பம்பர் சில்வர் கலரில் கொடுக்கப்பட்டுள்ளது. டெயில்கேட்டில் புரோன்ஸ் கார்னிஷ் மற்றும் முன் கதவுகளில் புரோன்ஸ் டீடெய்லிங்ஸ் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் தேர்வு செய்த அனைத்து கஸ்டமைசேஷன்களுடன் இந்த ரேஞ்ச் ரோவரின் விலை சுமார் ரூ. 5 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக இருக்கும் என என்று மதிப்பிடுகிறோம்.
மேலும் பார்க்க: பார்க்க: டாடா கர்வ்வ், ஐடியாவிலிருந்து தயாரிப்பு வரை - எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே பார்க்கலாம்.
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் SV: ஒரு பார்வை
ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி யின் ரேஞ்ச்-டாப்பிங் SV வேரியன்ட் ஆன இது 4.4-லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது, இது 615 PS மற்றும் 750 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கிறது. யூனிட் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை அனுப்புகிறது. லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் SV ஆனது 0-100 கிமீ/மணி ஸ்பிரிண்ட் நேரத்தை கடக்க வெறும் 4.5 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொண்டது.
லேண்ட் ரோவர் HSE மற்றும் ஆட்டோபயோகிராஃபி வேரியன்ட்களிலும் ரேஞ்ச் ரோவரை வழங்குகிறது. HSE ஆனது 351 PS மற்றும் 700 Nm உடன் 3-லிட்டர் டீசல் மைல்ட்-ஹைப்ரிட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆட்டோபயோகிராஃபி 398 PS மற்றும் 550 Nm உடன் 3-லிட்டர் மைல்ட்-ஹைப்ரிட் டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எஸ்வி -யின் செரினிட்டி பேக்கில் கேரவே பிரவுன் இன்ட்டீரியர் உடன் டேஷ்போர்டு, கியர் செலக்டர் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் பேனலை சுற்றி வொயிட் கலரில் உள்ளது. ரேஞ்ச் ரோவர் SV ஆனது 13.7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 13.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் கிளாஸ் ரூஃப், 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 1600W மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் PM2.5 ஏர் ஃபில்டர் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
பாதுகாப்புக்காக 360-டிகிரி கேமரா, டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (DSC), மல்டி ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
விலை போட்டியாளர்கள்
லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ரூ. 2.36 கோடியில் தொடங்குகிறது மற்றும் கஸ்டமைசேஷன்களின் அடிப்படையில் இந்த டாப்-ஸ்பெக் எஸ்வி வேரியன்ட் விலை சுமார் ரூ.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம். இந்த ரேஞ்ச் ரோவர் ஆனது லெக்ஸஸ் LX மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLS ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
மேலும் கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.
மேலும் படிக்க: லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோமெட்டிக்