• English
  • Login / Register

ரெனால்ட் க்விட்: ஒரு குழந்தை டஸ்டர்!

published on ஆகஸ்ட் 21, 2015 01:19 pm by அபிஜித் for ரெனால்ட் க்விட் 2015-2019

  • 17 Views
  • 12 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ரெனால்ட், தனது சிறிய காரான க்விட் காரை அறிமுகப்படுத்தி, எல்லாரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த காரின் 98 சதவீதத்தை உள்ளூரிலேயே தயாரித்ததால், விலை இலக்கை 3.5 இருந்து 4 லட்சத்திற்குள் அமையுமாறு அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இருந்தாலும், இந்த குறிப்பிட்ட பிரிவில் இவ்வளவு குறைந்த விலையில் நாம் கார்களை பயன்படுத்தியது இல்லை. ஏனெனில் ஆல்டோ 800, ஹூண்டாய் இயான், செவ்ரோலேட் ஸ்பார்க் ஆகியவை பார்வைக்கு சிறிய கார்களை போல தோன்றும் போது, க்விட் மட்டும் ஒரு கச்சிதமான SUV-யை நினைவுப்படுத்துகிறது. இந்த வேறுபட்ட சிந்தனைக்கு முக்கிய காரணம், இதன் மூத்த உடன்பிறப்பான டஸ்டர் ஆகும். மேலும், இந்தியாவில் ஒரு விரிவான ஆராய்ச்சிக்கு பிறகே, வாடிக்கையாளர்களால் கார்கள் வாங்கப்படுகிறது என்பதை தயாரிப்பாளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே கெவ்டு காரில் உள்ள வடிவமைப்பு கூறுகள் மற்றும் அது எப்படி டஸ்டர் உடன் ஒத்திருக்கிறது என்பதை காண்போம்.

வெளிப்புறம்

முதலாவதாக, மக்களின் தேவை என்ன என்பதை அறிந்த ஒரு சமர்ப்பணம் மிகுந்த அணியை ரெனால்ட் உருவாக்கி உள்ளனர். இந்தியாவிற்கு டஸ்டரை கொண்டு வரும் முன், அதை ஆயத்தப்படுத்தவும் இதேபோன்ற ஒரு அணியை உருவாக்கி இருந்தனர். ஆனால் டஸ்டரை போல இல்லாமல், நமக்கு மட்டுமின்றி முழு உலகிற்கும் கெவ்டு கார் முழுமையாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கியுள்ள பிரான்ஸ் நிறுவனம், ‘ஒவ்வொரு காருக்கும் அதிக கார்கள்’ என்ற அடிப்படை தத்துவத்தை மனதில் வைத்து கொண்டு கெவ்டு காரை, அதன் உண்மையான தோற்றத்தை விட உயர்வாக காட்சியளிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். டஸ்டரில் உள்ளது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வீல்களின் ஆர்ச்கள், ஒரு SUV-வை கம்பீர தோற்றத்தை உணர்த்தும் வலிமை மிகுந்த முன்பக்க முனைகள் (ஸ்ட்ராங் பிரென்ட் என்டு) ஆகியவை கொண்ட வெளிப்புற தோற்றம் டஸ்டரை நினைவுப்படுத்துகிறது. மேலும், வாகன உடல்வாகு (பாடி கிளட்டிங்), சதுர வடிவ ஹெட்லைட்கள் மற்றும் உயர் லோடிங் லிப் (வெளிப்படையாக) ஆகியவை கூட டஸ்டரையே நினைவுப்படுத்துகிறது.

உட்புறம்

டஸ்டரில் உள்ளது போலவே, பெரிய வின்டுஸ்கிரீன்களை கொண்டிருப்பதால், க்விட் காருக்குள் இருப்பவர்களுக்கு காற்றோட்டம் மிகுந்து ஆறுதலை கொடுக்கிறது. காருக்குள் இருக்கும் செட்ஆப் கூட டஸ்டரை போலவே மிக எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது. காருக்குள் ஈரபதம் குறைவாக இருப்பதால், பயன்படுத்துவோருக்கு மிக எளிதாக உணர முடிகிறது.

க்விட் காரை அறிமுகப்படுத்தி உள்ள ரெனால்ட், பலத்த சிறிய கார்கள் பிரிவில் நுழைந்துள்ள நிலையில், டஸ்டர் மூலம் பெற்ற வெற்றியை மறுபடியும் பெற வாய்ப்புள்ளது. இது தயாரிப்பாளருக்கு ஒரு புதிய வியாபார திட்டமாகவும் (கேம் சேஞ்சர்), நுகர்வோருக்கு ஒரு சிறந்த சிறிய காராகவும் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Renault க்விட் 2015-2019

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience