ரினால்ட் கிவிட் 50,000 வாடிக்கையாளர்களின் ஆர்டர்களைப் பெற்றது
published on நவ 02, 2015 06:19 pm by nabeel for ரெனால்ட் க்விட் 2015-2019
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரினால்ட் இந்தியா, கிவிட் ஹாட்ச் பேக் காரை அறிமுகப்படுத்திய ஒரே மாதத்திற்குள் 50000-க்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது. ரினால்ட் இந்தியா நிர்வாகத்தின் CEO மற்றும் மேனேஜிங் டைரக்டரான திரு. சுமித் சாகணி அவர்கள், “இந்திய வாடிக்கையாளர்களின் மத்தியில் இருக்கும், ரினால்ட் கிவிட் காருக்கான விண் முட்டும் அபரிதமான வரவேற்புக்கு, என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். ரினால்ட் பிராண்ட்டின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நாங்கள் மிகுந்த நன்றியுடன் இருப்போம்” என்று கூறினார். எங்கள் வாடிக்கையாளர்கள், பண்டிகையை இனிய பயணங்களுடன் கொண்டாடுவதற்கு ஏற்ப, இந்தியா முழுவதும் கிவிட் காரின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எங்களது தயாரிப்பை அதிகப்படுத்தி, விநியோகங்களை மேலும் துரிதப்படுத்தும் முயற்சிகளை எடுத்து வருகிறோம்,” என்றார். மேலும் அவர், “ முதல்முறை ரினால்ட் கிவிட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகமாக வளர்ந்து வருவதை பார்க்கும் போது, ரினால்ட் கிவிட்டை தங்களது உடமையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற பேராவலை வளர்க்கும் ஒரு உண்மையான ஆஸ்பிரேஷனல் காராகவும்; கொடுக்கும் விலைக்கு சிறந்த மதிப்பைத் தரும் காராகவும் திகழ்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. முதல்முறை வாங்கும் வாடிக்கையாளர்களுடன் இணைந்து, புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் வெகுவாக உயர்வதை எங்களால் காணமுடிகிறது”, என்று வெளிப்படையாக தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க : கிவிட்டின் வெற்றியால் ரினால்ட் நிறுவனம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. [கிவிட்டின் விர்ச்சுவல் ஷோரூமைக் கண்டு மகிழுங்கள்]
ரினால்ட் கிவிட் 2015 – ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 24 ஆம் தேதி ரூ. 2,56,968 (டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை) என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இதுவே இந்தியாவின் மிகச் சிறந்த மைலேஜ் (25.17 kmpl) பெற்றுத் தரும் வாகனமாக உள்ளது. 2011 -ஆம் ஆண்டின் மத்தியில், 14 விற்பனை மற்றும் சேவை மையங்களை மட்டுமே பெற்றிருந்த ரினால்ட் இந்தியா நிறுவனம் அபரித வளர்ச்சி அடைந்து, தற்போது 180 மையங்களாக அதிகரித்து செவ்வனே செயல்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டிற்குள் 280 என்ற அளவில் விற்பனை மற்றும் சேவை மையங்களை எட்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரினால்ட் கிவிட் ஃபர்ஸ்ட் ட்ரைவ் விமர்சனத்தப் பார்வையிடலாம்
மேலும் வாசிக்க :
- ஸ்கோடா எட்டியின் விற்பனை 5,00,000 –ஐத் தொட்டது
- ஸ்கோடா சூப்பர்ப் மூன்றாவது ஜெனரேஷன் சீனாவில் அறிமுகம்
மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள: ரினால்ட் KWID விலை விபரம்
0 out of 0 found this helpful